TamilSpy

பொழுது போக்கு இணையம்…

நடிகர் லாரன்சுக்கு அடி விழுந்தது?

மெரீனா புரட்சியில் மூன்றாவது நாளாக வந்துதான் கலந்து கொண்டார் ராகவா லாரன்ஸ்.

ஆனால் கடைசியில் போராட்டமே அவர் தலைமையில்தான் நடந்தது போல கிரியேட் செய்துவிட்டார்கள்.

ஒருவகையில் இது லாரன்சுக்கு ப்ளஸ்தான். போகட்டும்… நாம் சொல்ல வந்தது அதுவல்ல. அவருக்கு கழுத்துவலி வந்தது எப்படி என்பது குறித்துதான்.

இவர் நடித்து விரைவில் திரைக்கு வரும் சிவலிங்கா படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் ரித்திகா.

அடிப்படையில் இவர் இந்தியாவுக்காக தங்கம் வென்ற குத்து சண்டை வீராங்கனை.

படத்தில் இவர் லாரன்சை எட்டி உதைப்பது போல ஒரு சீன். அடக்க ஒடுக்கமாகதான் காலை நீட்டினாராம்.

அதுவே இவ்வளவு பலமாக லாரன்சை படுக்க வைத்துவிட்டது. இந்த கழுத்துக் காலரை அவர் சுமார் மூன்று மாதங்களுக்காவாவது பயன்படுத்தினால்தான் பிரச்சனை தீருமாம்.

நடுவில் இந்த போராட்டம் வேறு. லத்தியால் அடி வாங்க வேண்டிய விதியைதான் ரித்திகா முன் கூட்டியே தடுத்திருக்கிறார் போலிருக்கிறது!

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Cinema

Your email address will not be published. Required fields are marked *

*