TamilSpy

பொழுது போக்கு இணையம்…

பொன்சேகா வெற்றி பெற்றால் ஜே.வி.பி விரும்புமா?

jvpசரத்பொன்சேகா வெற்றி பெற்றால் ஜ.தே.க ஆட்சி அமைப்பதை ஜே.வி.பி விரும்புமா? ஜெனரல் சரத் பொன்சேகாவின் அரசியல் பிரவேசம், அரசுக்கு விரோதமான தீவிர சக்திகளுக்கு இடையில் புத்துணர்வை ஏற்படுத்துவதற்குக் காரணமாகியிருந்தாலும் எதிர்காலப் பயணத்திற்கான பலமிக்கதொரு அரசியல் புறச்சூழலை கட்டமைத்துக் கொள்வ தற்கு அவர் இன்னமும் திறன்பெற்றிருப்பதா கத் தென்படவில்லை.

பிரிவினைவாதம்
ஐ.தே.கட்சியின் கூட்டணி மற்றும் ஜே. வி.பி. தரப்பின் பொது வேட்பாளரென்ற இரண்டு பாத்திரங்களையும் ஒன்றாகவே ஏற்று சரத் பொன்சேகா ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடுகிறார். ஆனாலும், ஜே.வி.பிக்கும் ஐ.தே.கட்சிக்குமிடையில் அரசியல் இணக் கமொன்று ஏற்படவில்லை. ஐ.தே.கட்சிக் கூட் டணியின் சார்பாக ஜெனரல் சரத் பொன்சேகா போட்டியிடுவதை ஜே.வி.பி. விரும்பியிருக் கவில்லை. முழுமையாகவே எதிர்த்தது.
எனவே, இவ்விரு கட்சிகளுக்கும் தொடர் பில்லாத பதிவு செய்யப்பட்ட மூன்றாந்தரப்பு கட்சிச் சின்னமொன்றைத் தேடிக்கொள்ள வேண்டிய அவசியம் ஜெனரலுக்கு ஏற்பட்டது. ஜெனரல் சரத் பொன்சேகா வெற்றிபெறுவாரானால், நாடாளுமன்றத்தைக் கலைத்து புதிதாக நிறுவப்படும் தற்காலிக அரசின் பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்க வேண்டு மென்பதே ஐ.தே.கட்சியின் கூட்டு முன்னணி விதித்துள்ள நிபந்தனைகளுள் ஒன்றாகும். ஜெனரல் சரத்பொன்சேகாவால் மேற்படி நிபந்தனை ஏற்றுக்கொள்ளப்பட்ட போதிலும், ஜே.வி.பி. விடுத்த அழுத்தம் காரணமாக அந்த நிபந்தனையைக் கைவிடவேண்டிய நிலைக்கு ஜெனரல் தள்ளப்பட்டார்.

ஜெனரல் சரத் பொன்சேகாவின் அரசியல் பிரவேசத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பாக ஜே.வி.பியால் கொழும்பு “ஹைற் பார்க்”கில் ஒழுங்கு செய்யப்பட்ட பேரணியில் வைத்து, ஜெனரல் சரத் பொன்சேகாவின் வெற்றியை அடுத்து நிறுவப்படவிருக்கும் தற்காலிக அரசு பிரதமரொருவர் அமையாத தற்காலிக அரசொன்றாகவே இருக்குமென்பதாக ஜே.வி.பி. பேச்சாளர்கள் திடமான குரலில் கருத்து வெளிப்படுத்தி நின்றனர். ஜெனரல் சரத் பொன்சேகா கூட்டியிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போது, பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பாக எழுப்பப்பட்ட வினாவொன்றுக்குப் பதில் வழங்கிய ஜெனரல் சரத்பொன்சேகா, ஐ.தே.கட்சியினரிடத்தே நல்லதொரு பொருளாதாரச் செயற்றிட்டம் தென்படுவதால், அவர்களுடனும் கூட பேச்சுகளை மேற்கொண்டு அது தொடர்பானதொரு செயற்றிட்டம் உருவாக்கப்படுமென்பதாகத் தெரிவித்திருந்தார். இருந்த போதிலும், ஜெனரலின் அப்பதில் ஜே.வி.பியின் அதிருப்திக்கு உள்ளாகியிருப்பது தெளிவாகவே தெரிகிறது. இனப்பிரச்சினை தொடர்பாக அவர் வெளிப்படுத்திய கருத்தும் கூட ஜே.வி.பிக்கு திருப்தியளிப்பதாக அமையாது. அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு அப்பால் செல்லுமொரு தீர்வே வழங்கப்படவேண்டியுள்ளது என்பதே ஜெனரல் சரத் பொன்சேகாவின் கருத்தாகியுள்ளதோடு, அதை, ஐ.தே.கட்சியின் கருத்தாகவே கொள்ளமுடியும். ஆனாலும் கூட அத்தகைய கருத்தொன்றுக்கு இணங்கிக் கொள்ளும் ஆற்றல் ஜே.வி.பிக்கு இல்லை.

இன்றைய அளவில் காணப்பட்டுள்ள இணக்கத்துக்கு அமைய, ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஒத்துழைப்பு வழங்கி நிற்கும் அரசியல் கட்சிகள் பொதுவான ஒரே மேடையில் தோன்றமாட்டா. இந்நிலையில் ஜெனரல் சரத் பொன்சேகா வெவ்வேறான இரண்டு மேடைகளில் நின்றே மக்களைச் சந்திக்க வேண்டி நேர்ந்துள்ளது. இவ்விரு தரப்புகளும் பரஸ்பரம் வேறுபட்டு நிற்கும் நிலைப்பாடானது ஜெனரல் சரத் பொன்சேகாவின் தேர்தல் செயற்பாட்டைப் பலவீனப்படுத்திவிடுவதற்குப் பெரிதும் சாதகமாக அமைவதைத் தவிர்க்க இயலாது போகலாம்.

இதற்கு முன்னரும் கூட, ஜே.வி.பி. தரப்பு வேறும் அரசியல் கட்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி நின்றுள்ளது. ரணில் விக்கிரமசிங்கவின் அரசைக் கவிழ்த்து விடுவதற்கு சுதந்திரக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அவர்கள் நாடாளுமன்றத் தேர்தலொன்றில் இணைந்து போட்டியிட்டதோடு மட்டுமல்லாமல் பொதுவான ஒரேமேடையில் தோன்றி மக்களைச் சந்தித்தனர். அதன்பின்னர் கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ஷவுக்கும் கூட ஒரே அரசியல் மேடையில் நின்றே ஒத்துழைப்பு வழங்கினர்.
ஆனால், இன்றைய அளவில் மட்டும் தமது அக் கொள்கையினின்றும் விலகித் தமதேயான அரசியல் மேடை என்பதாக வரையறுத்துக்கொண்டு பொது வேட்பாளருக்கு ஒத்துழைப்பு வழங்கும் கொள்கையைக் கடைப்பிடிக்க வேண்டிய நிலை ஜே.வி.பிக்கு ஏற்பட்டுள்ளது. இப்பிரிவினைவாதப் போக்கைக் கட்டுப்படுத்திவிட இயலாது போனமையாகிப் போனதொரு நிலையே ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு இன்று ஏற்பட்டுள்ளது.

இத் தேர்தல் போராட்டத்தில் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்குப் பெரிதும் முக்கியத்துவம் பெறுவது, ஜே.வி.பியின் இரும்புக் கேடர்களால் அடித்தளம் அமையப்பெற்ற அரசியல் இயந்திரமேயாகும். வெற்றிகரமான தேர்தல் செயற்பாடு தொடர்பாக ஆரம்பம் முதல் தேர்தல் முடிவுறும் கட்டம் வரையிலும் முழுமையான கருமமாற்றும் தரப்பொன்று செயற்படுவது இன்றியமையாததொரு நிபந்தனையாகும். இங்கு, தமக்கென்றொரு கட்சி இல்லாத நிலையிலேயே ஜெனரல் சரத் பொன்சேகா போட்டியிட வேண்டி நேர்ந்துள்ளது. ஜே.வி.பி. தரப்பின் மூலமாகவே ஜெனரல் அக்குறையை நிரப்பிக்கொள்ள வேண்டியுள்ளது. ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஐ.தே.கட்சி முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுவதற்கு அதன் வசமுள்ள வாக்கு வங்கியே காரணமாகிறது. அவ்விதமாக ஜே.வி.பியின் அரசியல் இயக்கத்தின் பலத்தையும், ஐ.தே.கட்சியின் வாக்குவங்கியின் பலத்தையும் பயன்படுத்திக்கொண்டு இந்த ஜனாதிபதித் போட்டியில் வெற்றிபெறுவதே ஜெனரலின் எதிர்பார்ப்பாகியிருந்த போதிலும் இவ்விரு கட்சிகளிடையே நிலவும் பரஸ்பரங்கள் அதற்குத் தடையாக நிற்கும் சான்றுகளாகச் செயற்படுகின்றன என்பது தெரிகிறது.
இத்தகையதொரு பின்புலத்தில் ஜே.வி.பியிடமிருந்தும், ஐ.தே.கட்சியிடமிருந்தும் பெற்றுக்கொள்ளும் சிறகுகளைக் கொண்டே அவற்றின் ஆதாரத்திலேயே ஜெனரல் சரத் பொன்சேகா பறந்து செல்லவேண்டியுள்ளது. ஐ.தே.கட்சிச் சிறகின் பறப்பியல்புக்குப் பொருந்தும் விதத்தில் சிறகை அசைப்பதற்கு ஜே.வி.பியின் சிறகு தயாரில்லையென்றாகும் போது அல்லது ஜே.வி.பி. சிறகின் பறப்பியல்புக்குப் பொருந்தும் விதமாக அசைவதற்கு ஐ.தே.கட்சியின் சிறகு தயாரில்லை யென்றாகும் போது, ஜெனரல் சரத் பொன்சேகா வானில் பறந்து செல்லும் பயணம் வெற்றியளிக்காதிருக்க இடமுள்ளது. இயந்திரத்தின் தேவைகளுக்கு ஏற்றவாறு இரு சிறகுகளினதும் தண்டியை நிர்வகிக்க இயந்திரம் திறனற்றுப் போகுமானால், அத் தோல்விநிலையை, சிறகுகளின் கோளாறாக மட்டும் மக்கள் நோக்கமாட்டார்கள். இயந்திரத்திலும் கூட கோளாறு இருப்பதாகவே கருதுவார்கள். இக்குழப்பமான நிலைப்பாடு மேலும் வளர்ச்சியுறுவதற்கு இடமளிக்காது. அந்த மாறுபாடான நிலைப்பாட்டை நிர்வகித்து கட்டுக்குள் கொண்டுவர இயலாது போகுமானால் ஜெனரல் சரத் பொன்சேகா தோல்வியுற்றதொரு தலைவராக வரலாற்றில் இடம்பெறும் அபாயமும் கூட உள்ளது.
யுத்தம் புரிவதை விட அரசியல் என்பது நீள,அகல, ஆழம் கொண்டதாகும். யுத்தத்தின் போது கட்டளைகளைப் பிறப்பித்தல், கட்டளைகளைப் பின்பற்றுதல் மட்டுமே வழமையாகும். அரசியலில் கட்டளைகளைப் பிறப்பிப்பதால் மட்டுமே பரஸ்பர விரோதம் கொண்ட அரசியல் தீவிர சக்திகளை ஒருங்கிணைந்து செயற்படும் நிலைக்குள் கொண்டுவந்து நிறுத்திவிட இயலாது. அது தொடர்பான காரணிகளைத் தெளிவுபடுத்திக் காட்ட வேண்டியுள்ளது. பேச்சுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. வாத விவாதங்கள் இடம்பெற வேண்டியுள்ளன. இவ்விதமாக அது, யுத்தமொன்றில் கட்டளைகளைப் பிறப்பிப்பதை விட நீள, அகலமானதும் ஆழமானதுமானதொரு செயற்பாடாகும். எனவே, ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு திறமையான அரசியல் தலைவரொருவராகிவிடுவதற்கான ஆற்றல் உள்ளதா இல்லையா என்ற வினா உரைகல்லிலிட்டு உரைத்துப் பார்க்கப்படப் போவது எதிர்காலத்திலல்ல. இப்போதே இன்றைய இத் தேர்தல் களத்திலேயேயாகும்.

ஐ.தே.க. ஆட்சியை ஜே.வி.பி. விரும்புமா
இன்னமும் பகிரங்கத்துக்கு வராத சிக்கல்களும் குழப்பங்களும் ஜே.வி.பியினுள் போன்றே ஐ.தே.கட்சியினுள்ளும் நிலவுகின்றன. ஜே.வி.பியைப் பொறுத்தவரையில், தாம் பதவியில் அமர்த்திவிட்ட மஹிந்த ராஜபக்ஷவைத் தோற்கடித்து அவரைத் தண்டனைக்கு உள்ளாக்கிவிடும் அவசியமே உள்ளது. இருந்தாலும் அதன் பெறுபேறாக ஆட்சிக்கு வருவது ஐ.தே.கட்சியாக இருப்பின் தமது அரசியல் ஆதரவாளர்கள்முன், முகம் கொடுக்க இயலாத சிரமமிக்க சிக்கலைத் தாம் எதிர்கொள்ள வேண்டி நேருமென்பதையும் ஜே.வி.பியினர் அறிவார்கள்.

ஜே.வி.பியின் அரசியலுக்கேயுரிய பெரும் பலவீனமாகக் கருதவேண்டியிருப்பது, அதன் பார்வையானது தாம் தெரிவு செய்துகொண்ட அரசியல் எதிரி குறித்து ஏற்படும் பீதியின் மீது பதிந்துள்ளதேயாகும். ஏனெனில், ஜே.வி.பியானது, நாட்டிலுள்ள மிகத் தீயதான அரசியல் தீவிர சக்தியாக ஐ.தே.கட்சியைத் தனது உறுப்பினர்களுக்கு வரைந்து காட்டியிருந்ததே அதற்குக் காரணமாகும். அதற்கமைய, ஐ.தே.கட்சியானது ஒருபோதும் மன்னித்துவிட இயலாததொரு துஷ்டத் தனமான மற்றும் தேசத்துரோக அமைப்பொன்றாகிறது. அந்த வகையில், ஜே.வி.பி. தனது உறுப்பினர்கள் மத்தியில் ஐ.தே.கட்சி குறித்த அருவருப்பையும் பகையுணர்வையுமே வளர்த்து விட்டுள்ளது. இங்கு, மஹிந்த ராஜபக்ஷ தோற்கடிக்கப்படுவதைக் காண்பதென்பது ஜே.வி.பி. உறுப்பினர்களுக்கு விருப்பமானதொன்றே. ஆனாலும் அதன் பெறுபேறொன்றாக ஜே.வி.பியினால் பயங்கரமானதொரு இராட்சதனாக உருவகப்படுத்திக் காட்டப்பட்ட ஐ.தே.கட்சி மீளவும் ஆட்சிக்கு வருவதைக் காண்பதற்கு விரும்பும் ஆற்றல் அவர்களிடம் இருக்க மாட்டாது. அதை எதிர்பார்க்க இயலாது.
எனவே, தமது அரசியல் திட்டத்தினுள் மஹிந்த ராஜபக்ஷவைத் தோற்கடித்து விடுவதற்கு மேலதிகமாக, அதன் பெறுபேறொன்றாக ஐ.தே.கட்சி மீளவும் அதிகாரத்துக்கு வருவதைத் தடுத்து நிறுத்தும் கடப்பாடொன்றும் தமக்குண்டு என்ற செய்தியை மிக வலுவாகத் தனது உறுப்பினர்களின் கரங்களுக்கு எட்டச் செய்துவிடும் அவசியமும் ஜே.வி.பிக்கு நேர்ந்துள்ளது. அவர்கள் அது தொடர்பாகத் தமக்குள் கட்டமைத்து வரும் தர்க்கவாதமாக இருப்பது, தமது வேலைத்திட்டத் தினுள் மஹிந்தவைத் தோற்கடிப்பதற்கு அவசியப்படும் மேலதிக வாக்குப் பலத்தை ஐ.தே.கட்சியிடமிருந்து பெற்றுக்கொண்டாலும், ஜெனரல் சரத் பொன்சேகாவின் வெற்றியின் பின்னர் மஹிந்த ராஜபக்ஷவால் இழக்கப்படும் சுதந்திரக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் வென்று தம்மால் இயங்கிச் செல்லத்தக்கதான முற்போக்கு அரசொன்றைத் தாம் நிறுவுவோம் என்பதாகும். இந்த வித்தையைப் பலத்துடன் முன்னெடுத்துச் செல்வது தொடர்பாகப் பொது வேட்பாளருக்காக முன்னெடுத்துச் செல்லும் தேர்தல் போராட்டத்தில் ஐ.தே.கட்சிக்குத் தீவிரமான விரோதம் காட்டி நிற்கும் கொள்கையைக் கடைப்பிடிக்க வேண்டிய நிலை ஜே.வி.பிக்கு ஏற்படக் கூடும். அந்த நிலைப்பாடானது ஜெனரல் சரத் பொன்சேகாவின் தேர்தல் போராட்டக் களத்தைக் குழப்பத்துக்குள்ளாக்கிவிடக் காரணமாவதைத் தவிர்க்க இயலாது போகலாம். அத்தகைய குழப்பங்களுக்கு மத்தியிலும் கூட ஜெனரல் சரத் பொன்சேகா தேர்தல் போராட்டத்தில் வெற்றிவாகை சூடிக்கொள்ள திறன் பெற்றிருந்தாலும், ஜே.வி.பியானது உறுதியான நிர்வாகமொன்று கட்டமைவதைக் குழப்பித் தடுத்து நிறுத்திவிடும் வேகத்தடையொன்றாகச் செயற்படுவதைத் தவிர்க்க இயலாது போகலாம்.

அரசுகளைக் கவிழ்த்து விடும் செயற்பாட்டில் பயன்படும் நல்லதொரு சகா என்றவாறே ஜே.வி.பி. இன்று வரையிலான தனது பயன்பாட்டில் அந்த அமைப்பை நிரூபித்துக் காட்டியுள்ளது, அரசுகளைக் கட்டமைத்துவிடும் செயற்பாடொன்று தொடர்பாகப் பயன்படுத்திக் கொள்ளத்தக்க நம்பகமான பங்காளி என்பதாக அல்ல. ரணில் விக்கிரமசிங்கவின் நாடாளுமன்ற அரசைக் கவிழ்த்து விடுவதற்காக ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்கிச் செயற்பட்டதோடு நில்லாது 2004 ஆம் ஆண்டின் நாடாளுமன்றத் தேர்தலின் போது, சுதந்திரக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து, ஐ.தே.கட்சியை மண்கௌவச் செய்யும் விதமாக அது, காத்திரமாகச் செயற்பட்டிருந்தது. அதன் பெறுபேறாகக் கட்டமையும் புதிய கூட்டணி அரசினுள் அதிக நாட்களுக்கு நிலைத்து நிற்கும் திறனாற்றல் ஜே.வி.பிக்கு அமைந்திருக்கவில்லை. பின்னர் மீளவும் 2005 இல் ஜனாதிபதித் தேர்தலின்போது மஹிந்த ராஜபக்ஷவைப் பதவியில் அமர்த்திவிடும் தேர்தல் போராட்டத்தில் தெளிவாகத் தெரியும் விதத்தில் அது தனது கருமத்தை நிறைவேற்றி முடித்தது. இருந்தபோதிலும், அந்த அரசிலும் கூட ஜே.வி.பியானது நம்பகமானதொரு பங்காளியாகியிருக்கவில்லை. ஜே.வி.பியின் இந்த மரபு வழித் தர்மம், சரத் பொன்சேகா விடயத்திலும் கூட தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

தர்மங்கள் தொடர்பாக அரசியல் கட்சிகளுக்கிடையிலான பொதுவான இணக்கப்பாட்டைப் பெறுவதாகவே அமைந்திருந்தது. அதன்பின்னரே நாடாளுமன்றக் கலைப்பு, நாடாளுமன்றத்தேர்தல் என்பன இடம் பெற்றன. பின்னர் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் ஒருங்கிணைந்த அரசொன்று ஐந்தாண்டு காலத்துக்கு நிறுவப்பட்டு, இணக்கம் காணப்பட்டிருந்த அடிப்படைத் தர்மங்கள் மீதான புதிய அரசமைப்பொன்று கட்டமைக்கப்பட்டது.
இந்த அரசமைப்பு ஆக்கம் தொடர்பாகப் பொதுமக்களிடமிருந்து மட்டும் கிட்டியிருந்த கருத்துக்கள் உள்ளடங்கிய கடிதங்களின் எண்ணிக்கை மூன்று மில்லியன்களை எட்டியிருந்தன. இவ் அரசமைப்பு ஆக்கத்தின் போது, அரசமைப்புக் கட்டமைப்பாளர்களினால் பொதுமக்களின் கருத்துகளும் கூட நுணுக்கமாக ஆராயப்பட்டன. இவ்விதமானதொரு மார்க்கமே எம்மாலும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டியுள்ளது.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழித்து விடுவதுதொடர்பாக ஜெனரல் சரத்பொன்சேகா வெளிப்படுத்தியுள்ள கருத்துகளில் குறைபாடொன்றும் உள்ளது. அதாவது, அதற்குப் பதிலாக ஏற்படுத்தப்படும் புதிய முறைமை எது? எவ்விதத்திலானது என்பதை அவர்தெளிவுபடுத்தாததேயாகும். ஆனாலும், ஐ.தே.கட்சியிடம் அதுபற்றி சராசரிக் கருத்தொன்றுஉள்ளது. அதாவது, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமைக்குப் பதிலாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் தலைமையிலான நாடாளுமன்ற அரசமைப்பொன்று உருவாக்கப்படுமென ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இப்பிரதமரும் கூட மக்களால் நேரடியாகத் தெரிவு செய்யப்படுகிறார். இங்கு, ஜே.வி.பியும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை இல்லாதொழிக்கப்படுமெனக் கூறி வந்தாலும் கூட , அதற்குப் பதிலாக ஏற்படுத்தப்படவுள்ள முறைமை எது வென்பது பற்றித் தெளிவுபடுத்தவில்லை. மறுபுறத்தில் அனைத்துக் கட்சி மாநாட்டின் சார்பாகக் கருத்து வழங்கியுள்ள கலாநிதி திஸ்ஸ வித்தார ணவோ, நிலவும் தேர்தல் முறைமையை மாற்றியமைத்து முன்னர் நாட்டில் நிலவிய “வெஸ்மினிஸ்ரர்’ நாடாளுமன்ற முறை மையையொத்த அரசமைப்பொன்று உரு வாக்கப்படவேண்டியுள்ளதாகத் தெரிவித் துள்ளார்.
கபடம் மற்றும் துஷ்டத்தனமானதொரு அரசமைப்பையே இந்த நாடு கொண்டுள்ளது. நிர்வாகத்திலிருப்போருக்கு பொது வளங்களைச் சூறையாடுவதற்கான உரிமையையும் அதிகார பலத்தையும் அவர்களுக்கு வழங்கி நிற்பதே இந்த அரசியல் முறைமையில் காணப்படும் மிக தீய இலட்சணமாகும்.

1977 ஆம் ஆண்டு முதலாக இன்று வரையிலும் நிர்வாகம் செலுத்தியுள்ள அனைத்துத் தரப்புகளும் நாட்டை நிர்வகிப்பதற்கு மேலதிகமான அதிகபட்ச ரீதியில் பொதுவளங்களைச் சூறையாடும் கருமத்தையே நிகழ்த்தியுள்ளன. இந்த சீர் கெட்ட முறைமை மாற்றி யமைக்கப்படுவது இன்றியமையாதது. இதிலிருந்து கூடப் புலப்படுவது, இத்துறை தொடர்பாக காத்திரமான கருத்தொன்று இந்த எந்தவொரு அரசியல் கட்சியிடத்தும் இல்லையென்பதல்லவா ?
மறுபுறத்தில், ஜெனரல் சரத்பொன்சேகாவைப் பொறுத்தவரையில் அரசியலுக்கு அவரொரு புதுமுகம் என்பது அவருக்கு அமையும் பெரும் பலத்தைப் போன்றே அதைப் பெரும் பலவீனமொன்றாகவும் கருதமுடியும். வழிவழி வந்த அரசியல் வாதியொருவரிடம் சாதாரணமாகத் தென்படும் வேண்டாத சீர்கேடுகள் இவரிடம் தென்படாமை அவர் மக்களால் வரவேற்கப்படுவதற்குக் காரணமாகியுள்ளது. மறுபுறத்தில், அரசியலுக்கு அவர் புதுமுகமென்பது அவரது பயணத்தைச் சிரமமிக்கதாக்கிவிடும்.
போர்க்கலையில் ஜெனரல் பொன்சேகா களம் பல கண்ட பழுத்த அனுபவசாலியாக இருந்தாலும்கூட, அரசியல் துறையில் எவ்வித அனுபவங்களும் இல்லாத புதியவரே. அரசியலில் பிரவேசிக்கும் காத்திரமான எண்ணம் அவருள் முகிழ்திருந்திருக்குமானால், யுத்த வெற்றியை அடுத்து தமது சேவையின்றும் ஓய்வு பெற்று, அரசியல் துறை சார்ந்த நிபுணத்துவத்தையும் அனுபவங்களையும் கற்றுத் தேர்ந்துள்ள, கற்றறிந்த அறிவு சார் தரப்பினருடன் பணியாற்றி, தமதேயானதொரு அரசியல் அமைப்பை உருவாக்கிக் கொள்ளும் அளவுக்குச் செயற்பட்டிருந்திருக்க வேண்டியிருந்தது. அவ்விதம் செயற்பட்டிருந்திருப் பாரானால், இரண்டு கட்சிகளிடமிருந்து கடனாகப் பெற்றுக்கொண்ட ஒன்றுக்கொன்று மாறுபட்ட தன்மைகளைக் கொண்ட சிறகுகள் இரண்டுக்குப் பதிலாக தனதேயான இரு சிறகுகளால் பறந்து செல்லும் ஆற்றலை அவர் பெற்றிருக்க முடிந்திருக்கும்.

இன்றைய, இச் சந்தர்ப்பத்தில் ஜெனரல் சரத்பொன்சேகா முகம் கொடுக்க வேண்டி நேர்ந்திருக்கும் பாரியதொரு சவாலாகியிருப்பதும் கூட, தனதேயல்லாது விடினும், தாம் தேர்ந்தெடுத்த ஒரு கட்சியிடமிருந்து சிறகுகள் இரண்டையுமே பெற்றுக் கொள்ளாது, இரு வெவ்வேறு கோணங் களிலுள்ள கட்சிகள் இரண்டிலிருந்து சிறகுகள் இரண்டினைப் பெற்றுப் பறப்பதற்கு எந்தனிப்பதாகும். இச் சிறகுகள் இரண்டின் பறப்பியல்பு அசைவு கள் ஒன்றுக்கொன்று மாறுப்பட்டு நிகழ்வ தன் காரணமாகவே ஜெனரலின் பறப்பா னது தேவைக்கேற்ற வேகத்தை எட்ட இய லாது போவதற்கு இடமுள்ளது சிலவேளை, நிலத்தில் வீழ்த்திவிடும் அபாயத்தை ஏற்படுத்துவதற்கும் கூட அவை காரணமாகிவிடக் கூடும்.*

சரா

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*