TamilSpy

பொழுது போக்கு இணையம்…

ஹாலிவுட் ஒப்பனை கலைஞர், விஜய் சேதுபதியின் அடுத்த நகர்வு!

மக்கள்செல்வன் விஜய் சேதுபதி, சூப்பர் டீலக்ஸ், 96, ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன், சீத்தகதை போன்ற படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்து வருகிறார். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் இயக்குனர் பாலாஜி தரணீதரன் மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து இயக்கவிருக்கும் திரைப்படம்தான் சீத்தகதை.

இப்படத்தில் சேதுபதி, அய்யா என்கின்ற கதாபாத்திரத்தில் மேடை நடிகராக நடிக்கவிருக்கிறார். 75 வயது, 50 வயது, மற்றும் 35 வயது என்று மூன்று காலகட்டங்களில் வருகிறார் விஜய் சேதுபதி. படத்தின் முக்கிய கதாபாத்திரம் 75 வயது முதியவர், இவரைச் சுற்றிதான் மற்ற கதாபாத்திரங்களும் நகரும். இந்த முதியவர் தோற்றத்திற்காக படக்குழுவினர் கிரெக் கன்னோம் என்ற புகழ்பெற்ற ஹாலிவுட் ஒப்பனை கலைஞரைச் சந்திக்க லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றுள்ளனர்.

கிரெக் கன்னோம், மூன்றுமுறை ஆஸ்கர் விருது பெற்றவர். பாலிவுட்டில் ஷாருக்கான், ரிஷி கபூர் போன்ற நடிகர்களுக்கு ஒப்பனை கலைஞராக பணியாற்றியுள்ளார். சீத்தகதையில் சேதுபதியின் தோற்றத்தை வடிவமைத்துள்ளவர் பாகுபலி 2, 2.ஒ, சங்கமித்ரா போன்ற படங்களின் கருத்தியல் கலைஞர் ( conceptual artist ) விஸ்வநாத் சுந்தரம். இது கண்டிப்பாக விஜய் சேதுபதிக்கு ஒரு புதிய அனுபவமாக இருக்கப்போகிறது. அதுமட்டுமில்லாமல் இப்படம் மக்கள் செலவனுக்கு 25 வது படமும் கூட.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Cinema

Your email address will not be published. Required fields are marked *

*