TamilSpy

பொழுது போக்கு இணையம்…

மரணத்துயர் சுமந்து மாறாத வேதனையோடு…

உயிர்தந்து எமைக்காத்த உத்தமன் புகழ்பாடி எம் நினைவுப்பதிவுகளை நெஞ்சினில் நிறுத்தி……..

யாழ் மாவட்டத்தில் துன்னாலை என்ற ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். புலம் பெயர்ந்து இலண்டனில் வசித்து வந்தவர். அகவை 27 உடைய முருகதாசன் சுவிட்சர்லாந்தில் ஐக்கிய நாடுகள் அவையின் முன்றலின் முன்பாக 2009, பெப்ரவரி 12 வியாழக்கிழமை இரவு 8:15 தொடக்கம் 9:45 நிமிடம் வரையான நேரத்துக்குள் இன அழிப்பில் இருந்து ஈழத்தமிழ் மக்களைக் காப்பாற்றக்கோரி தீக்குளித்து இறந்தார். இவர், 7 பக்கங்களுக்கு “உலக சமூகத்துக்கு தமிழினத்தின் சார்பில் என் ஆத்மார்த்த வேண்டுகோள்” என்ற தலைப்பில் ஒரு மரண சாசனம் எழுதி வைத்து விட்டு தீக்குளித்தார். ’முருகதாசன் வருணகுலசிங்கம்’ என்னும் தீக்குளித்த இளைஞரின் கனவுகள் மெய்ப்பட வேண்டும், விழலுக்கு இறைத்த நீராகிவிடக் கூடாது. என்பதே எமது வேணவாவாகும்.


என்றும் அவன் நிணைவுடன்……..

எங்களுக்காய் உயிர்தந்த உத்தமனே எங்கள் நெஞ்சமெலாம்

விடுதலைத் தீ மூட்டிய வடிவே ,வீதிக்கு வந்து சந்ததிகளெல்லாம்

சங்கநாதம் முழங்கவைத்த, முருகதாஸ் எனும் முன்னவனே..

உனை, மறத்தலென்பது.. முடியாது.? உனை நினைத்தலென்பது,

அழியாது,

ஜ்யனே.. ஆழிசூழ் உலகு உள்ளவரை அன்னை மண் உனை

மறவாது.

மாசிலாத்தலைவன் புகழ் உள்ளவரை உன்புகழும் அழியாது

எங்களுக்காய் எரிந்த நெருப்பே நீ மூட்டிய பெருநெருப்பால்

பேரலைபோல் புலம்பெயர் தேச்மெங்கும்,

புலிமறவர் சேனையென புறப்பட்டார் தமிழிளைஞர்

போய் வருக என உனக்கு விடை கொடுத்து

புதிய வரலாறு எழுதப் புறப்பட்டார்

முள்ளிவாய்க்காலில் எல்லாம் முடிந்து போனது என்று

எண்ணும் போது , இல்லை?

அது தொடக்கம் என தமிழீழத் தனியரசை நிறுவுகின்ற

தன்னாட்சி உரிமைக்காய்

தந்தை செல்வா சொன்னவற்றை தலைவன் வழி தொடர்ந்து

தமிழீழப் பணி முடிப்போம் எனும் வேள்வியை

மூட்டிய முருகதாசா…..

நீயும் எங்கள் கல்லறையின் காவிய நாயகனே

என்றும் எங்கள் இதயத்துள் நீ…..

நீ மூட்டிய தீயின் நினைவாய்…

1969ல் முன்னைய செக்கோசிலாவாக்கியாவின் மீது ஐக்கிய சோவியத் படைகள், ஆக்கிரமிப்பு யுத்தம் மேற்கொண்ட போது, ஜான் பால்க் ( Jahn Pallc ) எனும் இருபத்தியொரு வயதுக் கல்லூரி மாணவன் செக்கோசிலாவாக்கியாவின் தலைநகர் பாராக்காவில, தன்னுடலில் தீமூட்டித் தீக்குளித்து மாண்டு போகின்றான். அவனது தீயாகத்தில் ஐரோப்பாவும், உலகமும் அதிர்ந்து போகின்றது.

நாற்பது வருடங்களின் பின், அவனை நினைவு படுத்தும் வகையில் மற்றுமொரு தீக்குளிப்பு. சுவிற்சர்லாந்தின் ஜெனிவா நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் காரியாலயத்திற்கு முன்னால், தன் தாயகத்தின் துயர் சுமந்து தீக்குளித்து மாண்டு போகின்றான் முருகதாசன் எனும் தமிழ் இளைஞன். முருகதாசன் எனும் இளைஞனின் தியாகத்தை, ஒரு வரலாற்று நினைவாகப் பதிவு செய்கிறது ஒரு வெளிநாட்டு ஊடகம். அவன் மரணத்தின் பின்னால் உள்ள செய்தி என்ன ஆராய்ந்து சொல்கிறது பார்வையாளனுக்கு.

அவனது நினைவில் தொடங்கித் தொடர்கிறது சுவிஸ் அரச இத்தாலிய மொழித் தொலைக்காட்சியின் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்றான ‘ Falo ‘ நிகழ்ச்சியில் கடந்த 07ந் திகதி இரவு ஒளிபரப்பான ‘Era un giovane Tamil ‘ எனும் விவரணம். இந்த தியாக மரணத்தின் செய்தியறிந்து துயரமுறும் மற்றுமொரு தமிழ் இளைஞி நிதிலாவின் மன உணர்வுகளின் வழி தொடர்ந்து தொகுக்கப்டும் விவரணத்தில், முருகதாசனின் மறைவுச்செய்தி, அவர்கள் பெற்றோர், நண்பர்களின் , உளக்குறிப்புக்கள், ஒரே குடும்பத்தில் எட்டுப் பேர்களைப் பறிகொடுத்த புலம்பெயர் உறவுகளின் சாட்சியங்கள், புலம்பெயர் தமிழ்மக்களின் போராட்டங்கள், மனித உரிமை அமைப்புக்களின் அறிக்கைகள் எனப் பல குறிப்புக்களுடன் ஈழத்தமிழர் பிரச்சனை ஆராயப்படுகிறது.

ஒரு செய்தியாளனுக்கேகுரிய ஆய்வு, தகவல், உண்மை, என்னும் வகைகளில், நிறைவாகத் தொடர்கிறது விவரணம். செய்தியாளர் Dinorah Cervini யின் நேர்த்தியான தொகுப்பு, சுமார் ஒரு இலட்சத்துக்குமதிகமான இந்நிகழ்ச்சியின் பார்வையாளருக்கு, ஈழத்தமிழர் பிரச்சனை தொடர்பான ஒரு புரிதலை ஏற்படுத்த முனைகிறது என்பதில் சந்தேகமில்லை.

நன்றி: இன்போதமிழ்செய்தி

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Tamileelam News

Your email address will not be published. Required fields are marked *

*