TamilSpy

பொழுது போக்கு இணையம்…

இந்தியா என்ற பெரும் தேசத்திற்கு சிறுபான்மைத்

இந்தியா என்ற பெரும் தேசத்திற்கு சிறுபான்மைத் தமிழினம் வைத்த இராஜதந்திர பொறி.

சிறீலங்காவின் அடுத்த ஆறு வருடங்களுக்கான அரசியல் தலைவிதியை தீர்மானிப்பதற்கான தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில நாட்களே உள்ளன.

கடந்த டிசம்பர் 17 ஆம் நாள் அரச தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் கால எல்லை நிறைவடைந்த பின்னர் தென்னிலங்கை வன்முறைகளால் கொழுந்து விட்டு எரிகின்றது.
இதுவரையில் அங்கு நடைபெற்ற தேர்தல் முறைகேடுகள் மற்றும் வன்முறை சம்பவங்களின் எண்ணிக்கைகள் 700ஐ தாண்டிவிட்டன. இந்த தேர்தல் நிறைவுபெற்றதும் தனது பதவியில் இருந்து ஓடப்போகின்றேன் என சிறீலங்காவின் தேர்தல் ஆணையாளர் தயானந்தா திஸ்ஸநாயக்கா தெரிவிக்கும் அளவுக்கு அரச தரப்பு மேற்கொண்டுவரும் வன்முறைகள் உச்சத்தை தொட்டுள்ளன.

தென்னிலங்கையின் இந்த வன்முறைகளுக்கு மத்தியில் நாட்டில் மிகவும் அமைதியாக இருப்பது வடமாகாணம் தான் என தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களின் ஒன்றான கபே அமைப்பு கடந்த செவ்வாய்கிழமை (19) தெரிவித்துள்ளது.சிங்கள தேசத்தின் இந்த குத்து வெட்டுக்கள் தமிழ் தரப்புக்கு அனுகூலமானதே. அதனை மேலும் ஊக்குவிப்பதே அரசியல் இராஜதந்திரம் என்பதை தமிழர் தரப்பு மிகவும் துல்லியமாக கணக்கிட்டு அறிந்து கொண்டுள்ளது. அதனால் தான் சிங்கள தேசத்தின் பலவீனமான அரசியல் தலைவராக கருதப்படும் ஜெனரல் பொன்சேகாவை ஆதரிக்க பெரும்பாலான தமிழ் மக்களும், தமிழ் மக்களை நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் கூட்டணியான தமிழ் தேசிய கூட்டமைப்பும் தீர்மானித்துள்ளன.

ஆனால் மறைமுகமாக மகிந்த ராஜபக்சவின் மீள்வரவை ஊக்குவித்து வந்த இந்தியாவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் இந்த அறிவித்தல் ஒரு அதிர்ச்சி வைத்தியமாக அமைந்துவிட்டதாக கொழும்பு இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனவே தான் உடனடியாக தமிழ் தேசிய கூட்டமைப்பை அழைத்து இந்தியா பேச்சுக்களை மேற்கொண்டிருந்தது. சிறீலங்காவின் அரச தலைவராக ஜெனரல் பொன்சேகா வருவதை இந்தியா விரும்பவில்லை. அவருக்கு பாகிஸ்தானுடன் நெருங்கிய தொடர்புகள் உண்டு என இந்தியா போலியாக தெரிவித்து வருகின்ற போதும், உண்மையான நிலை அதுவல்ல. ஏனெனில் இந்தியாவும், பாகிஸ்தானும் நெருங்கிய நண்பர்களாக நின்றே ஈழத்தமிழ் மக்கள் மீதான போரை நடத்தியிருந்தன.

எனவே இந்தியா – பாகிஸ்தான் மோதல்கள் என்பது ஒரு உள்ளூர் அரசியல் சார்ந்து உருவாக்கப்பட்ட கருத்துருவாக்கமாகவே ஈழத்தமிழ் மக்கள் பார்க்கின்றனர். எனவே இந்தியா பொன்சேகாவை எதிர்ப்பதற்கான முக்கிய காரணம் மகிந்த ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டால் அவரின் ஆட்சியில் உள்ளவர்கள் மற்றும் அவரின் காலத்தில் பணியாற்றிய படை அதிகாரிகள் மீது மேற்கொள்ளப்படும் போர்க் குற்றச்சாட்டுக்களில் தானும் சிக்க நேரிடலாம் என்ற அச்சமே.
வன்னியில் நடைபெற்ற போரில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களில் இந்தியாவின் பங்களிப்பு கணிசமான அவில் உண்டு.

எனவே தான் சிறீலங்காவில் அப்பாவி தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் மேற்குலகமும், அனைத்துலக மனித உரிமைகள் அமைப்புக்களும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற போதும் உலகில் பெரிய ஜனநாயக நாடு என தம்பட்டம் அடிக்கும் இந்தியா மௌனம்காக்கின்றது.எனவே தான் மகிந்தாவின் மீள்வரவை எண்ணி இந்தியா தவம் கிடக்கின்றது. ஆரம்பத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பொன்சேகாவை ஆதரிக்க முன்வந்ததை தொடர்ந்து பெரும் பதற்றம் அடைந்த இந்தியா, ரணிலுக்கு அவசர செய்திகளை அனுப்பியதுடன், அவருடன் கலந்துரையாடியிருந்
தது. பாகிஸ்தானை முன்நிறுத்தி இந்தியா ரணிலை மிரட்ட மேற்கொண்ட முயற்சிகள் வெற்றிபெறவில்லை.

அதன் பின்னர் ஈழத்தமிழ் மக்களை ஏமாற்றி மகிந்தாவை மீண்டும் பதவியில் அமர்த்தலாம் என இந்தியா நம்பியபோது, தமிழ் தேசிய கூட்டமைப்பின் முடிவு இந்தியாவுக்கு அதிர்ச்சி மருந்தாக அமைந்துவிட்டது. ஈழத்தமிழ் மக்களை பொறுத்தவரையில் அவர்களின் முடிவு தெளிவானது, அதாவது ஏறத்தாள ஏழு கோடி தமிழ் மக்களை கொண்டிருந்த போதும் ஈழத்தமிழ் மக்களை மதிக்கவோ அல்லது அவர்களின் நிகழ்ச்சிநிரலுக்கு அமைவாக சிறீலங்கா மீது அழுத்தங்களை மேற்கொள்ள இந்தியா முன்வரவில்லை.எனவே இந்தியாவின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக செயற்பட வேண்டிய தேவை என்பது ஈழத்தமிழ் இனத்திற்கு இல்லை என்பதை மகிந்தவை நிராகரித்ததன் மூலம் தமிழ் மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்தியா சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இந்திய தேசிய கொங்கிரஸ் உறுப்பினர்களும், இந்திய உயர் அரச அதிகாரிகளும் பேச்சுக்களை நடத்தியதுடன், பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்கியது ஏன் என்பது தொடர்பில் மிக நீண்ட நேரமாக விளக்கங்களும் கேட்கப்பட்டன. மேலும் பொன்சேகாவை ஆதரிப்பது என்ற கூட்டமைப்பின் முடிவு தொடர்பில் இந்திய மத்திய அரசு மகிழ்ச்சி அடையவில்லை எனறே கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்
துள்ளன. இந்தியத் தரப்பை ஆட்கொண்டுள்ள அச்சம் ஒன்று தான். அதாவது பொன்சேகா அரச தலைவரானால் சிறீலங்கா அரசினால் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்
பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு முழுமையான ஒத்து
ழைப்புக்களை வழங்கலாம் என்பது தான்.

ஏற்கனவே டப்ளின் நகரில் நடைபெற்ற போர்க்குற்ற விசாரணைகள் சிறீலங்கா அரசிற்கு பாதகமான நிலையை எட்டியுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை முடக்
குவதற்கு இந்தியாவும் – சிறீலங்காவும் இணைந்து நடவடிக்கை எடுக்க தயாராகி வருகின்றன.
அதன் வெளிப்பாடாகவே சிறீலங்கா அரச தலைவரின் செயலாளர் லலித் வீரதுங்
காவின் கருத்தும் அமைந்திருந்தது. அதாவது கடந்த வருடம் மே மாதம் நடைபெற்ற இந்திய நாடாளுமன்ற தேர்தலில் இந்திய கொங்கிரஸ் கட்சிக்கு ஒரு அனுகூலமான நிலையை ஏற்படுத்துவதற்கே பாதுகாப்பு வலையத்தின் மீது மேற்கொண்டு வந்த கனரக பீரங்கிகளின் தாக்குதலை சிறீலங்கா இராணுவம் நிறுத்தியதாக அவர் தெரிவித்
தது இந்திய அரசை சங்கடத்தில் மாட்டியுள்ளது.

இந்திய கொங்கிரஸ் அதனை மறுத்துள்ள போதும், சிறீலங்கா அரசு தற்போது அதனை வெளியிடவேண்டிய தேவை என்ன என்பது குறித்து அவதானிகள் சந்தேகம்லூமூ]ஙிக்ஷி ¨[சூ…
தெரிவித்துள்ளனர். சிறீலங்கா அரசுக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அதிகரித்து வரும் அழுத்தத்தை இந்திய அரசின் உதவியுடன் சிறீலங்கா அரசு தகர்த்துவிட முயல்கின்றது என்பது சிலரது கருத்துக்கள். அதாவது போர்க்குற்ற விசாரணைகள் என்ற களத்திற்
குள் இந்தியாவை இழுத்து விடுவதால் மேற்குலகின் அழுத்தங்கள் குறைந்துவிடலாம் அல்லது தன்னைக்காப்பாற்றும் முயற்சியில் இந்தியா சிறீலங்காவையும் காப்பாற்றலாம் என்பது அரச தரப்பின் திட்டம்.

கடந்த வாரம் டப்ளின் நகரத்தில் நடைபெற்ற சிறீலங்கா அரசு மீதான போர்க்குற்ற விசாரணைகளை தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபைக்கான சிறீலங்காவின் நிரந்தர பிரதிநிதி பாலித கோகன்னா தெரிவித்த கருத்துக்களில் இருந்து சிறீலங்கா மீதான மேற்குலகத்தின் அழுத்தங்களை புரிந்து கொள்ளமுடியும்.அதாவது தமக்கு எதிராக அனைத்துலக சமூகம் செயற்
படவில்லை எனவும், மேற்குலகத்தின் சில நாடுகளே தமக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். எனினும் தமக்கு ஆதரவாக உள்ள நாடுகள் என அவர் குறிப்பிட்ட நாடுகளில் மேற்குலகத்தின் எந்தவொரு நாடும் இடம்பெற
வில்லை.

இந்தியா, சீனா, பாகிஸ்தான், ஈரான், ஆபிரிக்கா, நையீரியா என வலிமை மிக்க நாடுகள் தமக்கு ஆதரவாக உள்ளதாக கோகன்னா தெரிவித்துள்ளது சிறீலங்கா எவ்வாறான ஒரு அழுத்தத்தில் சிக்கி உள்ளது என்பதை தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளது.ஆனால், ஈழத்தமிழ் மக்களுக்கு எதிராக சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட மிருகத்தனமான மனித உரிமை மீறல்கள் மற்றும் படுகொலைகள், இனஅழிப்பு போன்றன தொடர்பாக கிடைக்கக்கூடிய சொற்பஅளவு நீதியையாவது பல பல ஆயிரம் மைல்கள் கடந்து டப்ளின் நகரில் தோண்டி எடுக்கலாம் என்ற நம்பிக்கையுடன் தமிழ் இனம் செயற்பட ஆரம்பித்துள்ளது.

மேற்குலகத்தின் இந்த முயற்சிகளுக்கு ஆதரவாக தமிழ் சமூகத்தின் நடவடிக்கைகள் அமைந்துள்ளதும், மகிந்தாவிற்கு எதிராக திரும்பியுள்ளதும் பேரினவாத சிறீலங்கா அரசுக்கு மட்டுமல்லாது, 1987 ஆம்ஆண்டில் இருந்து ஈழத்தமிழ் மக்களுக்கு அநீதிகளை இழைத்து வந்த இந்தியா என்ற பெரும் தேசத்திற்கும் ஒரு சிறுபான்மை இனம் வைத்த இராஜதந்திர பொறியாகவே கருதப்பட வேண்டும்.

-வேல்ஸ் இல் இருந்து அருஷ்

நன்றி:ஈழமுரசு

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*