TamilSpy

பொழுது போக்கு இணையம்…

ரஜினி ரசிகர்கள், ஆதரவாளர்கள் தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொள்வதற்கு தடை!

ரஜினிகாந்தின் ரசிகர்கள் அல்லது ஆதரவாளர்கள் என்கிற பெயரில் தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொண்டு கருத்துச் சொல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்தின் ரசிகர் மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகர் நேற்று சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்ட விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, “அகில இந்திய ரஜினி ரசிகர் மன்றம் மற்றும் ரஜினி மக்கள் மன்றம் சார்பில், தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்க யாரையும் நாங்கள் நியமனம் செய்யவில்லை என்பதையும், விவாதங்களில் பங்கேற்று வருபவர்கள் வெளிப்படுத்தும் கருத்துகள், எங்களால் அங்கீகரிக்கப்பட்டது அல்ல என்பதையும் பொதுமக்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம்.

ஏற்கனவே ரஜினிகாந்த் கூறியது போல், மன்ற உறுப்பினர்கள் அன்றாடம் நடக்கும் அரசியல் விவாதங்களில் பேசாமல், கட்சி அறிவிப்பு வரும்வரை நமது நேரத்தை மன்றத்தின் கட்டமைப்பை உருவாக்குவதில் செலவழிக்க வேண்டும் என்பதை அறிந்து நாம் செயல்பட்டுக் கொண்டிருப்பதால், மன்ற உறுப்பினர்கள் யாரும் இப்படிப்பட்ட விவாதங்களில் பங்கேற்க, எங்களால் நியமனம் செய்யப்படவில்லை என்று தெரிவித்துக்கொள்கிறோம்.” என்றுள்ளது.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Tamizhagam

Your email address will not be published. Required fields are marked *

*