TamilSpy

பொழுது போக்கு இணையம்…

ரஜினி தமிழர் அல்ல, காவியின் தூதுவர்: பாரதிராஜா காட்டம்!

“நடிகர் ரஜினிகாந்த் தமிழர் அல்ல. அவர் கர்நாடாக காவியின் தூதுவர்” என்று இயக்குனர் பாரதிராஜா காட்டமாக விமர்சித்துள்ளார்.

தமிழன் பணத்தில் ராஜவாழ்க்கை வாழ்ந்து கொண்டு தமிழர்களை வன்முறையாளர்கள் என்கிறீர்கள்? என்றும் ரஜினிகாந்தை நோக்கி பாரதிராஜா கேள்வியெழுப்பியுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி ஐ.பிஎ.ல். போட்டிக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் போலீசார் தாக்கப்பட்டதற்கு ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்தார்.

ரஜனிகாந்துக்கு பதிலளித்து பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “காவிரிக்காக ஒன்றுகூடிய தமிழர் ஒற்றுமை உணர்வை வன்முறை கலாசாரம் என கூறுவது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக நீங்கள் என்ன செய்தீர்கள்?; அறவழியில் போராடியவர்கள் வன்முறையாளர்களா?

தமிழர்கள் எல்லாம் ஒன்றிணைந்து விட்டார்கள் என்ற காழ்ப்புணர்ச்சியால் பேசும் பேச்சு இது. ரஜினிகாந்த் தமிழர் அல்ல, கர்நாடகா காவியின் தூதுவர் என்று இப்போது தான் தெரிகிறது.

இலங்கை தமிழர், நியூட்ரினோ மற்றும் மீத்தேன் விவகாரம் குறித்து ரஜினி வாய்திறக்காதது ஏன்?

தமிழர்களுள் ரஜினிகாந்த் சிண்டு முடிய வேண்டாம்.

நியூட்ரினோவுக்கு எதிராக களத்தில் போராடினீர்களா? மீத்தேன் பற்றி வாய் திறந்தீர்களா? இலங்கை தமிழர்களை கொன்று குவித்தபோது குரல் கொடுத்தீர்களா?:

படம் வெளியாகும் போது மட்டும் பூச்சாண்டி காட்டும் ரஜினி போன்றோரை சந்தித்ததே இல்லை.

காவிரி பிரச்சினை பற்றி எரிந்தபோது, வெந்து செத்தது எங்கள் தமிழ் இனம்.

தமிழன் பணத்தில் ராஜ வாழ்க்கை வாழ்ந்து கொண்டு தமிழர்களை வன்முறையாளர்கள் என்கிறீர்கள்.

உங்கள் வேஷம் மெல்ல மெல்ல கலைகிறது.” என்றுள்ளார்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Tamizhagam

Your email address will not be published. Required fields are marked *

*