TamilSpy

பொழுது போக்கு இணையம்…

இன்றைய ராசி பலன் 12-03-2018

மேஷம்: கணவன்-மனைவிக் குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். பணவரவு திருப்தி தரும். சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோ கத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். புதிய பாதை தெரியும் நாள்.

ரிஷபம்: மாலை 05.09 மணி வரை சந்திராஷ் டமம் தொடர்வதால் வேலைச் சுமையால் உடல் அசதி, மனச்சோர்வு வந்து நீங்கும். குடும்பத்தில் பல விஷயங்களையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் அலட்சியம் வேண்டாம். மாலை முதல் மகிழ்ச்சி பெருகும் நாள்.

மிதுனம்: சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். பிள்ளை கள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். மாலை 05.09 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் நிதானித்து செயல்பட வேண்டிய நாள்.

கடகம்: எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உறவினர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

சிம்மம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். உறவினர்களில் உண்மை யானவர்களை கண்டறிவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிட்டும். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.

கன்னி: தடைகளைக் கண்டு தளர மாட்டீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். விருந்தினர் வருகை உண்டு. வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.

துலாம்: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.

விருச்சிகம்: துடிப்புடன் செயல்படத் தொடங் குவீர்கள். குடும்பத்தில் இருந்த சண்டை, சச்சரவு விலகும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். மனசாட்சி படி செயல்படும் நாள்.

தனுசு: மாலை 05.09 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் சில நேரங்களில் மன அமைதியற்ற நிலை ஏற்படும். அடுத்தவர்களை குறைக் கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். மாலை முதல் எதிர்ப்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

மகரம்: எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளால் டென்ஷன் ஏற்படும். யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். மாலை 05.09 மணி முதல் ராசிக்குள் சந்திரன் தொடங்குவதால் போராடி வெல்லும் நாள்.

கும்பம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். உங்களால் பயனடைந் தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தை பெருக் குவீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். மதிப்புக் கூடும் நாள்.

மீனம்: உங்கள் செயலில் வேகம் கூடும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். சாதித்துக் காட்டும் நாள்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Raasi Palan

Your email address will not be published. Required fields are marked *

*