பாடலாசிரியர் கபிலனை எப்போதும் மனதிலேயே வைத்திருப்பவர்தான் கமல். ‘விஸ்வரூபம்’ பட நேரத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் கபிலனை நடிக்கவும் வைத்திருந்தார் அவர்.
‘மரிக்கொழுந்து வாசங்களுக்கு நடுவில் நீ கறிக்குழம்பு வாசம்’ என்று கமல் பற்றி தனிக்கவிதை எழுதி கை தட்டல்கள் வாங்கியவரும் இந்த கபிலன்தான். அப்படிப்பட்ட கபிலனுக்கு அவசர அழைப்பு வந்ததாம் கமலிடமிருந்து. ‘நம்ம கட்சியின் கொள்கை பாடல் கேசட் ஒண்ணு தயாராகுது. இன்னைக்கு மதியத்துக்குள்ள ஒரு பாட்டு வேணும்’ என்று கேட்கப்பட… குழம்பிப் போனாராம் கபிலன். இது என்ன அவசர உப்புமாவா, அள்ளிப் போட்டு கிண்டறதுக்கு? காலத்திற்கும் பேசப்பட வேண்டுமே? ‘அடுத்த முறை எழுதுறேன் சார்’ என்று உத்தரவு(?) வாங்கிக் கொண்டாராம்.

Category: Cinema, Uncategorized