TamilSpy

பொழுது போக்கு இணையம்…

அறம் ரிலீஸ் தீபாவளிக்கும் இல்லை, ஏன்?

என்னதான் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டாலும், பொங்கல் தீபாவளி ரேஸ்சில் ஓடவே முடியாது என்ற நிலைதான் நயன்தாராவுக்கு. இவர் நடித்த ஹீரோயின் ஓரியன்டட் சப்ஜெக்ட் படங்களில் முதன்மையானதாக இருக்கும் என்று கருதப்பட்ட படம் அறம். க்ளீன் யு சான்றிதழ் வாங்கிய இப்படத்தை வருகிற தீபாவளியன்று வெளியிடலாமா என்று யோசித்ததாம் தயாரிப்பு நிறுவனம்.

இதில் கலெக்டராக நடித்திருக்கிறார் நயன்.

ஆழ் துளை கிணற்றில் விழும் குழந்தைகளுக்காக பரிந்து பேசும் படமும் கூட. ஆனால் பாய்ந்தடித்துக் கொண்டு தடுத்த விநியோகஸ்தர் வட்டாரம், “விஜய்யின் மெர்சல் படத்தோட மோதுனா காணாம போயிடுவீங்க.

ரிலீசை இன்னும் தள்ளிப் போடுங்க” என்று கூறிவிட்டதாம். மனசேயில்லாமல் தள்ளிப் போகிறார் நயன்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Cinema

Your email address will not be published. Required fields are marked *

*