TamilSpy

பொழுது போக்கு இணையம்…

போர் குற்றங்களும் மனிதநேயத்திற்கெதிரான குற்றங்களும்

போர் குற்றங்களும் மனிதநேயத்திற்கெதிரான குற்றங்களும், நீதி கேட்கும் தமிழினம்.

உலக சரித்திரத்தில் ஒரு இனமக்களின் மேல் ஏவப்பட்ட குற்றங்கள் பல. ஆர்மேனியா மக்களின் இன அழிப்பு இன்று பல் வேறு நாடுகளில் பல்வேறு பாராளுமன்றங்களில் பேசப்படுகின்றது.

லிபேரியா, றுவண்டா நாடுகளில் அந்தந்த அரசுகள் தம் நாட்டு மக்களின் மேல் ஏவிவிடப்பட்ட பயங்கரவாதம் உலக நீதி மன்றங்களில் நீதி வழங்கப்படுகின்றன. Cambodgevil 30 வருடங்களுக்கு முன் நடந்த இன அழிப்பு இன்று சர்வதேச நீதி மன்றங்களில் குற்றவாளிகள் விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றனர். 2000 வருடங்களுக்கு முன் ஒரு இன அழிப்பால் தாம் வாழ்ந்த நிலத்திலிருந்து உலகம் முழுவதும் புலம் பெயர்ந்த யூத மக்கள் 2ம் உலகப்போரில் ஏற்பட்ட இன அழிப்பால் தமக்கு என்று ஒரு நாடு தேவை என்று கருதி அதற்காகவே போராடி பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியை தமது தாய்நிலமாக நீரூபித்து தமக்கென்று ஒரு நாட்டை உருவாக்கிக்கொண்டார்கள்.

இன்று கூட யூதமக்களுக்கு கெதிராக இழைக்கப்பட்ட இனப்படுகொலைக்கு பதில் சொல்லும் முகமாக குற்றவாளிகள் தேடப்பட்டு தண்டிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அதே நேரத்தில் இஸ்ரேல் பாலஸ்தீன் மக்களுக்கு கெதிராக காசாவில் ஏவி விடப்பட்ட இராணுவ கொடூரத்தால் 1000 க்கு மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டதையொட்டி சட்டத்திற்கு புறம்பான ஆயுதங்களை பாவித்தார்கள் என்று விசாரணை செய்யப்பட்டு போர் குற்றத்திற்கான அத்தாட்சிகளுடன் அதை உலக நீதி மன்றங்களுக்கு முன் கொண்டு வர காத்திருக்கின்றார்கள். அதே நேரத்தில் புலம்பெயர்ந்து வாழும் பாலஸ்தீன மக்கள் தமது உறவினர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கெதிராக தாம் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் இஸ்ரேல் நாட்டு இராணுவம் மற்றும் ஆட்சியாளர்களுக்கெதிராக குற்றப்பத்திரிகைகளை சமர்ப்பித்து இஸ்ரேல் நாட்டுக்கு இன்னல்களை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றார்கள்.

ஒரு இன மக்களின் மேல் இன்னொரு இன மக்களால் அவர்களின் வாழ்வுரிமைக்கு இன்னல்கள் இடையூறுகள் அவர்களுக்குள் எதிரான தடங்கல்களை விதித்து கலை, கலாச்சார கல்வி வாழ்வுரிமைக்கு தடங்கல் ஏற்பட்டு அது அவர்களின் சொத்து அழிப்பும், கொலைகள், கற்பழிப்பு ஆட்கடத்தல், சட்டத்தால் தடைசெய்யப்பட்ட ஆயுங்களை பாவித்து ஒரு இனத்தை அழிக்கப்படும் போது அது இனப்படுகொலை மனித நேயத்திற்கொதிரான குற்றமாகவும் போர்க்குற்றங்களாகவும் உறுதி செய்யப்படும்.

இலங்கையில் 1917ம் ஆண்டு இடம் பெற்ற இனப்படு கொலைகளிலிருந்து 1948 ம் ஆண்டு 1மில்லியன் மலையகத்தமிழரின் குடியுரிமைகளை பறித்து அவர்களை நாடு கடத்தியதிலிருந்து ( இன்று கூட 70000 ஆயிரத்திற்கு மேற்பட்ட இந்தியா வம்சாவளி தமிழர்களுக்கு வாழ்வுரிமையை வழங்கப்படாமல் இருப்பதை கருத்திற் எடுத்துக்கொண்டும் ) தமிழர்களின் விளைநிலங்களை சுவீகரித்து அதில் சிங்கள மக்களை குடியமற்றியதிலிருந்து கல்வியில் இன ரீதியாக தராதரத்தையேற்படுத்தி பாகுபாடுகளை காட்டியதிலிருந்து பல்மொழி, பல்சமயம் பேசும் கிறிஸ்தவ. இந்து சமயத்தலங்கள் அழிக்கப்பட்டன. அதில் பாதுகாப்பு தேடி சென்ற மக்கள் கொல்லப்பட்டார்கள்.

நாட்டில் ஒரு மொழி( சிங்களம்) ஒரு சமயம் ( பௌத்தம்) என்ற மேலாதிக்கத்தை கொண்டு வந்ததிலிருந்து 1951, 1956, 1971, 1977, 1983, ஆகிய ஆண்டுகளில் ஒரு இனத்தினர் அழித்து அவர்களின் சொத்துக்களை சூறையாடி அவர்களை தமது நிலங்களிலிருந்து இடம்பெயரச்செய்ததிலிருந்து அதன் பின் இடம்பெற்ற படுகொலைகள், ஆட்கடத்தல்கள்இ 2008 முதல் மே 2009 வரை கனரக ஆயுதங்களை பாவித்து சட்டத்தால் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களையும் பாவித்து, பாதுகாப்பு வலயத்திற்குள் மக்களை வரவழைத்து அவர்கள் மேல் ஆயுதப்பிரயோகம் செய்து கொன்று குவித்து, அவர்களை பாதுகாப்பது என்று கூறி முகாம்களுக்குள் இட்டு அங்கும் கடத்தல் கற்பழிப்பு என்று பற்பல கொடூரங்களை செய்து நிற்கும் இலங்கை அரசை அதன் இராணுவ அதிகாரிகளை அவர்களுடன் சேர்ந்து இயங்கிய ஆயுததாரிகள் எல்லோரும் போர்குற்றங்களுக்கும் மனிதநேயத்திற்கெதிரான குற்றத்திற்கும் இனசுத்தீகரிப்புக்கு பங்கு தாரர்களாக இருந்ததற்காகவும் உலக நீதிமன்றங்கள் முன் நிறுத்தப்பட வேண்டியவர்களாக இவர்கள் உள்ளார்கள்.

அது மட்டுமல்லாமல் இந்தியா இராணுவம் தமிழ்மக்களுக்கு இந்திய அமைதிகாக்கும் படை என்ற பெயரில் அக்காலத்தில் செய்த கொடுமைகள் படுகொலைகள், கற்பழிப்புகளுக்கு பதில் சொல்ல வேண்டியவர்கள் அத்துடன் அண்மையில் நடைபெற்ற படுகொலைக்கு பங்கு தாரர்களாக இருந்ததால், போர்குற்றங்களுக்கு அவர்கள் பதில்சொல்ல வேண்டியவர்களாக இருக்கிறார்கள்மாபெரும் மனித அவலம் மறக்கப்பட்ட கொக்கட்டிச்சோலை, தென்னமரமாவாவடி, செம்மணி, மற்றும் துரையப்பா விளையாட்டரங்கு ஆகியவற்றில் கொலை செய்யப்பட்டு ஒருவருக்கு தெரியாமல் படுகுழிகளுக்கும் புதைக்கப்பட்டவர்களும், மூதூர் பிரான்ஸ் பட்டிணிக்கெதிரான அமைப்பின் உறுப்பினர்கள் பதினேழு பேர்களின் படுகொலைகள், திருகோணமலையில் பெத்தவர்கள் முன்னிலையில் சுட்டுக்கொல்லப்பட்ட கல்லூரி மாணவர்கள் படுகொலைகளுக்கும், சொத்து பறிப்புகளுக்கும் நாம் நீதி கேட்கவேண்டிய நேரமிது.

இலங்கையில் நடந்தவற்றை பார்க்கும் போது 62 வருடங்களுக்கு மேலாக 1948 ல் இல்லை 1917ம் ஆண்டிலிருந்தே ஓர் இன மக்களை இன்னொரு இனம் அழித்துக்கொண்டு வந்திருக்கின்றது. அந்த இனப்படுகெலையில் விரும்பியோ, விரும்பாமலோ பல உலக நாடுகள் தமது நலம் கருதி உறுதுணையாக சென்றிருக்கின்றார்கள். அந்த நாடுகள் தமது பிழைகளை ஓரளவு உணர்ந்து அதற்கு பரிகாரம் தேட முற்படுகின்றார்கள். இன்று இலங்கை உலக நாடுகளின் முன் குற்றவாளிக் கூண்டில் ஏற்றபடும் நிலையில் நிற்கின்றார்கள். உலகம் இலங்கையில் நடந்தது இனப்படுகொலையென்று கூறத்தயங்கினார்கள். இலங்கையில் நடைபெற்றது ஒரு இனப்படுகொலை என்று ஊர்ஐிதப்படுத்தப்படும் போது தமிழர்கள் இனிமேல் சிங்களவர்கள் ஒற்றுமையாக வாழ்வது மிகவும் கஸ்ரம் என்று ஊர்ஐிதப்படுத்தப்படும் போது எமக்குரிய நீதியும் தன்னுரிமையும் தனியாக பிரிந்து செல்ல வேண்டிய உரிமையும் எமக்கு ஏற்படுகிறது.

முள்ளிவாய்க்கால் 18ம் திகதி போராட்டத்தின் உச்சக்கட்டத்தில் பாரிய தியாகங்களும், இன அழிப்புக்கும் மத்தியில் எம்மிடம் பல ஆதாரங்களும், போராட்டமும் எம்மிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இன்று மே 18ம் திகதியிலிருந்து தொடர்ந்து எமது விடுதலைக்கான போராட்டத்தை இந்த உயிர்தியாகங்களுக்கும் 1917ம் ஆண்டுலிருந்து நடைபெற்ற இனப்படுகொலைகள், சொத்துப்பறிப்புக்கள் எமது உரிமையை பறிக்க உதவி இதே உலக நாடுகளிடம் அவர்கள் நாடுகளிலிருந்தே நீதி கேட்க எமக்கு சட்ட வழிகளும், உரிமைகளும் இருக்கின்றன. ஏந்த உலகமும், சட்டமும் எம்மை பயங்கரவாதிகள் என்று சொன்னதோ அதே நாடுகளிடம் அங்கிருந்த சட்டபாதுகாப்புடன் நீதி கேட்க கூடிய வாய்ப்புகளிருக்கின்றது.

தனித்தமிழீழம் தான் எமது விருப்பம் என்று பிரான்சில் பொரு வாரியாக வாக்களித்ததின் மூலம் எமது விருப்பத்தை இந்நாட்டுக்கு எடுத்துக்கூறியுள்ளோம். அதையே மற்றைய நாடுகளில் எம்மவர்கள் வலியுறுத்தி வருகின்றார்கள். நாம் அதற்கு அடுத்த கட்டமாக இனப்படுகொலையை ஊர்ஐிதப்படுத்துவதும், போர் மனித நேயத்திற்கான குற்றங்களை வெளிக்கொணர்வதுமே எமது முக்கியமான இன்னொரு வேலையாக இருக்கும் அதற்கு மக்கள் அனைவரின் ஓத்துழைப்பையும் வேண்டி நிற்கின்றோம்.எமது சமுதாய நாம் இப்படியான நிகழ்வுகளை வெளியே சொல்ல தயங்குவோம் எங்களுக்குள்ளேயே அழுதுவிட்டு இருந்துவிடுவோம். அதை மற்றவர்களுடன் பகிர்வதை தயங்குவோம். நாம் எமக்குள் வாழ்ந்து எம்மவர் உடனே வாழ்ந்து விட்டோம். ஆனால் இன்று உலகத்தில் நடந்த மானிட அநீதியில் சரித்திரத்தில் நாம் இடம் பெற்றுவிட்டோம்.

இன்று நாம் அத்தனை தயக்கங்கள் தடைகளையும் மீறி எமக்கு நீதி வேண்டும் நாடு வேண்டும் என்றால் குற்றவாளிகளை எந்த வழிகளிலாவது கூண்டில் ஏற்ற வேண்டும் அதற்குரிய ஆதாரங்கள் உங்களிடம் தான் இருக்கின்றது. சொந்தங்களை பறிகொடுத்தவர்களும் ,காணாமல் தேடுபவர்கள், சொத்துக்களை பறித்தெடுத்தவர்கள், கொடுமைப்படுத்தப்பட்டவர்கள், சித்திரவதைக்குட்பட்டவர்கள் (torture) கற்பழிக்கப்பட்டவர்கள் குற்றப் பத்திரிகையை சமர்ப்பிக்கும் நேரமிது. பிரான்சு தமிழீழ மக்கள் பேரவையினர் அதறக்கான அத்தனை உதவிகளையும் உங்களுக்கு செய்து தரும. உங்கள் சந்தேகங்கள், பயங்கள் தயக்கங்கங்களுக்கு விடையும் அதிலிருந்து விடுபட வழிவகைகளையும் நாங்கள் உங்களுக்கு தரக்கூடிய வாய்ப்பும் உள்ளது.

அயர்லாந்தில் இம்மாதம் மக்கள் நீதிமன்றம்( Peoples Tribunal) ஒன்று உருவாக்கப்பட்டு இலங்கையில் நடைபெற்ற படுகொலையை விசாரிக்க பல( imminet Personalite) கொண்ட குழு விசாரணை ஒன்றை துவக்க இருக்கின்றார்கள். இதைப்போல் பல நாடுகளிலும் உருவாக சந்தர்ப்பங்கள் உள்ளது. இது கூட உலக நீதி மன்றங்களுக்கு முன் செல்ல முதல்படிகட்டமாக இருக்கலாம். ஆகவே மக்களாகிய நாம் முள்ளிவாய்க்கால் 18 மே யில் நாம் தோல்வி கண்டு விடவில்லை அந்த திகதியில் தமிழ் மக்கள் விடுதலைக்காக தமது இன்னுயிர்களை தியாகம் செய்த உறவுகள், தமது எமது அழிவுகளுக்கு விடுதலையை தேடி தர சில பாதைகளை விட்டுச்சென்றிருக்கின்றார்கள்.

அதை எம்மால் சரியான வழியில் இட்டு செல்ல எங்கள் எல்லோராலும் முடியும் நீதி கிடைக்கும் வரை எம்மால் நிம்மதியாக உறங்க முடியாது வன்னி மண்ணில் புதைக்கப்பட்டிருக்கும் எமது உறவுகளுக்கு நாம் சரியான முறையில் கிரிகைகள் செய்வது என்றால் நாம் அங்கே சென்று அவர்களின் உடல்களை தேடி எடுத்து சரியான முறையில் செய்ய வேண்டும். அதுவரை அங்கே நடந்த கொடுமைகளுக்கு தீர்வு நாம் தேட வேண்டும். கிடைக்கும் சந்தர்ப்பங்களை சரியான வழியில் சரியான நேரத்தில் சரியான அமைப்பினால் பயன்படுத்தப்பட வேண்டும். உங்கள் அத்தனை கேள்விகளுக்கும் நாம் உங்களுக்கு விடை தர முயற்சித்து போர்குற்றம் இனப்படுகொலையை வெளிக்கொண்டு வருவோம்.

மேலும் கேள்விகளுக்கு எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள்

mte. [email protected]

Tel 06 15 88 42 21 (Thiru)

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles
  • Ramesh says:

    Please bring the culprits who did crime against human race, particularly Tamiizh,booked and punished in international courts. All the BEST in your efforts.

    January 15, 2010 at 01:30

Your email address will not be published. Required fields are marked *

*