TamilSpy

பொழுது போக்கு இணையம்…

தேர்தலில் வாக்களிக்க செல்லும் தமிழ் பேசும் மக்களுக்கு

சிறிலங்காவின் அரச தேர்தலில் வாக்களிக்க செல்லும் தமிழ் பேசும் மக்களுக்கு ஓர் பகிரங்க மடல்!

சிறிலங்காவின் அரச தலைவர் தேர்தல் திருவிழா களைகட்டியுள்ளது. ஒரு சில அரசியல் வாதிகளின் பணப்பைகள் நிரம்பி வழிகிறது. 1976ம் ஆண்டு வட்டுக்கோட்டை தீர்மானத்தை தொடர்ந்து நடாத்தப்பட்ட தேர்தலில் தமிழ் மக்கள் தாங்கள் ஒரு தனித்துவமான தாயகம்,

தேசியம், தண்ணாட்சி உடைய மக்களாக உள்ளமையை அங்கீகரித்து தருகிறோம் எனக்கூறி வாக்கு கேட்டவர்களுக்கே வாக்களித்தனர் என்றால் மிகையாகது, சிறிலங்காவின் அரச படைகளாலும், காடையர்களாலும் தலைநகர் கொழும்பு, மற்றும் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் வாழ்ந்த தமிழர்களின் சொத்துக்கள் திருடப்பட்டது அல்லது அழிக்கப்பட்டது, மூன்று இலட்சத்திற்க்கு மேல் அப்பாவி மக்களின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டது. மேலும் பல இலட்சம் மக்கள் ஊணமாக்கப்பட்டனர், முப்தேழாயிரத்திற்க்கும் அதிகமான விடுதலை வீரர்கள் வித்தாகியுள்ளனர்.

பத்து இலட்சத்திற்க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் சொந்த நிலத்தில் இருக்க முடியாமல் ஏதிலிகளாய் நிற்க்கின்றனர். விடுதலை புலிகள் என்றும், சந்தேக நபர்கள் என்றும், பயங்கர வாதத்திற்க்கு உதவியவர்கள் என்றும் பல குற்றச்சாட்டு பெயர்களில் சிறுவர்கள் முதல் வயோதிபர்கள் வரை பால் வேறு பாடின்றி, உண்ண உணவின்றி மாணம் காக்க மாற்று உடையின்றி பத்தாயிரத்திற்க்கும் அதிகமானவர்கள் சித்திரவதை முகாங்களில் வாழ்கின்றனர். இவர்கள் இனி இழக்க ஒன்றும் இல்லை என்ற நிலையில் தினம் தினம் செத்து பிழைத்துக்கொண்டு உயிரை மட்டும் பிடித்து வைத்துக்கொண்டுள்ளனர்.

ஆக அவர்கள் அனுபவித்துக்கொண்டிருக்கும் இந்நிலையிலும் சரி உயிர் விட்டுப்போன இலட்சாதி இலடசம் உயிர்களின் கனவு, நினைவு, எல்லாம் நிறைந்திருந்தது எமது வருங்கால சந்ததியினர் சுதந்திரமாக சுதந்திர இறைமையுள்ள தமிழீழ பூமியில் வாழ்வார்கள் என்பதே தவிர வேறெதும் இல்லை. இந்நிலையில் தமிழ் பேசும் மக்களை சரத் பொன்சேகாவிற்க்கு வாக்களிக்குமாறு கூறுகிறது கூட்டமைப்பு. அவர்கள் கூறும் ஆட்சி மாற்றத்தை விட சரத் பொன்சேகாவிற்க்கு எம் மக்கள் வாக்கு போட்டால் ஏற்படும் விபரீதம் மிக நீண்டதாக இருக்கு என்றால் மிகையாகாது.

“சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை நேரா நிரந்தவர் நட்பு.”

போன்ற திருக்குறளுக்கு ஒவ்வான நடத்தையை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு கொடுக்கம் சரத் நடாத்தினால் கூட்டமைப்பு என்ன செய்யும் என்று ஒரு இடத்திலையும் சொல்லவில்லை ஏன்? அது மட்டுமல்லாமல் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை உலகிற்க்கு எடுத்துக்காட்டுமுகமாக சுதந்திர தமிழீழத்திற்க்கான வாக்களிப்புகள் உலகலாவிய ரீதியில் நடாத்தப்பட்டுக்கொண்டிருக்கின்ற இன்றைய சூழலில் தமிழ் மக்களின் போராட்டம் நியாயமானது அது தமிழீழத்தை நோக்கியது என்று கூறுகின்ற சிவாஜிலிங்கத்திற்க்கு வாக்கு போடுங்கோ என்று சொல்வது சிலவேளைகளில் கூட்டமைப்பின் முடிவுகளை மீறி அவர் தன்னிச்சையாக எடுத்த முடிவின் காழ்புணர்ச்சி காரணமாக அமையலாம் ஆனால் விக்கிரமபாகு கருணரனவுக்கு போடுங்கோ பாரம் பரிய கட்சிகள் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழ் மக்களுக்கு பேரினவாத சிங்கள பௌத்த கொள்கையை மீறி எள்ளவும் தரமாட்டார்கள் அதைவிட தமிழரின் போராட்டம் நியாயமானது என்று சிங்கள பேரினவாத்திற்க்குள் இருந்து வாக்கு கேட்டவருக்கு வாக்கை போட்டு எமது அரசியல் அபிலாசைகளை மீண்டும் ஓர் தடவை உலகிற்க்கு உணர்த்துவோம் என கூட்டமைப்பு கூறாமல் விட்டது ஏன்?.

அது மட்டும் அல்ல எவர் வந்தாலும் எமது உரிமையை சரி என்று கூறுவோருக்கே வாக்களியுங்கள் என்று கூறாமல் விட்டது ஏன்? சிறிலங்காவினால் தமிழர் மேல் கட்டவிழ்த்து விடப்பட்ட இறுதி கட்ட போரில் கொல்லப்பட்ட உயிர்களுக்கும், அழிக்கப்பட்ட சொத்துக்களுக்கும், இழக்கப்பட்ட அங்கங்களுக்கும், அடைக்கப்பட்ட உடன்பிறப்புக்களுக்கும் தற்போதைய அரச அதிபர் மகிந்தாவும், அப்போதைய போர் தளபதி சரத்திற்க்கும், பாதுகாப்பு அமைச்சர் கோட்டபாயாவும் பொறுப்பு மிக்கவர்கள் ஆகின்றனர் என்பதில் மாற்றுகருத்திற்க்கு இடம் இல்லை என்றே தெரிகிறது. இதில் எப்படி எம் உறவுகளின் உயிரை கொண்டதில் போர் தளபதிக்கு சில வீதங்களே உண்டு என கூட்டமைப்பினர் கூறுகின்றனர்? உங்கள் கணக்கியல் விகிதாசார அடிப்படையில் நோக்கினால் ஆட்சியில் அரச சொத்துக்களை அனுபவிக்கின்ற குடும்ப அங்கத்தவர்கள் என்ற அடிப்படையில் மட்டுமே பொன்சேகா குறைந்த விகிதாசாரத்தை பெறுகிறாரே தவிர தமிழ் மக்களின் உயிர் உடமை அழிவுகளிலேயோ, தமிழ் மக்களுக்கு தீர்வு என்பதிலேயோ அல்லது அவர்களின் சமகால வாழ்வாதாரங்களிலோ விகிதாசாரத்தில் எந்த வித்தியாசமும் கிடையாது ஆக இருவரும் போர் குற்றவாளிகள் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என கூட்டமைப்பு கூறாது விட்டது ஏன்?

உலக நாடுகள் எல்லாம் புலம் பெயர் தமிழர்களால் நடாத்தப்படுகின்ற தமிழ் அமைப்புக்கள் சிறிலங்காவின் அரச தேர்தல் பற்றி மௌனித்திருப்பது ஏன்? தவறு நடந்த பின்னர் வருந்தாமல் உடனடியாக கற்றந்தோரை கூடி ஆலோசித்து சாதக பாதகங்களை வக்களிக்க இருக்கு மக்களுக்கு தெளிவுறுத்தாமல் விட்டது ஏன்? மேய்பான் இல்லாத மந்தைகளாக தமிழ் இனம் இன்று தத்தளிக்கிறது. ஊடகங்கள் ஊடக தர்மத்தை மறந்து செயற்படுவது ஒரு துர்பாக்கிய நிலையே. இது சிறிலங்காவில் உள்ள பாரம்பரிய பத்திரிகைகள், வானொலிகள் முதற்கொண்டு உலகம் பூராகவும் உலவும் இணையத்தளங்கள் வரை விதிவிலக்கு இல்லை என்றால் மிகையாகாது.

விடுதலை பற்றி அலசி அராயாமல் அரசியல் கட்சிகளுக்கு பிரச்சாரம் செய்வது போல் பல ஊடகங்கள் போல் உள்ளமையும் ஓர் வரலாற்று துரோகமே! அரச தேர்தல் தொடர்பாக அலசி ஆராயாமல் பல ஊடகங்கள் கூட்டமைப்பு கூறுவது சரி என ஆழவட்டம் பிடிப்பது ஏன்?

உலகம் எல்லாம் பரந்து வாழும் புலம்பெயர் தமிழர்கள் சொகுசு வாழ்கை வாழலாம், மகிழூர்தியில் சுற்றலாம் ஆனால் மனங்கள் ஏங்கி நிற்பது எப்படி எமது மண்ணில் தினம் தினம் சுதந்திரக்காற்றை சுவாசிக்க துடிக்கும் மக்களுக்கு விடுதலையை பெற்று கொடுப்பது என்பதே அந்த வகையில் இறுதிக்கட்ட போர் புலத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்க குளிரையும் பொருட்படுத்தாமல் மக்கள் வீதியில் இறங்கி போராடினார்கள் ஆனால் அந்த போரை தடுத்து நிறுத்தவோ? அல்லது உயிர் அழிவை தடுக்க முடியாமல் போனது துரதிஸ்ரவசமே ஆனாலும் புலம் பெயர் நாடுகளின் அழுத்தம் பயங்கரவாத்திற்க்குள் அடங்கிய அரசியல் ஆகியதும் உண்மை.

ஆனால் புலம் பெயர் நாடுகளில் என்னும் சட்டங்கள் சாகவில்லை. ஆக இன்று பல வழக்காடு மன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளது, ஏன் சமகாலத்தில் எம் கண் முன்னே நடைபெறும் பல வழக்குகள் சம்பவங்கள் நடைபெற்று பல வருடங்களின் பின்னர் தொடுக்கப்பட்ட வழக்குகள். பல வழக்காடு மன்றங்களுக்கு வந்திருக்கும் இதில் வாதியும் இறந்திருப்பான் பிரதி வாதியும் இறந்திருப்பான் ஆனால் வழக்கு நடைபெற்றிருக்கும் அதற்க்கு தீர்ப்பும் வந்திருக்கும். அதேபோல் எமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கும் வருங்காலங்களிலும் வழக்கு தொடரும் சார்த்தியங்கள் உண்டு.

நாளைய வழக்காடு மன்றங்களில் பொன்சேகாவை தமிழ்பேசும் மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர் ஆகவே அவர் குற்றவாளி இல்லை என கூறும் இழிநிலைக்குள் எம் வரலாறை தள்ளிவிடாதீர்கள்.

ஆகவே வரும் அரச தலைவர் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு குறுகிய கால அரசியலை பார்கிறதோ அல்லது பல நாடுகளின் அரசியல் அழுத்தால் இம்முடிவை எடுத்திருக்கலாம் என சந்தேகிக்க வைக்கிறது, எது எப்படி இருப்பினும் விடுதலை மக்களுக்கே வேண்டும் அரசியல் வாதிகளுக்கு அல்ல. நான்கு இலட்சம் உயிர்களையும் வாக்களிக்க முன் உங்கள் மனக்கண் முன் கொண்டு வாருங்கள். தமிழரின் போராட்டம் நியாயமானது என கூறுபவருக்கு வாக்களியுங்கள். அதுவே புலத்தில் உள்ளவர்கள் தமது விடுதலையை நேசித்து செய்யும் ஒரு பெறுமதி மிக்க வாய்ப்பாக வரலாறு கூறுவது மட்டுமல்ல இதுவே மக்கள் தீர்ப்பு, “மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு”.

பலரும் சிந்தித்து தமிழ் இன விடுதலை நோக்கி பயனிக்க வேண்டி சரவணையூர் கவியால் வரையப்பட்ட கட்டுரை.

நன்றி:உலகத் தமிழ் இனையம்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles
  • haritha says:

    hi
    very day i am watching u r web site

    January 23, 2010 at 09:23

Your email address will not be published. Required fields are marked *

*