TamilSpy

பொழுது போக்கு இணையம்…

நெருக்கடியில் ஐரோப்பா

கடந்த தசாப்தத்தின் ஆரம்பத்தில் மார்ச் 2000 த்தில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்கள் லிஸ்பன் மூலோபாயத்தை அறிவித்தனர். 2010க்குள் “ஐரோப்பாவை மிகப் போட்டித்தன்மைஇ இயக்கச் செறிவு நிறைந்த அறிவுத்தளத்தைக் கொண்ட பொருளாதார அலகாக உலகில் மாற்ற வேண்டும்இ நீடித்த பொருளாதார வளர்ச்சி மற்றும் கூடுதலான வேலைகள் மற்றும் சிறந்த சமூக இணக்கம் அடையப்பட வேண்டும்” என்று அதன் நோக்கம் இருந்தது. இது “முழு வேலை நிலைமைக்கான சூழ்நிலையை உருவாக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தில் வட்டார கூட்டிணைவுத்திறனை வலிமைப்படுத்தும்” என்று கூறப்பட்டது.

21ம் நூற்றாண்டின் இரண்டாம் தசாப்தம் ஆரம்பிக்கையில் போர்த்துகல் தலைநகரில் விளக்கிக் கூறப்பட்ட அபிலாசைகள் ஆவியாகி விட்டன. முழு வேலை என்பதற்குப் பதிலாக ஐரோப்பா வெகுஜன வேலையின்மையினால் பீடிக்கப்பட்டுள்ளது; பொருளாதார வளர்ச்சிக்கு மாறாக தேக்கம் ஏற்பட்டுள்ளது; கூட்டிணைவுத்திறனுக்கு பதிலாக உடன்பாடின்மை ஏற்பட்டுள்ளது. லிஸ்பனின் உயர் திட்டங்களுக்கு அஸ்திவாரமாக இருந்த பொது நாணயம்கூட கடும் நெருக்கடியின் ஆபத்தில் உள்ளது.

லிஸ்பன் மூலோபாயம் ஐரோப்பிய ஒன்றிய விரிவாக்கம் ஆழ்ந்த ஒருங்கிணைப்பு மூலம் ஐரோப்பா அமெரிக்காவிற்கு இணையாக வந்துவிடும் ஏன் ஒரு பெரிய சக்தி என்னும் முறையில் அதைக் கடக்கவும் கூடும் என்ற பரந்த பிரமைகளின் வெளிப்பாடுதான். இது முந்தைய காலத்தில் இருந்த சமூக பதட்டங்கள் அரசியல் இராணுவ பூசல்கள் இல்லாத ஒரு ஒன்றுபட்ட ஐரோப்பிய பொருளாதார சக்தியின் விளைவாக ஏற்படும் என்று கருதப்பட்டது.

இந்தப் பிரமைகள் அப்பொழுது ஜேர்மனிய வெளியுறவு மந்திரியாக இருந்த Joschka Fischer (பசுமைக் கட்சி) மே 2000 த்தில் பேர்லின் Humboldt University -ல்நிகழ்த்திய உரையில் தெளிவான வெளிப்பாட்டைக் கண்டது. ஐரோப்பிய ஒன்றியம் தளர்ந்த நாடுகளின் கூட்டு என்பதில் இருந்து ஒரு கூட்டமைப்பாக மாற வேண்டும் என்று திவீளலீமீக்ஷீ அழைப்பு விடுத்தார்.

“தங்கள் முக்கிய நலன்களை ஒருங்கிணைத்து தேசிய இறைமை உரிமைகளை நாட்டிற்கும் அப்பாற்பட்ட ஐரோப்பிய நிறுவனங்களுக்கு மாற்றுவதின் மூலம்” ஐரோப்பிய நாடுகள் 1945க்கு முன்னர் கண்டத்தை சிதறடித்த தேசிய பூசல்களை நிராகரிக்கின்றன என்று அடையாளம் காட்டும் என்றார் பிஷ்ஷர். இவ்விதத்தில்தான் ஐரோப்பா “உலகப் பொருளாதார அரசியல் போட்டியில் அதன் உரிய பங்கைக் கொள்ள முடியும்” என்றார்.

அப்பொழுது முதல் ஐரோப்பா ஒரு முதலாளித்துவ முறையில் இணக்கமாக அமைக்கப்படும் என்ற பிஷ்ஷரின் கருத்து பகற்கனவாயிற்று. பாரிஸ் இன்னும் குறிப்பாக லண்டனில் அவருடைய திட்டம் ஐரோப்பாவை பேர்லினின் ஆணைக்கு உட்படுத்தும் வகையில் உள்ளது என்று விளக்கம் காணப்பட்டது. ஐரோப்பிய ஒன்றியம் கிழக்கு ஐரோப்பாவை இணைத்து பெரிதுபடுத்திக் கொண்டதும் இரட்டை கூர்மை உடைய கத்தியாக போயிற்று. உள் சந்தை விரிவாக்கத்தை கொண்டுவந்தது மட்டும் இல்லாமல் அது அரசியல் பூசல் உறுதியற்ற தன்மை ஆகியவற்றையும் கொண்டுவந்தது.

2003ல் அமெரிக்க ஈராக்கை தாக்கியதன் மூலம் ஐரோப்பாவை பிரித்தது. பிரிட்டிஷ் மற்றும் போலந்து அரசாங்கங்கள் போரை ஆதரித்தபோது ஜேர்மனியும் பிரெஞ்சும் அதை எதிர்த்தன. அமெரிக்க நிர்வாகம் பூசலைப் பயன்படுத்தி “பழைய” “புதிய” ஐரோப்பாக்களுக்கு இடையே பிளவை ஏற்படுத்தியது.

பிஷ்ஷரின் கருத்தாய்வில் எஞ்சி நின்ற ஐரோப்பிய அரசியலமைப்பு 2005ல் பிரெஞ்சு டச்சு வாக்காளர்களால் தோற்கடிக்கப்பட்டது; அவர்கள் அதை ஐரோப்பிய மக்களை ஐரோப்பாவின் மிகச் சக்திவாய்ந்த நிதிய பொருளாதார நலன்களுக்கு தாழ்த்தும் முயற்சி என்று சரியாக விளக்கம் கண்டனர். பல ஆண்டுகள் தூதரக மற்றும் அரசியல் இழுபறிக்கு பின்னர் ஐரோப்பிய அரசியலமைப்பின் அடிப்படை வடிவமைப்பு லிஸ்பன் ஒப்பந்தம் என்ற பெயரில் நடைமுறைக்கு வந்தது. ஆனால் அதற்குள் பேர்லினும் பாரிஸ§ம் பெரிதும் அக்கறை இழந்துவிட்டன. இது இரு முக்கிய பதவிகளுக்கான குழுத் தலைவர் மற்றும் ஐரோப்பிய வெளியுறவு மந்திரி பதவிகளைப் பொறுத்தவரையில் இரண்டாம் தர நபர்களை அதிகாரமின்றி நியமித்ததின் மூலம் நிரூபணம் ஆயிற்று.

நிக்கோலோ சார்க்கோசி மற்றும் அங்கேலா மேர்க்கெல் அதிகாரத்திற்கு வந்ததில் இருந்து பிரான்ஸம் ஜேர்மனியும் இன்னும் கூடுதலான சுதந்திரமான வெளியுறவுக் கொள்கைக்கு மாறின; அமெரிக்காவிடம் வலுவான குறிப்பைக் காட்டின. 2005ல் ஜேர்மனிய அதிபர் ஹெகார்ட் ஷ்ரோடர் (சமூக ஜனநாயகக் கட்சி) முன்கூட்டியே அதிகாரத்தில் இருந்து நீங்கிவிட்டார்; ஏனெனில் மற்றவற்றுடன் அவருடைய ரஷ்ய சார்பு வெளியுறவுக் கொள்கை பெருகிய முறையில் அவர் தனிமைப்படுத்தப்பட காரணமாயிற்று. ஆனால் வாஷிங்டன் ஐரோப்பிய நலன்களில் பெருகிய முறையில் கவனம் காட்டும் என்ற நம்பிக்கை நிறைவேறாமல் போயிற்று; புஷ்ஷில் இருந்து ஒபாமா ஜனாதிபதி பதவியை பெற்ற பின்னும் இந்நிலைதான் தொடர்ந்தது.

சர்வதேச நிதிய மற்றும் பொருளாதார நெருக்கடி இப்பொழுது ஐரோப்பிய உள்நாட்டு வெளிநாட்டுக் கொள்கைகளில் தீர்க்கப்படாமல் இருந்த அனைத்து முரண்பாடுகளையும் பகிரங்கமாக கொண்டுவந்துவிட்டது. உலக அரங்கில் பெருகிய முறையில் மேலாதிக்கம் கொண்டிருக்கும் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே நடக்கும் போட்டியில் ஐரோப்பா விளிம்பிற்கு தள்ளப்பட்டு சிதறும் தறுவாயில் உள்ளது.

ஜேர்மனிய பிரெஞ்சு அரசாங்கங்கள் நேட்டோ நட்பு நாடுகளை முன்கூட்டியே கலந்து ஆலோசிக்காமல் வாஷிங்டன் ஆப்கானிய போரை மகத்தான முறையில் விரிவாக்கம் செய்ய முடிவு எடுத்தது பற்றி கசப்பு உணர்வு கொண்டுள்ளன. ஒருபுறம் அவை மூலோபாயம் நிறைந்த பகுதியை அமெரிக்காவின் முழுச் செல்வாக்கின்கீழ் விட்டுவிட விரும்பவில்லை; மறுபுறமோ போர் இன்னும் விரிவானால் தாங்கள் அமெரிக்காவின் கையாட்கள் போல் ஆக நேரிடும் என்று அஞ்சுகின்றன. கோப்பன்ஹேகன் தட்பவெப்பம் மாறுபடல் உச்சிமாநாட்டின் தோல்வி அமெரிக்க சீன அரசாங்கங்களின் செயல் என்று ஐரோப்பா கூறியுள்ளது சீற்றத்தை இன்னும் அதிகரித்துள்ளது.

ஐரோப்பிய பொருளாதாரத்தின் இயல்பான வலுவற்ற தன்மையையும் பொருளாதார நெருக்கடி அப்பட்டமாக காட்டியுள்ளது. கிரேக்கம் அயர்லாந்து இத்தாலி போர்த்துகல் மற்றும் ஸ்பெயின் நாடுகளின் பெரும் வரவு-செலவு திட்ட பற்றாக்குறைகள் யூரோவின் முதுகை முறிக்கும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளன. இதுவரை பொது நாணயமுறை பெரும் மதிப்புக் குறைப்பையும் அதையட்டி பணவீக்கத்தின் ஏற்றத்தையும் தடுத்துள்ளது; ஆனால் யூரோவின் உயர்மதிப்பு ஏறும் வட்டி விகிதத்துடன் சேர்ந்து யூரோப் பகுதி நாடுகளை தடையற்ற சந்தை அடிப்படையில் நெருக்கடியைக் கடக்க இயலாமல் செய்துள்ளன. இதற்கு விடையிறுக்கும் வகையில் பிரஸ்ஸல்ஸ் அரசாங்க செலவினங்கள் குறிப்பாக சமூக நல செலவுகளில் கடுமையாகக் குறைக்கப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது.

யூரோப்பகுதியில் உறுப்பினராக இல்லாத பிரிட்டன் பெருகிய முறையில் ஐரோப்பாவின் நோயாளி நாடாக மாறிவருகிறது. இதன் பொருளாதாரம் மிக அதிகம் நிதியத் துறையை நம்பியுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் இங்கிலாந்தில் உற்பத்திப் பிரிவு வேலைகள் 30 சதவிகிதம் சரிந்துள்ளன. இதே காலத்தின் ஜேர்மனியிலும் பிரான்சிலும் சரிவு மிகக் குறைவாக முறையே 5 -10 சதவிகிதமாக உள்ளன. நிதியத் துறையை சரிவில் இருந்து மீட்பதற்கு பிரிட்டிஷ் அரசாங்கம் மிகப் பரந்த அளவில் கடன் வாங்கியுள்ளது. பவுண்டின் மதிப்பும் இதையட்டி வீழ்ந்துள்ளது. மற்றொரு வங்கி நெருக்கடி என்பதுஇ நாட்டுக் கடனில் தவணைகளில் தாமதத்தை இங்கிலாந்து காட்டுமோ என்ற அச்சத்தை எழுப்பியுள்ளது.

ஜேர்மனியை பொறுத்தவரையிலும் சற்று குறைந்த தன்மையில் பிரான்ஸைப் பொறுத்தவரையிலும் அவற்றின் ஒப்புமையில் வலிமையுடைய பொருளாதாரமே தலைவலியைக் கொடுத்துள்ளது ஜேர்மனியில் தொழில்துறை உற்பத்தி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவிகிதம் என்ற முறையில் அமெரிக்காவில் இருப்பதைப் போல் இரு மடங்கு ஆகும். ஜேர்மனிய தொழில்துறை உற்பத்தியின் ஒப்புமையிலான வலிமை ஜேர்மனிய ஏற்றுமதிகளில் உள்ள மகத்தான ஏற்றத்துடன் பிணைந்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் ஜேர்மனியின் ஏற்றுமதிக்கான உற்பத்தி நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 20ல் இருந்து 47 சதவிகிதம் என்று உயர்ந்துள்ளது. சீனாவின் ஏற்றுமதிகள்கூட அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 36 சதவிகிதம்தான் உள்ளது.

தொழில்துறை ஏற்றுமதியில் அதிக நம்பிக்கை வைத்துள்ளது ஜேர்மனியை குறிப்பாக சர்வதேச பொருளாதார நெருக்கடியின் பாதிப்பால் வலிமையற்ற நிலைக்குத் தள்ளியுள்ளது. கடந்த ஆண்டு பொருளாதார உற்பத்தி 5.3 சதவிகிதம் குறைந்தது; பொறியியல் துறை உற்பத்தி இப்பொழுது அதன் திறனில் 70 சதவிகிதமாகத்தான் உள்ளது. வல்லுனர்களின் கருத்துப்படி முன்னேற்றத்திற்கு வாய்ப்புக்கள் மிகக் குறைவு ஆகும்.

அமெரிக்க சீன நாடுகளின் தன்மையினால் ஜேர்மனிய ஏற்றுமதி தொழில் இப்பொழுது மகத்தான அழுத்தத்தில் உள்ளது. அமெரிக்கா குறைந்த டாலர் மதிப்பு அதன் குறைந்த ஊதியத் தரங்களை பயன்படுத்தி அமெரிக்க கார்த் தொழிலை மிருகத்தனமான முறையில் மறு கட்டமைத்து ஐரோப்பிய போட்டியாளர்களுக்கு எதிராக போட்டி நலனை அடைய முற்பட்டுள்ளது. இவ்விதத்தில் அடையாளமாக இருப்பது உற்பத்தியில் பகுதி மாற்றம் மெர்சிடெஸ் ஷி- வகுப்பு ஜேர்மனியில் இருந்து அமெரிக்காவிற்கு மாற்றப்பட்டுள்ளதில் இருந்து தெரியவரும். தன்னுடைய பங்கிற்கு சீனா இப்பொழுது ஒருகாலத்தில் ஜேர்மனியின் சிறப்பு அம்சமாக இருந்த சந்தைப் பிரிவுகளைக் கொண்டுள்ளது; இதற்குக் காரணம் அவற்றின் உயர்ந்த தரங்கள் ஆகும்.

ஐரோப்பிய ஜேர்மனிய உயரடுக்குகள் கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் அவை செய்தது போல் இந்தப் பெருகிய பிரச்சினைகள் முரண்பாடுகளை எதிர்கொள்ளுகின்றன. அதாவது பெருகிய இராணுவவாதத்தின் மூலம் தொழிலாள வர்க்கத்தின் மீதான சமூக அரசியல் தாக்குதல்களை நடத்துதல் ஆகும் .

பல அரசாங்கங்களும் முடங்கியிருப்பது போல் தோன்றுகிறது; ஏனெனில் பெருகிய வெளியுறவு கொள்கை பிரச்சினைகள் மற்றும் உட்பூசல்கள் உள்ளன. பேர்லினில் உள்ள கிறிஸ்துவ ஜனநாயக-சுதந்திர ஜனநாயக அரசாங்கம் நவம்பர் மாதம் பதவிக்கு வந்ததில் இருந்து உட்பூசல்களில் ஆழ்ந்துள்ளது. அதிபர் மேர்க்கெல் அனைத்துப்புறங்களில் இருந்தும் உறுதியற்ற தன்மை வலுவற்ற தலைமை என்ற தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார். ஆனால் திரைக்குப் பின்னால் புதிய ஆட்சிக் கருவிகளுக்கான ஆழ்ந்த தேடுதல் நடைபெறுகிறது; அது பொருளாதார நெருக்கடியின் சுமையை தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்தும் விளைவுகளை எளிமைப்படுத்தும்; ஏனெனில் சமூக சமரச வழிவகைகள் பெரிதும் தீர்ந்துவிட்டன.

இந்தப் பின்னணியில்தான் ஜனநாயக உரிமைகள் தான தாக்குதல் தீவிரப்படுத்தப்படுகிறது; பயங்கரவாதத்தாக்குதல்கள் பற்றி அச்சம் வளர்க்கப்படுகிறது முஸ்லிம் எதிர்ப்பு உணர்வுகள் தீவிரமாகின்றன. இத்தகைய பிற்போக்கு முயற்சிகளில் முன்னணியில் இருப்பது ஜேர்மனிய சமூக ஜனநாயக வாதிகள் Thilo Sarrazin, முன்னாள் சோசலிஸ்ட் கட்சி அரசியல் வாதியும் தற்போதைய பிரெஞ்சு குடியேற்றப் பிரிவு மந்திரி எரிக் பெசோனும் ஆவர். மசூதி கோபுரம் கட்டுவதற்கு எதிராக சுவிஸ் வாக்கெடுப்பு ஆதரவு கொடுத்தது இந்த வட்டங்களால் தீவிரமாகக் கவனிக்கப்பட்டு பரிவுணர்வுடன் காணப்படுகின்றன. இத்தகைய நடவடிக்கைகள் வர்க்கப் பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திருப்பி வலதுசாரி மத்தியதர வர்க்கத்தின் அடுக்குகளை திரட்டி தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக ஒரு கட்டத்தில் செயல்படுத்த இருப்பதை பிரதிபலிக்கின்றன.

உழைக்கும் மக்கள் முதலாளித்துவ வாதிகளின் ஐரோப்பிய திட்டங்களின் தோல்வியில் இருந்து தங்கள் முடிவுகளை பற்றி எடுக்க வேண்டும். ஐரோப்பிய தொழிலாளர்கள் ஒன்றுபட்டு தங்கள் சமூக அரசியல் நலன்களைக் காக்க முன்வர வேண்டும். ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரகள் என்ற பதாகையின்கீழ் ஒரு சோசலிச ஐரோப்பாவை நிறுவ அவர்கள் போராட வேண்டும்.

Peter Schwarz சுவிஸ் ஊடகம் மூலம் (சோசலிச இணயத்தளம்)

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*