TamilSpy

பொழுது போக்கு இணையம்…

விஜய் ஆண்டனியை பிரிந்த அர்ஜுன்

விஜய் ஆண்டனி தற்போது நடித்து வரும் ‘கொலைகாரன்’ படத்தை ஆண்ட்ரூ இயக்குகிறார். இதில் நடிகர் அர்ஜுனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ‘இரும்புத்திரை’ படத்தையடுத்து இந்த படத்திலும் அவர் வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பில் நடிகர் அர்ஜூன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு முடிவடைந்துள்ளது. இதையடுத்து இதன் அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்கான ஆயுத்த வேலைகளில் படக்குழுவினர் இறங்கியுள்ளனர். ஆஷிமா நர்வால் கதாநாயகியாக நடிக்க்கும் இப்படத்தில் நாசர், சீதா, V.T.V. கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபத்திரத்தில் நடிக்கின்றனர். தியா மூவிஸ் சார்பாக B.ப்ரதீப் தயாரிக்கும் இப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைக்கிறார். விஜய் ஆண்டனி தற்போது ‘திமிரு பிடிச்சவன்’ படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Cinema

Your email address will not be published. Required fields are marked *

*