TamilSpy

பொழுது போக்கு இணையம்…

இன்றைய ராசி பலன் 17-06-2017

மேஷம்: நீண்டநாளாக சந்திக்க வேண்டுமென்று நினைத்த பிரபலத்தை இன்று சந்திப்பீர்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தையும் தந்து முடிப்பீர்கள். பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் அதிகாரி களுடன் நிலவி வந்த பனிப்போர் நீங்கும். நினைத்ததை முடிக்கும் நாள்.

ரிஷபம்: வீண் விவாதங்கள் நீங்கும். பழைய இனிய சம்பவங்கள் நினைவுக்கு வரும். சொந்த-பந்தங்கள் வீடு தேடி வருவார்கள். கடையை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

மிதுனம்: எதிர்பார்த்த வேலைகள் தாமதமாக முடியும். உறவினர்கள், நண்பர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

கடகம்: காலை 8.53 மணி வரை சந்திராஷ்டமம் இருப் பதனால் எதிலும் அவசரப்பட வேண்டாம். பிற்பகல் முதல் மனஉளைச்சல் நீங்கும். குடும்பத்தில் அமைதி திரும்பும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

சிம்மம்: காலை 8.53 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் சிலர் நன்றி மறந்து பேசுவார் கள். குடும்பத்தில் உள்ளவர்கள் தன்னை சரியாக புரிந்துக் கொள்ள வில்லை என்று நினைப்பீர்கள். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத் துவது நல்லது. வியாபாரத்தில் பங்குதாரர் களுடன் போராட வேண்டி வரும். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.

கன்னி: உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற் கான வழியை யோசிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பாச மழை பொழிவார்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப் படுவீர்கள். வியாபா ரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். சாதிக்கும் நாள்.

துலாம்: உங்கள் திறமை களை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மனைவி வழி உறவினர்கள் மதிப்பார்கள். தாயாரின் உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

விருச்சிகம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. பழைய கடன் பிரச்னைகள் தீரும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அலுவலகத்தில் அமைதி நிலவும். நினைத்தது நிறைவேறும் நாள்.

தனுசு: வர வேண்டிய பணம் கைக்கு வரும். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர் களிடம் சொல்லி மகிழ்வீர் கள். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோ கத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப் படும். திடீர் யோகம் கிட்டும் நாள்.

மகரம்: உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். யோகா, தியானம் என மனம் செல்லும். வியாபாரத் தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப் பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

கும்பம்: காலை 8.53 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் வீண் டென்ஷன் வந்து செல்லும். பிற்பகல் முதல் கணவன்- மனைவிக் குள் இருந்த மோதல்கள் விலகும். எதிர் பார்த்த பணம் வரும். உடல் நலம் சீராகும். உறவினர்களின் ஆதரவுக் கிட்டும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலித மாகும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

மீனம்: காலை 8.53 மணி முதல் ராசிக்குள் சந்திரன் செல்வதால் ஓய்வெடுக்க முடியாமல் உழைக்க வேண்டி வரும். கணவன்- மனைவிக்குள் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். முன்கோபத்தால் பகை உண்டாகும். வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களிடம் கனிவாக பழகுங்கள். உத்யோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. வளைந்து கொடுக்க வேண்டிய நாள்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Raasi Palan

Your email address will not be published. Required fields are marked *

*