TamilSpy

பொழுது போக்கு இணையம்…

தற்பெருமை டி.ஆருக்கு இதுவும் பெருமைதான்

சும்மாவே தற்பெருமை தாங்காது டி.ராஜேந்தருக்கு. நான் மூன்று முதல்வர்களை எதிர்த்தவன் என்பதை லட்சத்தி பதினொரு தடவையாக அவர் சொல்வதை விழுந்து விழுந்து சிரித்தபடியேதான் கேட்டுக் கொண்டிருக்கிறது அரித்துப்போன காதுகள்.

ஜல்லிக்கட்டு விஷயத்தில் சிம்புவுக்காக கூடிய கூட்டத்தில், இவரும் மைக்கை பிடித்து அந்த கட்டு இந்த கட்டு வந்த கட்டு நொந்த கட்டு என்று என்னென்னவோ உளறிக் கொட்ட, சிம்பு வாழ்க என்று கோஷமிட்டுவிட்டு கலைந்தது கூட்டம்.

மாணவர்களுக்கு சப்போர்ட் விஷயத்தில் முன்னர் ஓரளவு நல்ல பெயர் எடுத்துவிட்டிருந்த சிம்புவுக்கு அவரது அப்பாவே முள் வைப்பார் போலிருக்கிறது.

என் மகன் சிம்பு முன்னெடுத்த போராட்டம்… இன்று இந்தளவுக்கு நாடு முழுக்க வளர்ந்திருக்கு என்றால் எனக்கு பெருமைதான் என்று அவர் சொல்ல, நல்ல வாடி வாசலா பார்த்து முட்டிக்க வேண்டியதுதான் என்ற முடிவோடு அலங்காநல்லூருக்கே கிளம்பிவிட்டது காதுகொடுத்து நொந்து போன ஜனம். பின்னர் நடந்தவை எல்லாம் ஊரறிந்ததே.

கடுகு எவ்வளவு குதிச்சாலும் சட்டிய விட்டு தாண்டாது தலைவா… பார்த்துக்கோ!

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Cinema

Your email address will not be published. Required fields are marked *

*