TamilSpy

பொழுது போக்கு இணையம்…

மற்றவர்களை மிரட்டுகிறாரா விஷால்?

விஷால்னா என்ன கிள்ளுக்கீரைன்னு நினைச்சிங்களா, விஷால்டா… என்று மார்தட்டுவார்கள் போலிருக்கிறது. தமிழ்சினிமாவுக்கு நல்லது செய்தே ஆக வேண்டும் என்று வெறி பிடித்தார் போல பதவிக்கு வந்த விஷால், ராப் பகலாக அதே வேலையில் ஈடுபட்டு வருகிறார்.

தேர்தலுக்கு முன் அவரை கடுமையாக விமர்சித்த சிலரே கூட, ‘பையன் பரவால்லப்பா.

சங்க நன்மை ஒண்ணே போதும்னு சுத்தி சுத்தி வர்றாப்ல’ என்று சர்டிபிகேட் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

அப்படியிருந்தும் விஷால் எதிர்ப்பு ரத்தத்தை உடம்பு முழுக்க ஏற்றிக் கொண்டு திரியும் சிலர் சங்கடத்தை சைடு வழியா கொடுக்கலாம் என்று நினைத்து வரும்போது, அங்குதான் செக் வைத்தார் அவர்.

சங்க அலுவலகத்திற்குள் அனுமதியின்றி நுழைந்து அட்டகாசம் பண்ணும் நபர்களை ஃபில்டர் பண்ணுவதற்காகவே ஜிம் பாய்ஸ் இறக்கப்பட்டுவிட்டார்கள்.

எப்போதெல்லாம் விஷால் சங்கத்திலிருக்கிறாரோ, அப்போதெல்லாம் இந்த பாதுகாப்பு இருக்கிறது.

சத்தம்போட்டு பேசுனாலே, சட்டைய பிடிப்பானுங்களோன்னு இருக்கு என்கிறார்களாம் எதிர்கோஷ்டியினர். சிறப்பு…

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Cinema

Your email address will not be published. Required fields are marked *

*