TamilSpy

பொழுது போக்கு இணையம்…

இன்றைய ராசி பலன் 27-07-2017

மேஷம்: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறை வேறும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. பயணங்கள் திருப்திகரமாக அமையும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள்.

மேஷம்: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறை வேறும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. பயணங்கள் திருப்திகரமாக அமையும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள்.

ரிஷபம்: முக்கிய பிரமுகர் களை சந்திப்பீர்கள். தாய் வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். நம்பிக்கைக்குரியவர்கள் உதவுவார்கள். யோகா, தியானம் என மனம் செல்லும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். நன்மை கிட்டும் நாள்.

மிதுனம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். முயற்சியால் முன்னேறும் நாள்.

கடகம்: குடும்பத்தில் கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.

சிம்மம்: மதியம் 2.45 மணி வரை ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் மறதியால் பிரச்னைகள் வந்து நீங்கும். உங்கள் வாயை சிலர் கிளறி வேடிக்கை பார்ப்பார்கள். அதிகம் பேச வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். மாலைப் பொழுதிலிருந்து தடை உடைபடும் நாள்.

கன்னி: அநாவசிய செலவு களை குறைக்கப் பாருங்கள். குடும்பத்தில் சின்னச் சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். சகோதர வகையில் அலைச்சல் உண்டு. வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். மதியம் 2.45 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் போராடி வெல்லும் நாள்.

துலாம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். வேற்று மதத்தவர் உதவுவார். வீடு, மனை வாங்குவது குறித்து ஆலோசனை செய்வீர்கள். எதிர்பாராத ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் மதிப்புக் கூடும். சிறப்பான நாள்.

விருச்சிகம்: பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை செலுத்துவார்கள். பழைய கடனை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். இனிமையான நாள்.

தனுசு: குடும்பத்தில் கலகலப் பான சூழல் உருவாகும். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். உறவினர்களிடம் உதவிகள் கிடைக்கும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். மகிழ்ச்சியான நாள்.

மகரம்: மதியம் 2.45 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் உணர்ச்சி வசப்படாமல் முடிவெடுக்கப்பாருங்கள். உங்கள் உறவினர்கள், நண்பர்களுடன் உரிமையுடன் பேசி பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். மாலைப் பொழுதிலிருந்து எதிர்ப்புகள் அடங்கும் நாள்.

கும்பம்: குடும்பத்தில் ஆரோக்யமான விவாதம் வந்துப் போகும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். மதியம் 2.45 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எச்சரிக்கை தேவைப்படும் நாள்.

மீனம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உங்கள் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். அமோகமான நாள்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Raasi Palan

Your email address will not be published. Required fields are marked *

*