TamilSpy

பொழுது போக்கு இணையம்…

இன்றைய ராசி பலன் 09-08-2017

மேஷம்: நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதகரிக் கும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமை யுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோ கத்தில் புது பொறுப்பை ஒப்படைப்பார். சிறப்பான நாள்.

ரிஷபம்: உங்கள் செயலில் வேகம் கூடும். உறவினர், நண்பர்கள் மத்தியில் அந் தஸ்து உயரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார் கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

மிதுனம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். பணவரவு திருப்தி தரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

கடகம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் தேவையற்ற அலைச் சலுக்கு ஆட்படுவீர்கள். அக்கம்-பக்கம் இருப்பவர் களை அனுசரித்து போங்கள். நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட் களால் விரயம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். போராட்டமான நாள்.

சிம்மம்: சவாலான வேலை களையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாண பேச்சு வார்த்தை வெற்றி யடையும். புது வேலை அமையும். வியாபாரத்தில் வேலையாட்கள் உதவு வார்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். திறமைகள் வெளிப்படும் நாள்.

கன்னி: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர், நண்பர் கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். அரசால் அனு கூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோ கத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அமோகமான நாள்.

துலாம்: குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். உறவினர்களின் அன்பு தொல்லை குறையும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். நினைத்தது நிறைவேறும் நாள்.

விருச்சிகம்: திட்டமிட்ட காரியங்கள் தடையின்றி முடியும். ஓரளவு பணவரவு உண்டு. வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். நன்மை கிட்டும் நாள்.

தனுசு: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்த வர்கள் பாசமழை பொழிவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட் களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். வெற்றிக்கு வித்திடும் நாள்.

மகரம்: கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்த கூச்சல், குழப்பம் விலகும். முகப்பொலிவு கூடும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.

கும்பம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் ஒரே முயற்சி யில் முடிக்க வேண்டிய விஷயங்களை பல முறை அலைந்து முடிப்பீர்கள். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். தானுண்டு தன் வேலை யுண்டு என்றிருக்க வேண்டிய நாள்.

மீனம்: சில காரியங்களை போராடி முடிக்க வேண்டி வரும். கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போங் கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பேசுங்கள். உத்யோகத் தில் வேலைச்சுமை அதிகரிக்கும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Raasi Palan

Your email address will not be published. Required fields are marked *

*