TamilSpy

பொழுது போக்கு இணையம்…

இதுதான்டா கொடுமை?

த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா என்றுதானே நினைத்திருப்பீர்கள்? அதுதான் இல்லை. ‘த்ரிஷா இல்லேன்னா பிந்துமாதவி’ என்றாகிவிட்டது என்று ஜோடியின் நடவடிக்கை.

வருண்மணியன் என்கிற பிரபல தொழிலதிபரோடு திருமணம் நிச்சயிக்கப்பட்ட த்ரிஷாவுக்கு, கல்யாண பிரப்தம் கடைசி நேரத்தில் நழுவி விட்டது.

பழம் நழுவி பாலில் விழுகிற மாதிரியான நல்ல விஷயமல்ல இது. ஆனால், நல்லதை போல டேக் இட் ஈஸியாகிவிட்டார் த்ரிஷா. வெகு காலம் கழித்து இப்போதுதான் அந்த திருமணம் ஏன் பிரேக் ஆனது என்பதற்கான பதிலையே சொன்னார்.

போகட்டும்… இப்போதைய நிலைமை என்ன? த்ரிஷா இல்லேன்னா பிந்துமாதவி என்று செட்டில் ஆகிவிட்டார் வருண்மணியன்.

இருவரும் நெருக்கமாக திரிகிற ஸ்டில்லை அவரே வலைப்பக்கத்தில் வெளியிட, கோடம்பாக்கம் இந்த கல்யாணத்திற்காகவாவது இன்விடேஷன் அச்சேறுமா என்று ஜோசியம் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Cinema

Your email address will not be published. Required fields are marked *

*