TamilSpy

பொழுது போக்கு இணையம்…

அரசியல் வேணாம்… ஆனா வேணும்! கமல்

மனதில் பட்டதை மளக் மளக்கென பேசினாலும், அதில் கொஞ்சம் இடியாப்பத்தையும் போட்டு பிசைந்து பேசுவது கமல் ஸ்டைல்!

ஆனால் சுப்ரமணியசாமி விவகாரத்தில் அவர் தமிழர்களை ‘பொறுக்கி’ என்று விமர்சித்தது கமல்ஹாசனை நிறையவே கொதிக்க வைத்துவிட்டது.

தன் சிலேடை வார்த்தைகளால் சுப்புணியை உண்டு இல்லை என்றாக்கிவிட்டார்.

இதையெல்லாம் கருத்தில் கொண்ட மீடியா, “ஏதும் அரசியலுக்கு வர்ற திட்டம் இருக்கா?” என்றொரு கொக்கியை போட்டது.

பல மாதங்கள் கழித்து ஆழ்வார்பேட்டை வீட்டில் நிருபர்களை சந்தித்தபோதுதான் இந்த கேள்வி.

ஏற்கனவே காத்திருந்ததை போல படக்கென்று பதில் சொன்னார் கமல். “அரசியலை விட்டு யாரும் விலகியிருக்க முடியாது.

அப்பப்ப வந்துட்டு உடனே வெளியில் போயிடணும். அங்கேயே இருக்கிறேன்னு வந்தால்தான் சிக்கல்.

நமக்கு முழு நேர அரசியல் பண்ணத் தெரியாது. நேரமும் இல்லை” என்றார் திட்டவட்டமாக.

ஆனால் நிருபர்கள் கலைந்து போன சில நிமிஷங்களில் அங்கு வந்தவர் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.

இருவரும் மணிக்கணக்காக பேசினார்கள். அரசியல் பேசாம வேற என்ன பேசியிருக்கப் போறாங்க? ஒருவேளை சுப்ரமணியசாமி விவகாரத்தில் சமாதானம் நடந்ததோ என்னவோ?

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Cinema

Your email address will not be published. Required fields are marked *

*