TamilSpy

பொழுது போக்கு இணையம்…

பிரபாகரனைப் பற்றிய கைகள் “பொல்லாதவன் காலில்” வீழ்தல் தகுமோ….

தமிழர் பிரச்சினை என்பது இன்னும் பல தசாப்தங்களுக்கு தீர்க்கப்படாத ஒரு விடயமாகவே இருக்கப் போகிறது என்று உறுதியாகிறது. இந்தநிலைக்கு வழக்கம் போல சிங்கள அரசியல் தலைமைகளை மட்டும் குற்றவாளிகளாக்க முடியாது- துணைபோன தமிழர் தரப்புக்கும் இந்தப் பழியில் பங்குண்டு.

* இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக இனப்பிரச்சினைக்கான தீர்வு, அதிகாரப்பகிர்வு என்பன முக்கியத்துவமற்ற விடயங்களாக மாறியிருக்கின்றன. போரில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் அரசியல் தீர்வு என்ற விடயம் கிட்டத்தட்ட இல்லாமலே போய் விட்டது- இதை உறுதிப்படுத்தும் வகையிலான நிகழ்வுகளே தற்போது இடம்பெற்று வருகின்றன. இந்த நிலைக்கு வழக்கம் போல சிங்கள அரசியல் தலைமைகளை மட்டும் குற்றவாளிகளாக்க முடியாது- துணைபோன தமிழர் தரப்புக்கும் இந்தப் பழியில் பங்குண்டு. காரணம் நாம் இன்று மிகவும் வருந்தத்தக்க அரசியல் வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ளோம். ஒட்டுமொத்த தமிழினத்தினதும் அரசியல் அபிலாசை என்பது தமிழீழத் தாய்த் திருநாடு என்பதிலே உறுதியாக இருக்கின்றோம். ஆனால் இன்று உருவாகியிருக்கும் புலிகளின் சரியான வழி நடத்தலற்ற வெற்றிடம் பலரையும் பலவிதமான கற்பிதங்களை உருவாக்க வழிவகுத்துள்ளது. குறிப்பாக இலங்கையின் தேர்தல் விடையத்தில் கூட நாம் சரியாக சிந்தித்து செயற்பட முடியாதவர்களாகவுள்ளோம்.

* ஆட்சிமாற்றம் அவசியம் என ஒருசாராரும், மகிந்தாவை விட பொன்சேகா பரவாயில்லை என இன்னொருசாராரும் புலிகளுக்கு பின்னரான அரசியல் சக்தியாக தமிழர்களின் குரலாக ஒலிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட த.தே கூட்டமைப்பு வியாபரப் பொருளாகவும், இதுதான் ஒருபுறமிருந்தாலும் தமிழகத் தலைவர்கள் கூட தங்கள் கருத்துக்களில் மகிந்தாவின் படையதிகாரியாக இருந்து பொன்சேகா இரானுவத் ததை வழிநடத்தியது மட்டும்தான் அவரது பணி மகிந்தவே தமிழர்களை கொன்றொழித்தார் எனவே சரத்தை ஆதரிப்பபதே தமிழர்களுக்கு சரியானது என வலியுறுத்துவதும்.வேதனையானதே. அத்தோடு இன்று புலம்பெயர் சமூகம் உண்மைச்செய்திகளை அறியாது ஊடக வியாபார உலகுக்குள் உலாவாரும் செய்திகளை மட்டும் நம்பி குழப்பம் அடைவதுவும் முகம் தெரியாது செவிவழிச்செய்திகள் இணையச்செய்திகளாக வரும்போது அதற்குள் நடக்கும் பேரங்கள் அறியப்படாது பொதுமையில் பார்க்கப்படுவதுவும், தமிழ் மக்களுக்கு தலைமை புலிகளே என எழுதிய தமிழ் ஊடகங்கள் கூட சிங்களவனின் பேரம் பேசுதலுக்கு பலியாகி மக்களை குழப்புவதுவும்

* இலக்கியவாதிகள் அரசியல் எழுதுவதை விட்டுவிடுவோம்,ஆனால் அரசியல் அனுபவமுள்ள அரசியல் பாசறையில் வளர்ந்த பத்தி எழுத்தாளர்கள் கூட இவ் விடையத்தில் தெளிவாக எதனையும் குறிப்பிடாது தப்பித்துக்கொள்ளுவதும் வேதனைதான்.

எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வாசகத்தை விட்டுவிட்டு தமிழனுக்கு எதிரி யார் என்பதைச் சிந்திப்போம்

* கதிர்காமருக்கு பின்பு புலிகளை சர்வதேச பயங்கரவாத பட்டியலுக்குள் தள்ளியவர்தான், மங்கள சமரவீரா

* புலிகளின் இரானுவக்கட்டமைப்பை உடைத்து அவர்களை ஜீ எஸ் பீரிஸ் ஊடாக சர்வதேச சதிவலைக்குள் சிக்க வைத்தவர்தான் ரணில்

* முஸ்லீங்கள் இலங்கையில் சிறுபான்மை இனமல்லை. பிரபாகரன் தனிநாடு கேட்கலாம் ஏன் நாங்கள் தனிநாடு கேட்கக்கூடாது என முழங்கியவர்தான் ரவூப் ஹக்கீம் இவர்களோடு இன்று ஜேவிபி

* மறுபுறம் மகிந்த கூட்டணி இதுவும் தமிழ் தேசியத்தை கருவற்க்கதுணிந்த கூட்டணிதான்,

முப்பதாயிரம் மாவீரர்களின் உயிர்களினாலும் இலட்சக்கணக்கான தமிழரின் குருதியினாலும் தான் எமது போராட்டம் இன்று சர்வதேச மயப்பட்டு நிற்கிறது. ஒப்பற்ற விலைகளைக் கொடுத்த எமது உரிமைப் போராட்டத்தை ஒரு சிங்களப் பேரினவாதிகளை ஆட்சியில் ஏற்றுவதற்காக தமிழினம் தன்னைதானே காட்டிக் கொடுக்கப் போகிறதா?

எனவே இத் தேர்தல் சார்ந்து நாம் என்ன செய்யப் போகின்றோம் என்பதுதான் எமது கேள்வியாக இருந்த சூழலில் அதற்கான பரப்புரைகளை கணிசமாக மேற்கொண்டோம் கூட்டமைப்பினரை கண்டித்தோம் விமர்சித்தோம். இதுசார்ந்து பல விமர்சனங்கள் எம்மீது திணிக்கப்பட்டன. தேசியக்கூட்டமைப்பின் கொழும்பு தலைமையகத்திலிருந்து தொலைபேசி உரையாடலூடக நாங்கள் கண்டிக்கப்பட்டோம். சிறீகாந்தா, சிவாஜிலிங்கம்,செல்வம் அடைக்கலநாதன், பிரேமச்சந்திரன், மாவைசேனாதிராஜா, சம்பந்தர், கிஸோர்,போன்றோர் எம்மோடும் நாங்கள் அவர்களோடும் விவாதித்தோம். போதாக்குறைக்கு விக்கிரமபாகுகூட

ஆனால் இவை எல்லாம் எமது மக்களை பணயம் வைத்து நடத்தப்படும் நாடகங்களாகவே நாம் பார்க்கின்றோம்.

* எமது கருத்தில் உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். ஆனால் நாம் எவரிடமும் எமது கருத்துக்களை திணிக்கவில்லை. த.தே.கூட்டமைப்பின் வெற்றிக்காக அன்றும் பரப்புரை செய்த ஊடகம் என்ற உரிமையோடு இந்த தேல்தலிலும் எமதுமக்களுக்கு எம் தேசத்தினதும் மாவீரரினதும் கனவுகளைக்காவிச்செல்வோம்.

* கடந்த மே மாதத்தில் இருந்து இன்றுவரையான ஏழுமாத காலத்திலான எமது சமூக அசைவியக்கமானது எதிர்மறையானதாகவே அமைந்துள்ளது. முன்நோக்கி நகர வேண்டிய சக்கரத்தைப் பின்நோக்கி நகர்த்தி தொடக்க புள்ளிக்கு மீளக் கொணர்வதையே ஒரு சாதனை போல நாம் கொண்டாடி வருகிறோம்.

* வட்டுக்கோட்டைப் பிரகடனம்’, தாயகம் – தேசியம் – தன்னாட்சி, “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”, வலுச் சமநிலை – ‘நடைமுறை அரசு’ — என முன்னேறி வந்த போராட்டத்தை மேலும் முன்நகர்த்துவதே நாம் பெற்ற பட்டறிவின் விளைவாக இருக்க வேண்டும். அதுவே 2010-இன் சவால்களை எதிர்கொள்ளும் வாயில்களையும் தமிழர்கள்மீதான ஒடுக்குமுறை கதவினையும் திறக்க வல்லது. அதற்கான திறவுகோல்கள் – வெளிப்படைத்தன்மை, சூழ்ச்சித்திறன், அனைத்துலக இயங்குமுறை பற்றிய புரிதல், கூட்டுவேலைத்திட்டம் என்பவையாகும். இதனை முன்னெடுக்க அறிவும் – தெளிவும் – துணிவும் முக்கியமானவை. இதனையே நாம் அனைவரிடமும் இத் தேர்தல் விடையத்திலும் எதிர்பார்க்கின்றோம்.

* தமிழரின் அடிப்படைப் பிரச்சினைகளை கருத்தில் எடுக்காத ஜனாதிபதி தேர்தல்

கடந்த ஐந்து ஜனாதிபதித் தேர்தல்களின் போதும் போருக்கு முடிவு கட்டுதல், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல்தீர்வு காணுதல் என்பன தேர்தல் விஞ்ஞாபனங்களில் முக்கிய விடயங்களாக இடம்பெற்று வந்தன. கடந்த காலங்களில் சந்திரிகா குமாரதுங்க, ரணில் விக்கிரமசிங்க, மகிந்த ராஜபக்ஸ போன்றோரின் தேர்தல் விஞ்ஞாபனங்களில் இவை முதன்மை வாய்ந்த விடயங்களாக இருந்தன. தேர்தல் விஞ்ஞாபனங்களில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு அமைய எவருமே அரசியல்தீர்வு காணத் துணியவில்லை. ஆனால் இந்தமுறை ஜனாதிபதித் தேர்தல் அரசியல்தீர்வு, அதிகாரப்பகிர்வு ஆகியவற்றை ஓரம் கட்டும் வகையில் அமைந்துள்ளது. சரத் பொன்சேகாவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் அதிகாரப்பகிர்வு, அரசியல்தீர்வு என்று தமிழர் பிரச்சினைகளின் அடிப்படை அம்சங்கள் அனைத்துமே குழிதோண்டிப் புதைக்கப்பட்டிருப்பதைக் காண முடிகிறது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்னமும் வெளியாகவில்லை. ஆயினும் அவரது தேர்தல் விஞ்ஞாபனத்துக்கு முந்திய கருத்துகளில் இருந்து தமிழர் பிரச்சினைக்கான உருப்படியான எந்தத் தீர்வையும் முன்வைக்கப் போவதில்லை என்பது வெளிப்படையாகியுள்ளது. வடக்கு கிழக்கு இணைப்பு, அரசியல்தீர்வு, அதிகாரப் பகிர்வு இவையே இன்றுள்ள முக்கியமான அடிப்படைப் பிரச்சினைகளாகியுள்ளன. இவை தவிர்ந்த பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தும் வகையிலான தேர்தல் வாக்குறுதிகளையே இரு பிரதான வேட்பாளர்களும் வழங்க முன்வந்துள்ளனர். இந்தப்; பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி தீர்வு காண்பதான வாக்குறுதிகளைக் கொடுத்து அடிப்படை அரசியல் பிரச்சினைகளை அமுக்கி விடுவதே பிரதான வேட்பாளர்களின் நோக்கமாகத் தெரிகிறது. முதலாவதாக வடக்கு-கிழக்கு இணைப்பு விவகாரத்தை எடுத்துக் கொள்ளலாம். வடக்கையும் கிழக்கையும் தான் அதிகாரத்தில் இருக்கும் வரை ஒரு போதும் மீள இணைக்க முடியாது என்பதை வெளிப்படையாகக் கூறியிருக்கிறார் மகிந்த ராஜபக்ஸ. சில மாதங்களுக்கு முன்னதாக அவர், அது நீதிமன்றத் தீர்ப்பு என்றும் அதில் தான் தலையிட முடியாது என்றும் கூறிவந்தார். ஆனால் இப்போது, தான் அதிகாரத்தில் இருக்கும் வரை அதை நிறைவேற்ற முடியாது என்று கூறியுள்ளார்.

சரத் பொன்சேகாவிடம் இருந்து வடக்கு-கிழக்கு இணைப்புத் தெர்ர்பான எந்தப் பதிலும் வரவில்லை. ஆனால் சரத் பொன்சேகாவின் பிரசார மேடையில் வைத்து வடக்கையும் கி;ழக்கையும் பிரக்கும் உத்தரவை வழங்கிய முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். இது சரத் பொன்சேகாவின் கருத்தாகவே கொள்ளத்தக்கது. வடக்கையும் கிழக்கையும் இணைக்க வேண்டிய எந்தத் தேவையும் கிடையாது என்பதே அவரது கருத்து வடக்கு கிழக்கை மீளவும் இணைக்க தான் முனைவதாக அரசாங்கம் கூறுவது அப்பட்டமான பொய் என்றும் கூறியிருக்கிறார் சரத் என் சில்வா. அதேவேளை அவர் கடந்த வாரம் சிங்களப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் போதிய சட்டவலுவில்லாததாலேயே வடக்கையும் கிழக்கையும் பிரித்தாகக் குறிப்பிட்டிருந்தார்.

யாராவது வடக்கையும் கிழக்கையும் இணைக்க விரும்பினால் சர்வஜன வாக்கெடுப்பை நடத்தி அதை முடிவு செய்யலாம் என்றும் அவர் கூறியிருந்தார். சரத் பொன்சேகாவின் மேடையில் சரத் என் சில்வா கூறிய கருத்தை அவரது தனிப்பட்ட கருத்தாகக் கருத முடியாது. அதேவேளை இந்த இணைப்பு விடயத்தில் சரத் பொன்சேகா எந்த நடவடிக்கையையும் எடுக்க மாட்டார் என்பதும் தெளிவு. காரணம் அதுபற்றி அவர் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் எதுவும் குறிப்பிடவில்லை. கண்டியில் எடுத்துக் கொண்ட உறுதிமொழியிலோ- அல்லது யாழ்ப்பாணத்தில் கொடுத்த வாக்குறுதிகளிலோ அதுபற்றி அவர் வாய் திறக்கவேயில்லை. அதேவேளை வடக்கு,கிழக்கு இணைப்பு, அதிகாரப் பகிர்வு 13வது திருத்தம் என்பன குறித்து தமிழ்த் தேசி;யக் கூட்டமைப்புடன் சரத் பொன்சேகா எந்தப் பேச்சுகளையும் நடத்தவில்லை என்பதை ஜேவிபி செயலாளர் ரில்வின் சில்வா உறுதிப்படுத்தியுள்ளார்.

அடுத்து அரசியல் தீர்வு பற்றிப் பார்க்கலாம்.

முன்னர் போருக்கு முடிவுகட்டி அரசியல் தீர்;வு காணப்படும் என்று வாக்குறுதி வழங்கிய ஜனாதிபதி வேட்பாளர்கள் இப்போது போர்முடிவுக்கு வந்துள்ளதால் அரசியல்தீர்வு, அதிகாரப் பகிர்வு குறித்து மறந்தேனும் வாய் திறக்கத் தயாராக இல்லை. அரசியல்தீர்வு, அதிகாரப் பகிர்வு என்பன தமது வெற்றிக்குக் குறுக்கே விழும் தடைக்கற்களாகப் பார்க்கின்ற போக்கு இரு பிரதான வேட்பாளர்களிடமும் இருக்கிறது. அதனால் அவர்கள் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் அது பற்றிக் குறிப்பிடப் போவதும் இல்லை. யார் பதவிக்கு வந்தாலும் இது பற்றிய எந்த நடவடிக்கைளிலும் இறங்கப் போவதும் இல்;லை. முப்பதாண்டுப் போர் தமிழர்களின் பிரச்சினைக்கு ஒரு நியாயமான அரசியல்தீர்வை வழங்க வேண்டும் என்ற சர்வதேச அபிப்பிராயம் ஒன்றை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் போருக்குப் பிந்திய எட்டு மாதங்களும் தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்ற கருத்தையே முற்றாக மறைக்கச் செய்து விட்டன. இந்த நிலைக்கு தமிழ் அரசியல் தலைமைகளும் காரணமாகி விட்டன.

* பேரம் பேசுதல் என்ற பெயரில் தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் பிரச்சினைகளை பின் தள்ளுவதற்கு அனுமதித்த அத்தனை தமிழ் அரசியல்வாதிகளும் இதற்குப் பொறுப்பேற்க வேண்டிய நிலை உருவாகும். வடக்கு, கிழக்கு இணைப்பும் இல்லை, அரசியல்தீர்வும் இல்லை, அதிகாரப் பகிர்வும் கிடையாது என்றதொரு நிலைக்குள் தமிழ் மக்களை இந்த ஜனாதிபதித் தேர்தல் தள்ளி விட்டிருக்கிறது என்பதே உண்மை. சர்வதேச மயப்படுத்தப்பட்ட தமிழ்மக்களின் உரிமைப் போராட்டம் இன்று இலங்கைத்தீவின் எல்லைகளுக்குள் சுருக்கப்படும் நிலை தோன்றியிருக்கிறது.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்கள் இருவருமே தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை- அவர்களின் பாதுகாப்பை எந்த வகையில் உறுதிப்படுத்துவார்கள் என்ற கேள்விக்கு விடை தரவில்லை. தமிழரின் பிரச்சினைகளுக்கு- குறிப்பாக அரசியல்தீர்வு காணும் விடயத்தில் ஏற்பட்டிருக்கின்ற இந்தத் தேக்கநிலை நிரந்தரமானதாக மாறிவிடும் அபாயத்தை இந்த ஜனாதிபதித் தேர்தல் ஏற்படுத்தியுள்ளது. இந்த மாயநிலைக்குள் இருந்து தமிழ் மக்கள் தமது உரிமைக் கோரிக்கைகளை முன்வைக்க முடியாத நிலைக்கு விரைவில் தள்ளப்படுவார்கள். அப்படியான நிலை ஏற்படும் போது தமிழ் மக்களின் அரசியல் மற்றும் உரிமைக் கோரிக்கைகள் சர்வதேச அரங்கில் இருந்து ஓரங்கட்டப்பட்டு விடும் அபாயம் இருக்கிறது.

* கடந்த காலங்களில் இலங்கையின் பிரதான அரசியல் சக்திகளால் முன்மொழியப்பட்ட- ‘இனப்பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு காணுதல்’ என்ற வாதத்தை சர்வதேசமும் சரி தமிழர் தரப்பும் சரி- நடைமுறைச் சாத்தியமற்றதென்றே நிராகரித்து வந்தன. ஆனால் இன்று போர் முடிவுக்கு வந்து விட்டதால் தமிழரின் பிரச்சினைகளும் தீரு;ந்து விட்டது போன்று இலங்கையின் பிரதான அரசியல் சக்திகள் கருதத் தொடங்கியுள்ளன. இதன் வெளிப்பாடு தான் இந்தத் தேர்தலில் அரசியல் தீர்வு அதிகாரப் பகிர்வு என்பன பற்றி அந்த சக்திகள் ஏற்படுத்தியுள்ள வெறுமை நிலையாகும். போருக்குப் பிந்திய அரசியல்தீர்வு என்பது கானல் நீரே என்பது உறுதியாகி விட்டது. இது இரு பிரதான அரசியல் சக்திகளும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் பிரச்சினையை அணுகுகின்ற முறையில் இருந்தே புரிந்து கொள்ள முடிகிறது.

இதிலிருந்து தமிழர் பிரச்சினை என்பது இன்னும் பல தசாப்தங்களுக்கு தீர்க்கப்படாத ஒரு விடயமாகவே இருக்கப் போகிறது என்று உறுதியாகிறது. இந்தநிலைக்கு வழக்கம் போல சிங்கள அரசியல் தலைமைகளை மட்டும் குற்றவாளிகளாக்க முடியாது- துணைபோன தமிழர் தரப்புக்கும் இந்தப் பழியில் பங்குண்டு.

ஹரிகரன்

பிரபாகரன் வழி நில்லு

அறம் எங்கள் தலைவனாய் உயிர் கொண்டது

அன்னைமண் விடுதலைப்பயிர்கண்டது

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*