TamilSpy

பொழுது போக்கு இணையம்…

சர்வதேச முரண்பாடுகளுக்குள் சிக்கியுள்ள இலங்கை அரசியல்

இலங்கையில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலுடன் தென்னிலங்கையில் தணிந்திருந்த தேர்தல் வன்முறைகள் ஒரு அரசியல் போராக தற்போது மாற்றம் பெற்றுள்ளன.

தேர்தல் நிறைவுபெற்ற ஜனவரி 26 ஆம் திகதி இரவு சினமன்லேக் ஆடம்பர விடு தியில் தங்கியிருந்த எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவை மேஜர் ஜெனரல் சுமித் மானவடு தலைமை யிலான ஒரு பற்றலியன் சிறப்பு படையணியினர் சுற்றிவளைத்ததைத் தொடர்ந்து ஆரம் பமாகிய அரசியல் முறுகல் நிலைகள் தற் போது உச்சத்தை எட்டியுள்ளன.
கடந்த திங்கட்கிழமை ஜெனரல் சரத்பொன்சேகா அவரின் அலுவலகத்தில் வைத்து இராணுவக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து தென்னிலங்கை அரசியலில் பரபரப்பு மேலும் அதிகரித்துள்ளது.

நூற்றுக்கு மேற்பட்ட இராணுவத்தின் சிறப்பு படையினர் அலுவலகத்தை சுற்றி வளைத்து நிற்க, மேஜர் ஜெனரல் மானவடு 15 இராணுவத்தினருடன் நேரிடையாக சென்று சரத் பொன்சேகாவை கைது செய் துள்ளதாக பொன்சேகாவுடன் கலந்துரையாட லில் ஈடுபட்டிருந்த ஜே.வி.பி தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ ரஷ்யாவிலும், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிர மசிங்க இந்தியாவிலும் நின்ற சமயத்தில் இந்த கைது நடவடிக்கை இடம் பெற்றுள்ளது.

சரத்பொன்சேகாவின் கைது நடவடிக்கை இலங்கையில் அரசியல் பதற்றங்களை ஏற் படுத்தியது மட்டுமல்லாது, இலங்கை அரசிற்கும் மேற்குலகத்திற்கும் இடையிலான விரிசல்களையும் மேலும் விரிவுபடுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாது, சரத் பொன்சேகா முன்னாள் இராணுவத் தளபதியாகவும், விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப் போரான நாலாவது ஈழப்போரை வழி நடத்தியவர் என்பதாலும், இராணுவத்தினர் மத்தியிலும் பொன் சேகாவின் கைது பல தாக்கங்களை உண்டு பண்ணக்கூடியது. எனினும் கடந்த 26 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நிறைவுபெற்றதில் இருந்து கடந்த 8 ஆம் திகதி பொன்சேகா கைது செய்யப்படும் வரையிலும் அரசாங்கம் இராணுவம் மற்றும் காவல்துறை கட்டமைப்புகளில் பாரிய மாற்றங்களை மேற் கொண்டிருந்தது.

அதன் பின்னரே பொன் சேகாவை கைது செய்துள்ளது. ஏறத்தாழ 40 இராணுவ உயர் அதிகாரி கள் இடமாற்றம் செய்யப்பட்டதுடன், 208 காவல்துறை அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டனர். மேலும் அரசிற்கு எதிராக செயற்பட்டுள்ளனர் என்ற அரசியல் காரணங் களை முன்வைத்து இராணுவத்தில் இருந்து 14 அதிகாரிகள் விலக்கப்பட் டுள் ளனர். இந்த அதிகாரிகளில் 5 மேஜர் ஜெனரல் கள், 5 பிரிகேடியர்கள், ஒரு கேணல், ஒரு லெப். கேணல், இரண்டு கப்டன் தர அதிகாரிகள் உள்ளடங்கியுள்ளனர். 1992 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இராணு வச் சட்டத்தின் பிரகாரம் இராணுவத் தளபதி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

இலங்கை இராணுவத்தில் சேவையில் இருந்த பெருமளவான உயர் அதிகாரிகள் விலக்கப்பட்டது இது இரண்டாவது தடவை. 1999 ஆம் ஆண்டும் பெருமளவான களமுன்னணித் தளபதிகள் விலக்கப்படடனர். ஆனால், அப்போது படைத்துறை காரணங்கள் முன்வைக்கப்பட்ட போதும், தற்போது அரசியல் காரணங்கள் முன்வைக் கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
1999 ஆம் ஆண்டு காலப்பகுதியில் விடு தலைப்புலிகள் மேற்கொண்ட ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கையை தொடர்ந்து இலங்கை இராணுவம் இராணுவ விசாரணைகளை மேற்கொண்டு பெருமள வான அதிகாரிகளை கட்டாய ஓய்வில் அனுப்பியிருந்தது.

அன்றைய ஜனாதிபதி சந்திரிகா குமார துங்கவின் உத்தரவுக்கு அமைவாக இராணுவத் தளபதி சிறிலால்வீரசூரிய அதனை மேற்கொண்டிருந்தார். இராணுவ நீதி மன்ற விசாரணைகளை மேற்கொண்ட அன்றைய இராணுவத்தின் தலைமை அதிகாரி லயனல் பலகல்ல 7மூத்த அதிகாரிகளை இராணுவத்தில் இருந்து நீக்கியிருந்தார். ஆனால், தற்போது இரா ணுவத்தின் முழு கட்ட மைப்பும் பெரும் மறு சீரமைப்புக்குட்பட்டுள்ளதுடன், தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டும் வருகின்றது.

எனினும் பொன் சேகாவின் கைதினைத் தொடர்ந்து கடந்த 10 மற்றும் 11ஆம் திகதிகளில் தென்னிலங்கையின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டப் பேரணிகள் நடத்தப்பட்டதுடன், அவை மோதல்களாகவும் வெடித்திருந்தன. இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் ஆயுத வன்முறைகளாக மாற்றம் பெறலாம் என்ற அச்சங்களும் தென்னிலங்கையில் தோன்றியுள்ளன. ஜெனரல் சரத் பொன்சேகாவின் விவகாரத்தில் அரசு அவர் மீது பின்வரும் பிரதான குற்றச் சாட்டுகளை முன்வைக்க முனைந்துள்ளது.

*இராணுவப் பதவிக் காலத்தில் அரசியல் பணிகளில் ஈடுபட்டது.

*ஜனாதிபதிக்கு எதிராக சதி செய்ய முற்பட்டமை.

*இராணுவத்தில் இருந்து தப்பிச்சென்ற 1,500 இற்கு மேற் பட்டவர்களுக்கு புகலிடம் அளித்தமை.

*ஆயுதக் கொள்வனவில் ஊழல்கள் புரிந்தமை.

இந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சரத் பொன்சேகா மீதான இராணுவ நீதி மன்ற நடவடிக்கைக்கு அரசு தயாராகி வருகின்றது. ஆனால், அதன் முக்கிய நோக்கம் வேறு அதாவது எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதும், அரசியலில் இருந்து சரத் பொன் சேகாவை அகற்றுவது மேயாகும் என்று எதிர்க் கட்சிகள் குற்றம் சுமத்துகின்றன. அதன் மூலம் இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெறும் ஆளும் தரப்பு பெரும் பான்மைப் பலம் கொண்ட நாடா ளுமன்றத்தை உருவாக்க முனைகின்றது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
ஆனால், எதிர்க்கட்சிகள் முற்றாக முடக்கப்பட்ட நிலையில், இலங்கை சீனாவின் மற்றுமொரு பர்மாவாக மாற்றம் பெறப்போகின்றதா என்ற அச்சங்களும் எழுப்பப்படுகின்றன.

இதனை மேற்குலகம் அனுமதிக்கப்போகின்றதா? என்பதில் தான் சரத் பொன்சேகாவின் எதிர்காலம் தங்கியுள்ளது. சீனாவைப் பொறுத்தவரையில் அண்டைய நாடுகளின் உள்விவகாரங்கள் குறித்து வெளிப்படையாக அது கருத்துகளை தெரிவிப்பதில்லை. பர்மா விவகாரத்திலும், அது இந்த உத்தியையே ஆரம்பத்தில் கடைப்பிடித்திருந்தது. பின்னர் பொருளாதார, உட்கட்டுமான, படைத்துறை ரீதியாக பர்மாவுடன் தனது நெருக்கங்களை வலுப்படுத்திய சீனா, அங்கு ஆதிக்கம் செலுத்திய இந்தியா உட்பட ஏனைய நாடுகளை வெளியேற்றியிருந்தது. அதன் பின்னர் பர்மாவின் நிலைகுறித்து சீனா வெளிப்படையாகவே கருத்துகளை தெரிவித்திருந்தது.

ஐ.நாவின் பாதுகாப்புச் சபையிலும் பர் மாவை காப்பாற்றும் நடவடிக்கைகளில் சீனா வும், ரஷ்யாவும் இணைந்து தமது வீட்டோ அதிகாரங்களை பயன்படுத்தியிருந்தன. தற்போது இலங்கையின் நிலையையும் மேற்குலக இராஜதந்திரிகள் அவ்வாறான தாகவே பார்க்கின்றனர். அண்மையில் சீன ஜனாதிபதியும், சீனாவின் வெளிவிவகார அமைச்சக பேச்சாளரும் இலங்கை குறித்து தெரிவித்த கருத்துகளும் சீனாவின் கொள் கைகளில் ஏற்பட்ட முக்கிய மாற்றமாகவே பார்க்கப்படுகின்றது. கடந்த இரு தசாப்தங்களாக மேம்பட்டுவரும் சீனாவின் பொருளாதார வளர்ச்சியும், பர்மாவின் தனிமைப்படுத் தலும் பர்மாவிற்கு சீனா முக்கியமானது என்ற நிலையை ஏற்படுத்தியிருந்ததாக ஹொங் கொங்கை தளமாகக் கொண்ட ஆசிய மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்திருந்தது.

சீனாவுக்கும், பர்மாவுக்கும் இடையிலான இந்த உறவுகள் பிரதானமாக வர்த்தக நலன் களை அடிப்படையாகக் கொண்டே உருவாக் கப்பட்டன. அதன் பின்னர் பர்மாவின் அரசியல், வெளிவிவகார செயற்பாடுகளில் சீன அதிக ஆதிக்கம் செலுத்தியிருந்தது. பர்மாவின் இராணுவ ஆட்சியாளருக்கும் சீனாவே பக்கபலமாக உள்ளது, சீனாவின் மக்கள் ஜனநாயக கட்டமைப்பில் எவ்வாறு அரசுக்கு எதிரானவர்கள் அடக்கப்பட்டார் களோ அதனைப் போலவே பர்மாவிலும் எதிர்க்கட்சிகள் முடக்கப்பட்டன. அதாவது ஆட்சிமாற்றத்தின் மூலம் தனது முதலீடுக ளும் உழைப்புகளும் வீணடிக்கப்படுவதை சீனா விரும்பவில்லை.

எனவே சீனா கால்பதிக்கும் நாடுகளில் எதிர்க்கட்சிகளின் இயக்கங்கள் முற்றாக நிறுத்தப்படுவதுண்டு என்பது மேற்குலக இராஜதந்திரிகளின் கருத்து. தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள நிலையை அவதானிக் கும் போதும் தமக்கு அத்தகைய அச்சங்கள் ஏற்படுவதாக அவர்களில் சிலர் தெரிவித் துள்ளனர். எனவே, மேற்குலகம் சீனா இந்தியா என்ற முக்கோண முரண்பாடுகளுக்குள் இலங்கையின் தென்னிலங்கை அரசியல் சிக்கியுள்ளது. இவற்றில் ஒரு தரப்பின் ஆளுமை வெல்லப்படலாம், மறுதரப்புக்கள் தமக்கு வேறு நண்பர்களை இலங்கையில் தேட முற்படலாம். அந்த நண்பர்களாக சிறுபான்மை தமிழினமோ அல்லது பெரும்பான்மை சமூகத்தின் எதிர்க்கட்சி கூட்டணியோ இடம்பெறலாம்.

நன்றி:வீரகேசரி

-வேல்ஸிலிருந்து அருஷ்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*