பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவது தொடர்பில் புதிய சட்டம் ஒன்றை இன்னும் சில வாரங்களில் கொண்டுவரவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகள் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கும் ஏற்புடையதாக அமையும் வகையில் நடைமுறைப்படுத்த அரசாங்கம் அவதானம் செலுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கண்டியில் நடைபெற்ற வன்முறை சம்பங்களை அடுத்து, பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்ந்தும் நீடிக்கிறது. இந்நிலையிலேயே இன்று புதன்கிழமை பிரதமர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

Category: Ceylon News