TamilSpy

பொழுது போக்கு இணையம்…

இளைய சூப்பர் ஸ்டார் பட்டம் எனக்கு தேவையற்றது, நடிகர் சிவகார்த்தியன்!

குணச்சித்திர நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி நடித்து வெளிவர இருக்கும் “அதாகப்பட்டது மகாஜனங்களே” படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. அதில் தமிழ் திரையுலகத்தைச் சார்ந்த பலரும் கலந்து கொண்டனர். முக்கிய அழைப்பாளராக சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு பேசினார்.

இவ்விழாவில் வரவேற்புரை அளித்த நடிகர் விஜயின் மக்கள் தொடர்பாளர் மற்றும் புலி படத்தின் தயாரிப்பாளருமான பி.டி.செல்வகுமார், ‘சிவகார்த்திகேயன்’ ஒரு சிறந்த நடிகர், இளைய சூப்பர் ஸ்டார் என்று புகழாரம் சூட்டினார். அதைத் தொடர்ந்து பேசிய எஸ்.வி.சேகர், இளைய சூப்பர் ஸ்டார் பட்டம் அளித்தது தவறொன்றும் இல்லை. இந்த பட்டத்தைப் பற்றி ரஜினிக்கு தெரிந்தாலும் அவர் ஒன்றும் தப்பாக நினைத்து கொள்ளமாட்டார் என்று தெரிவித்தார்.

பின்னர் தொடர்ந்து பேசிய பல இயக்குனர்களும் சிவகார்த்திகேயனை புகழ்ந்து கூறினார்கள். இறுதியாக சிவகார்த்திகேயன் பேசியபோது, “என்னக்கு தெரியும் நான் எங்கிருந்து வந்தேன் என்று, எனக்கு அந்த பட்டம் வேண்டாம். அதற்கான ஆள் நானில்லை”. என் வேலைகளை சரியாக செய்து வருகிறேன், என் நடிப்பில் எதாவது தவறு இருந்தால் சொல்லுங்கள் திருத்திக் கொள்கிறேன், நன்றாக இருந்தால் வாழ்த்துங்கள். சினிமா ஒரு கடினமான தொழில். முதல் இரண்டு வருடங்கள் மிக கடினமாக இருந்தது. அந்த கடினத்தை தாண்டி வர வேண்டும். அப்பொழுது தான் வெற்றி பெற முடியும் என்று சிவகார்த்திகேயன் குறிப்பிட்டார்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Cinema

Your email address will not be published. Required fields are marked *

*