TamilSpy

பொழுது போக்கு இணையம்…

மகிந்தவின் அரசியலும் இராணுவ முரண்பாடுகளும்

மகிந்தவின் அரசியலும் இராணுவத்திற்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளும்.

அனைத்துலகத்தின் பார்வைகளின் மையப்புள்ளியாக முன்னர் மத்திய கிழக்கு வளைகுடா நாடுகளும், ஆபிரிக்கா நாடுகளும் திகழ்ந்தன. ஆனால் தற்போது சிறீலங்கா உருவெடுத்துள்ளது. கடந்த திங்கட்கிழமை (8) நூற்றுக்கணக்கான இராணுவத்தினர் கொழும்பின் மையப்பகுதியில் உள்ள எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் ஜெனரல் பொன்சேகாவின் அலுவலகத்தை சுற்றிவளைத்து அவரை கைது செய்தனர்.

பின்னர் வெளியில் நிறுத்தப்பட்டிருந்த இராணுவ கவசவாகனத்திற்குள் வைத்து தாக்கிய பின்னர் இனம்தெரியாத இடத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். காலிலும், மார்பிலும் காயமடைந்த பொன்சேகா, கடற்படைத் தலைமையகத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் துன்புறுத்தப்படுவதாக கொழும்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன. சிறீலங்கா அரசின் இந்த நடவடிக்கையானது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாகவே இருந்தபோதும் எதிர்த்தரப்புக்கும், அனைத்துலகத்திற்கும் பலத்த பின்னடைவாகும். கடந்த மாதம் 26 ஆம் நாள் தேர்தல் நிறைவுபெற்றதும், சிறீலங்கா அரசு முதலில் இராணுவகட்டமைப்புக்குள்ளும், பின்னர் காவல்துறை கட்டமைப்புக்குள்ளும் களையெடுப்புக்களை மேற்கொண்ட பின்னரே பொன்சேகா மீதான கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இதன் மூலம் பொன்சேகாவின் கைதினால் இராணுவத்திற்குள் ஏற்படும் முரண்பாடுகளை குறைப்பதற்கு அரசு முழு நடவடிக்கையையும் எடுத்திருந்ததது. சிறீலங்கா இராணுவத்தில் சேவையில் இருந்த பெருமளவான உயர் அதிகாரிகள் விலக்கப்பட்டது இது இரண்டாவது தடவை. 1999 ஆம் ஆண்டும் பெருமளவான களமுன்னணித் தளபதிகள் விலக்கப்பட்டனர். ஆனால் அப்போது படைத்துறை காரணங்கள் முன்வைக்கப்பட்ட போதும், தற்போது அரசியல் காரணங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏறத்தாக 40 இராணுவ உயர் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டதுடன், 208 காவல்துறை அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் அரசிற்கு எதிராக செயற்பட்டுள்ளனர் என்ற அரசியல் காரணங்களை முன்வைத்து சிறீலங்கா இராணுவத்தில் இருந்து 14 அதிகாரிகள் விலக்கப்பட்டுள்ளனர்.

இந்த அதிகாரிகளில் 5 மேஜர் ஜெனரல்கள், 5 பிரிகேடியர்கள், ஒரு கேணல், ஒரு லெப்.கேணல், இரண்டு கப்டன் தர அதிகாரிகள்உள்ளடங்கியுள்ளனர். 1992 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இராணுவச்சட்டத்தின் பிரகாரம் இராணுவத் தளபதி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். இவ்வாறு விலக்கப்பட்டவர்கள் ஓய்வுபெற விண்ணப்பிக்கலாம் அல்லது பதவியை விட்டு விலகலாம். அவ்வாறு விண்ணப்பம் செய்பவர்கள் பாதுகாப்பு செயலாளருடன் கலந்தாலோசித்து அதனை மேற்கொள்ளலாம். அரச தலைவர் தேர்தலின் பின்னர் விலக்கப்பட்ட அதிகாரிகள் வரு
மாறு:

மேஜர் ஜெனரல் ஜம்மிக்கா லியனகே – இராணுவ துணை படைக் கட்டளை அதிகாரி.

மேஜர் ஜெனரல் ராஜிதா டி சில்வா – பிரதம பாதுகாப்பு அதிகாரியின் உதவி அதிகாரி.

மேஜர் ஜெனரல் ஜயந்தா பெரேரா – சீனாவில் உள்ள தேசிய பாதுகாப்பு பயிற்சி கல்லுரியில் பயிற்சி பெற்றுக்கொண்டிருந்த சமயம் திருப்பி அழைக்கப்பட்டுள்ளார்.

மேஜர் ஜெனரல் சமந்தா சூரியபண்டாரா – முன்னாள் 53வது படையணியின் கட்
டளை தளபதி, தற்போது வாசிங்டனில் உள்ள சிறீலங்கா தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர்.

மேஜர் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்கா – இராணுவ தலைமையகத்தின் பிரதம அதிகாரி.
பிரிகேடியர் பிமல் டயஸ் – முல்லைத்தீவு மாவட்ட கட்டளைத் தளபதி.

பிரிகேடியர் துமிந்தா கெப்படிவலனா
– அம்பாறை மாவட்ட இராணுவ பயிற்சி கல்லு£ரி கட்டளை அதிகாரி.

பிரிகேடியர் ஜனகா மகோத்தி
– 22வது படையணியின் விநியோக இணைப்பதிகாரி.

பிரிகேடியர் அத்துலா ஹென்னெடிகே
– 22வது படையணியின் 1வது பிரிகேட்டின் கட்டளைத் தளபதி.

பிரிகேடியர் வசந்தா குமரப்பெருமா
– 55வது படையணியின் 3வது பிரி

கேட்டின் கட்டளைத் தளபதி. கேணல் திலக் உபயவர்த்தனா –
இராணுவக் காவல்துறை கட்டளை அதிகாரி.

லெப்.கேணல் எல்.ஜே.எம்.சி.பி.ஜெயசுந்தரா
– விஜயபா இலகுகாலாட்படை றெஜிமென்ட் பற்றாலியன் கட்டளை அதிகாரி.

கப்டன் ஆர் எம் ஆர் ரணவீரா
– விஜயபா இலகுகாலாட்படை றெஜிமென்ட் தாக்குதல் கொம்பனியின் கட்டளை அதிகாரி.

கப்டன் பி கிருசாந்தா
– தேசிய காவல்படை கொம்பனியின் கட்டளை அதிகாரி.

சிறீலங்காவின் வரலாற்றில் பெருமளவான படையினர் இராணுவத்தை விட்டு விலக்கப்படுவது இது இரண்டாவது தடவையாகும். 1999 ஆம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலைப்புலிகள் மேற்கொண்ட ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கையை தொடர்ந்து சிறீலங்கா இராணுவம் இராணுவ விசாரணைகளை மேற்கொண்டு பெருமளவான அதிகாரிகளை கட்டாய ஓய்வில் அனுப்பியிருந்தது. அன்றைய அரச தலைவர் சந்திரிகா குமாரணதுங்காவின் உத்தரவுக்கு அமை
வாக இராணுவத் தளபதி சிறீலால் வீரசூரியா அதனை மேற்கொண்டிருந்தார். இராணுவ நீதிமன்ற விசாரணைகளை மேற்கொண்ட அன்றைய இராணுவத்தின் தலைமை அதிகாரி லயனல் பலகல்ல, 7 மூத்த அதிகாரிகளை இராணுவத்தில் இருந்து நீக்கியிருந்தார். அன்று நீக்கப்பட்ட அதிகாரிகள் விபரங்கள் வருமாறு:

மேஜர் ஜெனரல் வசந்த பெரேரா
– வன்னி மாவட்ட கட்டளை தளபதி.

மேஜர் ஜெனரல் காமினி குணசேகரா
– 56வது படையணியின் கட்டளைத் தளபதி.

பிரிகேடியர் ரி எம் பொஹான்
– 55வது படையணியின் கட்டளைத் தளபதி.

கேணல் அதுலா லங்காதேவா
– 56வது படையணியின் 1வது பிரிகேட்டின் கட்டளைத் தளபதி.

மேஜர் பி.வி.யூ.சந்திரசிறீ

– சிறீலங்கா தேசிய பாதுகாப்பு காவல்படையின் 20வது பற்றாலியன் கட்டளை அதிகாரி.

மேஜர் மோரா முடலி
– கெமுனுவோச் 11வது பற்றலியின் பிரதி கட்டளைத் தளபதி.

மேஜர் எம் எ இலங்கசிங்கா
– சிங்க றெஜிமென்ட் 15வது பற்றாலியனின் கட்டளை அதிகாரி.

1999 ஆம் ஆண்டு வன்னி படை நடவடிக்கையில் ஏற்பட்ட தோல்விக்கு பொறுப்பானவர்கள் என்ற காரணத்தினால் மேற்கூறப்பட்ட அதிகாரிகள் இராணுவத்தில் இருந்து விலக்கப்பட்டனர். எனினும் அவர்கள் மீதான விசாரணைகள் நடத்தப்பட்டு அவர்கள் தமது வாதங்களை கூற அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் தமது தவறுகளை மறுத்த போதும் சந்திரிகாவின் உத்தரவுகளுக்கு அமைய அவர்கள் விலக்கப்பட்டனர். அப்போது விலக்கப்பட்ட இராணுவ அதிகாரிகள் தமது வாகனங்களை ஒரு மாதம் பயன்படுத்தவும், இராணுவ விடுதிகளில் தங்கியிருப்பதற்கு அவர்களுக்கு 3 மாதம் அவகாசமும் வழங்கப்பட்டிருந்தன. ஆனால் தற்போதைய நடவடிக்கைகள் மிகவேகமாக நடைபெற்றுவருவதுடன், அரசியல் பழிவாங்கல்களும், அச்சமுமே அதற்கான காரணங்களாக கூறப்படுகின்றன.

அரசியல் காரணங்களுக்காக பெருமளவான அதிகாரிகள் விலக்கப்பட்டுள்ள அதேசமயம், ஜெனரல் பொன்சேகாவின் விவகாரத்தில் அரசு அவர் மீது பின்வரும் பிரதான குற்றச்சாட்டுக்களை முன்வைக்க முனைந்துள்ளது.

‡ சீருடையுடன் அரசியல் பணிகளில் ஈடுபட்டது.

‡ அரச தலைவருக்கு எதிராக சதி செய்ய முற்பட்டமை.

‡ இராணுவத்தில் இருந்து தப்பிசென்ற 1,500 இற்கு மேற்பட்டவர்களுக்கு புகலிடம் அளித்தமை.

‡ ஆயுதக் கொள்வனவில் ஊழல்கள் புரிந்தமை.

இந்த குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் பொன்சேகா மீதான நடவடிக்கைக்கு அரசு தயாராக வருகின்றது. ஆனால் அதன் முக்கிய நோக்கம் வேறு. அதாவது எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதும், அரசியலில் இருந்து பொன்சேகாவை அகற்றுவதுமேயாகும். அதன் மூலம் சிறீலங்காவின் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று மகிந்த தனது சொந்த நாடாளுமன்றத்தை உருவாக்க முனைகின்றார் என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

ஆனால் எதிர்க்கட்சிகள் முற்றாக முடக்கப்பட்ட நிலையில், சிறீலங்கா சீனாவின் மற்றுமொரு பர்
மாவாக மாற்றம் பெறுவதை மேற்குலகம் அனுதிக்கப்போகின்றதா? என்பதில் தான் பொன்சேகாவின் எதிர்காலம் தங்கியுள்ளது. மேலும் இராணுவத்திற்குள் முரண்பாடுகளை தோற்றுவித்துள்ள மகிந்தவின் புதிய அரசியல் நகர்வு தென்னிலங்கையின் அரசியலின் உறுதித்தன்மைக்கு நீண்டகாலத்திற்கு அச்சுறுத்தலாகவே அமையும் என்பதையும் நாம் மறுக்க முடியாது.

வேல்ஸ் இல் இருந்து அருஷ்

நன்றி்:ஈழமுரசு

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*