TamilSpy

பொழுது போக்கு இணையம்…

சர்வதேச திரைப்பட விழாவில் விஜய்சேதுபதியின் படம்

தமிழ் திரையுலகில் நாளுக்கு நாள் தனது நடிப்பையும், திறமையையும் தொடர்ந்து மெருகேற்றிக் கொண்டே இருக்கும் நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் விஜய் சேதுபதி. கடந்த ஆண்டு தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்த இவர்.. இந்த ஆண்டும் புரியாத புதிர், கவண், விக்ரம் வேதா போன்ற வித்யாசமான படங்களை கொடுக்க தயாராகி வருகிறார். அவ்வப்போது நடிப்போடு தயாரிப்பிலும் ஈடுபட்டு வரும் இவர்.. கடந்த 2015 ஆம் ஆண்டு ‘விஜய்சேதுபதி புரொடக்ஷன்ஸ்’ சார்பாக ‘ஆரஞ்சு மிட்டாய்’ என்ற படத்தை தயாரித்தார். அந்த படம் பெரிய வெற்றி படமாக இல்லையென்றாலும் விஜய் சேதுபதிக்கு ஒரு நல்ல தயாரிப்பாளர் என்ற அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.

இந்நிலையில் விஜய் சேதுபதி தயாரிப்பில் ‘மேற்குத் தொடர்ச்சி மலை’. என்ற மற்றொரு படமும் தற்போது திரைக்கு வர உள்ளது. லெனின் பாரதி இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படம் கேரள சர்வதேச திரைப்பட விழாவிலும், பஞ்சாபில் நடைபெற்ற பிரோஸ்கோப் குளோபல் ஃபிலிம் பெஸ்டிவலிலும் கலந்து கொண்டு பாராட்டுக்களைக் குவித்துள்ளது. மேலும் தற்போது திருச்சூரில் வரும் 3ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை நடைபெறவுள்ள சர்வதேச திரைப்பட விழாவில் ‘அறிமுக படம்’ என்ற பிரிவில் திரையிடப்பட உள்ளது. இதிலிருந்து விஜய் சேதுபதியின் நடிப்பு மட்டும் அல்ல, அவரது படைப்புகளும் சர்வதேச தரத்தில் உள்ளதாக அனைவரும் பாராட்டுகின்றனர்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Cinema

Your email address will not be published. Required fields are marked *

*