TamilSpy

பொழுது போக்கு இணையம்…

மோடியுடன் மோதும் சிம்பு..!

“ஏழைகள் வீட்டில் இருப்பது எல்லாம் சிவப்பு பணமடா….
குருவி போல சேர்த்த காசு கள்ளம் இல்லடா…
நாட்ட மாத்த வேனுமுன்னு நீங்க நினைச்சா…
கோட்டு போட்ட குண்டர்களின் சங்க புடிங்கடா…”

என்ற வரிகள் சிம்பு குரலில் கவனம் ஈர்க்க, முழுதாய் கேட்டோம் பாடலை… கருப்புப் பணத்தை ஒழிப்பதாகக் கூறி அறிவிக்கப்பட்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கை ஏழைகளையும் நடுத்தர மக்களையும் பாடாய்ப் படுத்தியதை விவரித்து எழுதப்பட்டுள்ள அந்தப் பாடல் இப்படி ஆரம்பிக்கிறது…

“காந்தி நோட்டு ரெண்டு அம்பேலாகி போயாச்சு….
பேங்கு ஏடிஎம்மில் அஸ்க்கு புஸ்க்கு ஆயாச்சு…
சோக்கா சொக்கா மாட்டி நடுத்தெருவுக்கு வந்தாச்சு….
காத்துக் கிடந்த ஜனம் காக்கா கூட்டம் போலாச்சு….
மல மலயா மோசம் செஞ்ச மூதேவிங்க ஃபாரின் போயாச்சு”

சென்ற ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதி அறிவிக்கப்பட்ட டீமானிடைசேஷன் முடிந்து சரியாக ஒரு வருடம் ஆகிவிட்டது. இந்திய சரித்திரத்தில் பல நாட்களை மறக்க முடியாது. அதுபோல்தான் இந்த நாளும் அமைந்துவிட்டது. இந்த தினத்தை முன்னிட்டு ‘டீமானிடைசேஷன் ஆன்தம்’ என்ற பாடலை வெளியிட்டுள்ளனர். மீடியா மார்ஷல் தயாரிப்பில் எஸ். அருள் இயக்கியுள்ள படம் ‘தட்டுறோம் தூக்றோம்’ என்ற படத்துக்காக கபிலன் வைரமுத்துவின் வரிகளுக்கு பாலமுரளி பாலு இசையமைத்துள்ளார். பாடல் வரிகள் பிரதமர் மோடி கொண்டு வந்த பணமதிப்பு நீக்க நடவடிக்கையை விமர்சித்து எழுதப்பட்டுள்ளது, ஜிஎஸ்டியையும் விட்டுவைக்கவில்லை இவர்கள். ஏற்கனவே மத்திய அரசு கொண்டு வந்த ஜிஎஸ்டி திட்டத்தை விமர்சித்த ‘மெர்சல்’ படம் பாஜகவிடம் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Cinema

Your email address will not be published. Required fields are marked *

*