TamilSpy

பொழுது போக்கு இணையம்…

லட்சுமிராயின் ஆசை நிராசையா போச்சு

இந்த வாரம் திரைக்கு வந்திருக்கும் ஜுலி2 படத்தின் ஹீரோயின் நம்ம ராய் லட்சுமிதான். என்னதான் டப்பிங் படம் என்றாலும், அதை தமிழ் படம் போலவே பிரமோஷன் செய்தால்தானே சரியாக இருக்கும்? தன் முழு நேரத்தையும் இப்படத்திற்காகவே அர்ப்பணிக்கும் நோக்கத்தோடு சென்னைக்கு வந்த ராய் லட்சுமி மீடியாக்களை தனித்தனியாக சந்தித்து பேட்டி கொடுத்தது ஆச்சர்யம்.

தமிழ்சினிமாவையே மறந்துட்டீங்களே? நடிக்கற ஒண்ணு ரெண்டும் ஐட்டம் டான்ஸாதான் இருக்கு என்று அலுத்துக் கொண்ட நம்மிடம், ‘ஐட்டமோ… முழு ஹீரோயினோ… நான் தமிழ்சினிமாவை மறக்கலையே? அப்படியொரு பேரு வந்திடக் கூடாதுன்னுதான் ஒரு பாட்டா இருந்தாலும் ஆடிக் கொடுத்துட்டு போறேன்.

ஆல் லாங்குவேஜ்ல நடிக்கறதால நேரமே இல்லை. இனிமே தமிழ்சினிமாவுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன்’ என்றார். ஆனாலும் ஜுலி படத்திற்கு சின்ன மரியாதை கூட காட்டவில்லை ஜனங்கள். பல தியேட்டர்களில் ஒரு ஷோவோடு மங்களம் பாடிவிட்டார்கள்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Cinema

Your email address will not be published. Required fields are marked *

*