TamilSpy

பொழுது போக்கு இணையம்…

அரசியலுக்கு வருவேன்: ராகவா லாரன்ஸ் போட்டி

ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது என நடிகர் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார். மேலும் தேவை ஏற்பட்டால் அரசியலுக்கு வரத் தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ராகவா லாரன்ஸ், ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது. தாக்குதலில் இளைஞர்கள் பலர் காயமடைந்துள்ளனர். அவர்களுக்கு அரசு நிதியுதவி அளிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், கடந்த சில தினங்களாக நான் அரசியலுக்கு வருவது போன்ற செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. அது குறித்து தெளிவு படுத்தவே இந்த சந்திப்பு, தற்போதைக்கு அரசியலுக்கு வர வேண்டும் என்ற எண்ணம் இல்லை என்றாலும் அவசியம் ஏற்பட்டால் மாணவர்களுடன் இணைந்து அரசியலுக்கு வருவேன்.

இளைஞர்கள், மாணவர்கள் முடிவெடுத்தால் அனைத்து தொகுதியிலும் அரசியலில் நிற்போம் என்றும் கூறியுள்ள லாரனஸ், நாங்கள் வரவேண்டுமா இல்லையா என்பதை இளைஞர்கள்தான் முடிவு செய்வார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Tamizhagam

Your email address will not be published. Required fields are marked *

*