TamilSpy

பொழுது போக்கு இணையம்…

ஈழத்துக்காக ஒற்றுமையுடன் போராட வேண்டும்: சீமான்

ஈழத்தமிழர்களை காக்க அனைவரும் ஒன்று திரண்டு போராட வேண்டும் என்று திரைப்பட இயக்குநர் சீமான் கூறியுள்ளார். பாட்டாளி மகளிர் அணி சார்பில் ஈழத்தமிழர்களை தாய்த் தமிழகம் தனது மடியில் வாரி அரவணைக்கும் என்ற தலைப்பில் பேரணி நடைபெற்றது.

பேரணி முடிவில் பேசிய சீமான்: இலங்கை அதிபர் ராஜபக்ச போர் குற்றம் செய்து இருக்கிறார் என்று ஐ.நா. சபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்போகும் போது அந்த தீர்மானத்தை தோற்கடிக்கும் பொருட்டு இந்தியா கையெழுத்திட்டதே, இதை விட இலங்கை தமிழர்களுக்கு என்ன துரோகம் செய்யப்போகிறார்கள்.

இதை கேட்டால் நாங்கள் இறையாண்மைக்கு எதிராக பேசுவதாக கூறுகிறார்கள்.

இலங்கையில் இவ்வளவு அழிவை சந்தித்திருப்பதற்கு காரணம் தமிழன் இந்த மண்ணில் தமிழனாக இல்லை என்பதுதான்.

தமிழர்களிடம் ஒற்றுமை இல்லை.

இனியாவது எனது தாய் தமிழ் உறவுகள் எல்லாம் தமிழன் என்ற ஒற்ற குடையின் கீழ் அணிதிரளாது போனால், இந்த இனத்தை காக்க யாராலும் முடியாது.

மருத்தவர் ராமதாஸ் தலைமையில் நாம் அனைவரும் ஒன்று திரண்டு நம் இனம் காக்க போராடவேண்டும் என்றார்.

Related Posts Plugin for WordPress, Blogger...

Your email address will not be published. Required fields are marked *

*