TamilSpy

பொழுது போக்கு இணையம்…

எமது அன்பிற்கினிய தமிழ் உறவுகளுக்கு

எமது அன்பிற்கினிய தமிழ் உறவுகளுக்கு இலங்கைத் தமிழ் மாணவர் ஒன்றியம் விடும் தேர்தல் சம்மந்தமான அறிக்கை.

எமது உரிமைக்கான அகிம்சை, ஆயுத போராட்ட வரலாற்றில் சிங்கள அரச தலைவர்கள் ஒப்பந்தம் எனப்படும் நாடகத்தை ஆடுவார்கள் பின்பு அதை அவர்களே கிழித்தும் எறிவார்கள் இதுவே எமது உரிமைக்கான வரலாற்றுப் பயணம்.

அன்புள்ள எமது உறவுகளே இத்தேர்தல் தேசிய, சர்வதேச அளவில் நலிவடைந்திருக்கும் எம் இனத்தை அவதானிக்கின்ற புரட்சிமிக்க ஆரம்பமாய் இருக்கின்றது. ஆகவே நாம் கட்டாய வாக்குப் பதிவு செய்தாக வேண்டிய நிலை எமது அனைவர் முன்னும் உள்ளது. கடந்த தேர்தலிலே நாம் புறக்கணிப்பு செய்திருந்தோம் அதற்கு எமக்கான சிறந்த பலமாக தமிழீழ விடுதலைப்புலிகளின் பலம் எமக்கு அசைக்கமுடியாத உணர்வைக் கொடுத்தது, ஆனால் தற்பொழுது அது மௌனிக்கப்பட்டிருக்கும் வேளையில் நாம் கட்டாய வாக்குப்பதிவு செய்தாக வேண்டிய நிலையிலிருக்கின்றோம்.

இதற்கு எமக்கு இருக்கும் தெரிவு..

கௌரவ சிவாஜலிங்கம், சரத் பொன்சேகா, மஹிந்த ராஜபக்ச போன்றோர். இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையிலே யாரை ஆதரிப்பது என்ற குழப்பம் தோன்றமுடியும். இதற்காக

கௌரவ சிவாஜலிங்கம்

சிறந்த தமிழ் உணர்வுள்ள, அர்ப்பணிப்புள்ள எமது இனத்துக்கு உரித்தான தைரியம் மிக்க தலைவர். இருந்தும் இவ் இக்கட்டான சூழ்நிலைக்கு நாம் கௌரவ சிவாஜலிங்கத்துக்கு வாக்களித்தால் மஹிந்த ராஜபக்சவின் வெற்றி உறுதியாகிவிடும் இதற்காக நாம் வேறு தெரிவொன்றுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் காலத்தின் தேவையாய் எம் தலைமேல் உள்ளது.

மஹிந்த ராஜபக்ச

இவ் கொடுங்கோலன் தனது ஆட்சியிலே தமிழ் சிறார்கள், முதியோர், வைத்தியசாலை, வணக்கஸ்தலங்கள், எமது உரிமைப் போராட்ட வீரர்கள் என மனிதநேயமற்ற தடைசெய்யப்பட்ட குண்டுகள் தொடக்கம், சிறிய தோட்டாவரை கெண்டு சென்று எம் இனத்தை தடையம் இல்லாது கொன்று குவித்த மனிதநேயமற்ற மகா பாவி இறுதி இரண்டு நாட்கள் யுத்தத்தில் கூட 27 ஆயிரம் எம் உறவுகளைக் கொண்டொழித்தவன். சர்வதேசத்திலே தமிழர்களுக்கு உரிமை எனப்படும் உரிமை ;பிரச்சினை எதுவுமில்லை. புலிகளே போராடுகிறார்கள், அவர்கள் பயங்கரவாதிகள் எனப்படும் பரப்புரையை செய்து எமது உரிமைப்போராட்டத்துக்கு எதிராய் சர்வதேச வல்லாதிக்க நாடுகளை ஒன்றுசேர்த்து எம் உறவுகளைக் கொன்றொழித்த சர்வாதிகாரி.

இவனுக்கு நாம் வாக்களித்தால் எம்மேல் சுமத்தப்பட்ட, எம்மைக் கொன்றொழித்த, எம் உறவுகளை முள்வேலியிலடைத்த, எமது உரிமைகளை காக்கப் போராடிய வீரர்களை சிறையிலடைத்து வதைசெய்ததற்கு நாமும் உடன்பட்டவர்களாகிவிடுவோம். சர்வதேசத்துக்கு தான் தமிழர்களுக்கெதிராகச் செய்த அனைத்தையும் தமிழர்கள் வரவேற்கிறார்கள் எனப்படும் பிழையான பரப்புரையை சர்வதேச அளவில் பரப்பி போர்க்குற்றத்திலிருந்து விடுபடவும் இச்சந்தர்ப்பம் அமைந்துவிடும், இதுமட்டுமன்றி இவரால் கையாளப்படும் ஒட்டுக்குளுக்கள் எமது உரிமையையும், உடமையையும் தங்களது நலனுக்காக, பாதுகாப்பிற்காக விற்றுவிடுவார்கள்.

இவை தவிர இவ் ஒட்டுக்குழுக்கள் வடக்கு, கிழக்கிலே செய்துவரும் அநீதிகள் விஷேசமாக கப்பம் பெறல், தமிழ் வர்த்தக நிலையங்களைக் கொள்ளையிடல், பெண் பிள்ளைகளைக் கடத்தல் (மட்டக்களப்பு நகரில் கருணா குழுவினர் கடந்த வார இறுதியாக செய்திருந்தனர்), போன்ற சம்பவங்கள் அதிகரித்து எம்மினம் குட்டிச்சுவராகி நாதியற்றுப் போகின்ற நிலைக்குத் தள்ளப்படும். எனவே எம் உறவுகளே எமது தற்போதைய காலத்தின் கட்டாயத் தன்மை விரும்பியல்ல . சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஆகவே எமது அன்புள்ள உறவுகளே தங்களுக்குள்ள வாக்குரிமை சரத் பென்செகாவுக்கு வழங்கி எமது இனம் விழுவதையாவது தடுப்பதற்கு கைகோர்க்க உதவி புரியுமாறு வேண்டி நிற்கின்றோம்.

இலங்கைத் தமிழ் மாணவர் ஒன்றியம்,

23.01.2010

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*