TamilSpy

பொழுது போக்கு இணையம்…

ரஞ்சித் ரஜினி மனசில் இடம் பிடித்தது இதற்காகதான்

ரஜினி ஏன் ரஞ்சித் படத்திற்கு மீண்டும் கால்ஷீட் கொடுத்தார்? இவரை விட விறுவிறுப்பாக வேக வேகமாக படம் எடுக்கிற இயக்குனர்கள் ரஜினியை சுற்றி சுற்றி வர… இந்த மழுங்கிய பிளேடுக்கு ஏன் மறுபடி கால்ஷீட்?

இந்த கேள்வியை கேட்காத ஒரிஜனல் அக் மார்க் விமர்சகர்கள் இல்லவே இல்லை. ஆனால் அதற்கான விடை, இதோ ஒரு வாரம் நீட்டிப்பில் தெரிந்துவிட்டது. சுமார் ஒரு மாதம் ஃபுல் கால்ஷீட் கொடுத்து மும்பைக்கு போன ரஜினி, பத்து நாட்களுக்குள்ளாகவே, “என்னை ஆளை விடுங்க தம்பி. மிச்சத்தை சென்னையில செட்ல வச்சு எடுத்துக்கலாம்” என்று சொல்ல, எவ்வித மறுப்பும் சொல்லாமல் “சரி சார்” என்று அனுப்பிவிட்டார் பா.ரஞ்சித். இத… இத… இததான் வாய்ப்புக்கான காரணம் என்கிறது இன்டஸ்ட்ரி. கபாலி நேரத்தில் ரஜினியை ஒருபோதும் கஷ்டப்படுத்தவே இல்லையாம் ரஞ்சித். “இப்படி வாங்க. அப்படி நில்லுங்க. அந்தப்பக்கம் லுக் விடுங்க.கட்…” இதுதான் அதிகப்படியாக ரஜினியை வேலை வாங்குவது. இந்த சுலப சுலப சுக போகங்களுக்காகதான் மீண்டும் மீண்டும் கால்ஷீட்டாம்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Cinema

Your email address will not be published. Required fields are marked *

*