TamilSpy

பொழுது போக்கு இணையம்…

இன்றைய ராசி பலன் 15-11-2017

மேஷம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அரசால் அனு கூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். பொதுக்காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத் தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அமோகமான நாள்.

ரிஷபம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளை கள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.

மிதுனம்: உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வியாபாரத் தில் கணிசமாக லாபம் உயரும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை தாண்டி முன்னேறுவீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

கடகம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பர். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுக மாவார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோ கத்தில் உங்கள் கை ஓங்கும். நினைத்ததை முடிக்கும் நாள்.

சிம்மம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். சொந்த-பந்தங்கள் வீடு தேடி வருவார்கள். எதிர்பார்த்த உதவி கள் கிடைக்கும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.

கன்னி: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் மனதில் இனம் புரியாத பயம் வந்து போகும். குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். அஸ்தம் நட்சத்திரக்காரர்களுக்கு உடல் நலம் பாதிக்கும். உதவி கேட்டு தொந்தரவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

துலாம்: கணவன்-மனைவிக் குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களிடம் நயமாக பேசுங்கள். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. போராடி வெல்லும் நாள்.

விருச்சிகம்: எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். உடன்பிறந்தவர்களால் மகிழ்ச்சி தங்கும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் அறிவு ரைகள் தருவார்கள். இனிமையான நாள்.

தனுசு: உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற் கான வழியை யோசிப்பீர் கள். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை நம்பி புதிய பொறுப்பை ஒப்படைப்பார். சாதிக்கும் நாள்.

மகரம்: கணவன்-மனைவிக் குள் அன்யோன்யம் பிறக்கும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். புதியவர் கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

கும்பம்: சந்திராஷ்டமம் நீடிப் பதால் எதையும் திட்டமிட்டு செய்யப்பாருங்கள். குடும்பத் தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்துக் கொள்ளுங் கள். பேச்சில் காரம் வேண்டாம். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். சிக்கனம் தேவைப்படும் நாள்.

மீனம்: பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர் கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். பயணங்கள் திருப்திகரமாக அமையும். விருந்தினர் வருகையால் வீடு களைக்கட்டும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோ கத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Raasi Palan

Your email address will not be published. Required fields are marked *

*