TamilSpy

பொழுது போக்கு இணையம்…

இன்றைய ராசி பலன் 23-07-2017

மேஷம்: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வீடு, வாகனப் பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் லாபம் வரும். விவாதங்களில் வெற்றி பெறும் நாள்.

ரிஷபம்: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். தைரியம் கூடும் நாள்.

மிதுனம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன் – மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிட்டும். எதிர்பார்த்த பணம் வரும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. புத்துணர்ச்சி பெருகும் நாள்.

கடகம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.

சிம்மம்: சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியா வசிய செலவுகள் அதிகரிக் கும். சாலைகளை கவனமாக கடந்து செல்லுங்கள். வியாபாரத்தில் வேலையாட்களிடம் கனிவாகப் பழகுங்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

கன்னி: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். நாடி வந் தவர்களுக்கு உதவி செய்வீர்கள். நெருங்கி யவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். சிறப்பான நாள்.

துலாம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உறவினர், நண்பர்கள் சிலர் உங்கள் ஆலோ சனையை ஏற்பார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடு வீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். சாதிக்கும் நாள்.

விருச்சிகம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். குடும்பத்தில் இருந்த கூச்சல், குழப்பம் விலகும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.

தனுசு: சந்திராஷ்டமம் தொடங்குவதால் அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்து கொடுத் துப் போவது நல்லது. விமர்சனங்களை கண்டு அஞ்சாதீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.

மகரம்: உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். ஆடை, அணிகலன் சேரும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். அனுபவ அறிவால் வெற்றி பெறும் நாள்.

கும்பம்: பணப்புழக்கம் அதி கரிக்கும். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுக மாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அமோகமான நாள்.

மீனம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மை யானவர்களை கண்டறிவீர்கள். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். புதுத் தொழில் தொடங்குவீர்கள். கனவு நனவாகும் நாள்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Raasi Palan

Your email address will not be published. Required fields are marked *

*