TamilSpy

பொழுது போக்கு இணையம்…

இராணுவத்தின் தயவை நாடும் இலங்கை கட்சிகள்

slaஇலங்கை அரசியலில் இராணுவம் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக மாறியிருக்கிறது. விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வந்த பின்னர் இராணுவத்தின் பங்கு அரசியலில் இன்னும் அதிகமாகியிருக்கிறது.ஜெனரல் சரத் பொன்சேகாவின் அரசியல் பிரவேசம் இதற்கு ஒரு எடுத்துக் காட்டு. அதேவேளை அவரது அரசியல் பிரவேசத்தின் பின்னர் இராணுவம் இன்னம் அரசியல் மயப்படுத்தப்படும் நிலை தோன்றியிருக்கிறது.

இது அரசியலில் இராணுவத்தின் பங்கு எவ்வளவுக்கு அதிகத்துள்ளது என்பதை உணர்த்தப் போதுமான உதாரணமாகும்.

கடந்த ஐந்து வாரங்களுக்குள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரண்டு தடவைகள் வன்னிப் பகுதிக்குப் பயணம் மேற்கொண்டிருக்கிறார்.

அவரது முதலாவது பயணம் கடந்த மாதத் தொடக்கத்தில் இடம்பெற்றது. துணுக்காய், முழங்காவில் பகுதிகளுக்குச் சென்ற அவர் படையினரையும், மீளக்குடியமரும் ஒரு தொகுதி மக்களையும் இந்தப் பயணத்தின் போது சந்தித்திருந்தார்.

sri

இரண்டாவது பயணமாக கடந்த புதனன்று முல்லைத்தீவுக்குச் சென்றிருந்த மஹிந்த ராஜ பக்ஷ. இதன்போது முழுமையாக படையினர் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளிலேயே பங்கேற்றிருந்தார்.

திரும்பும் வழியில்தான் அவர் மடுத் தேவாலயத்துக்கும் மெனிக்பாம் இடம் பெயர்ந்தோர் முகாக்கும் சென்றிருந்தார்.

முல்லைத்தீவில் அவர் கிட்டத்தட்ட 5000 படையினர் மத்தியில் உரையாற்றியிருந்தார்.

அவரது இரண்டாவது வன்னிப் பயணத்தின் முக்கிய நோக்கங்கள் இரண்டு.

புலிகளை முழுமையாக வெற்றி கொண்ட இடத்தில் போர் வெற்றியை நினைவு கூரும், இறந்த படையினரை நினைவு கொள்ளும் ஒரு நினைவுச் சின்னத்தை திறந்து வைப்பது முதலாவது நோக்கம்.

அடுத்த நோக்கம் பெருமளவு படையினரை சந்தித்து தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்வது.

நந்திக்கடலுக்கு வடக்கே கடும் சமர்கள் நடந்த ஆனந்தபுரத்துக்கும் புதுமாத்தளனுக்கும் இடைப்பட்ட பச்சைப் புல்மோட்டை களப்புப் பகுதியில் நீருக்கு நடுவே அமைக்கப்பட்ட நினைவுச் சின்னத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திறந்து வைத்திருந்தார்.

இந்த நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, மற்றும் முப்படைகளினதும் தளபதிகள் பங்கேற்றிருந்தனர்.

போரில் பங்கேற்ற படையினர் மற்றும் பங்காற்றிய முக்கிய அதிகாகள் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்த போதும், போரை வெற்றி கொண்டபோது இராணுவத்துக்கு தலைமையேற்றிருந்த சரத் பொன்சேகா கலந்து கொள்ளவில்லை.

முள்ளிவாய்க்கால் இறுதிப் போரை நினைவூட்டும் வகையிலான இந்த நிகழ்வில் பேசிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ படையினன் மனங்களை வென்றெடுப்பதிலேயே குறியாக இருந்தார்.

அதாவது வன்னியில் கடமையாற்றும் சுமார் 50 ஆயிரத்துக்கும் அதிகமான படை யினன் வாக்குகள் அவரது முதலாவது குறியாக இருக்கிறது.

அவர் தனது வன்னிக்கான இரண்டு பயணங்களின் போதும் சுமார் 10,000 வரை யான படையினரைச் சந்தித்திருக்கிறார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த புதனன்று முல்லைத்தீவுக்குச் செல்வதற்கு முதல்நாள் அங்கு சென்றிருந்த இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜகத் ஜயசூய பாதுகாப்பு தொடர்பான ஏற்பாடுகள் அனைத்தையும் நேரில் கவனித்திருந்தார்.

செவ்வாயன்று முல்லைத்தீவுக்குச் சென்றிருந்தபோது இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜகத்ஜயசூய படையினர் மத்தியில் உரை நிகழ்த்தியிருந்தார்.

சரத் பொன்சேகாவின் குற்றச்சாட்டுகளை நிராகக்கும் வகையில் தான் அவரது உரை அமைந்திருந்தது.

அதேவேளை அன்றைய தினம் முல்லைத்தீவில் புதிதாக அமைக்கப்பட்ட படைத் தலைமையகத்தின் கட்டடத்தையும் இராணுவத் தளபதி திறந்து வைத்தார். ஜனாதிபதித் தேர்தலில் படையினர் முக்கியமான பாத்திரத்தை வகிக்கப் போகின்றனர்.

காரணம் இலங்கை இராணுவத்தில் மட்டும் இரண்டு இலட்சம் பேர் உள்ளனர். படையினரின் வாக்குகளின் மீது செல்வாக்குச் செலுத்தும் இரண்டு வேட்பாளர்கள் போட்டியிடுவதால் அவர்களைத் தம் வசப்படுத்த அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

அதேவேளை சரத் பொன்சேகா படையினருடன் நெருக்கமாகச் செயற்பட்ட ஒரு அதிகாரியாக இருந்ததால் இந்த விடயத்தில் மஹிந்த ராஜபக்ஷ பெரும் சவால்களை எதிர்நோக்கவே செய்கிறார்.

எனவேதான் இராணுவ அதிகாகளைப் பயன்படுத்தி அரசாங்கம் அவரது வாயை அடைக்கும் முயற்சியில் அல்லது அவரது கருத்துகளை மறுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

இதற்கிடையே கடந்த வாரம் தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க சகல அரசாங்க திணைக்களங்களின் தலைவர்க ளுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியிருந்தார்.

அதில் ஜனாதிபதித் தேர்தல் முடிவடையும் வரை புதிய நியமனங்கள், பதவி உயர்வுகள், இட மாற்றங்களை நிறுத்தும்படி தெரிவிக் கப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்ட நவம்பர் 23 ஆம் திகதிக்குப் பிந்திய அனைத்து இடமாற்றங்கள், பதவி உயர்வுகள், நியமனங்கள் அனைத்தும் இந்த உத்தரவின் கீழ் ரத்துச் செய்யப்பட வேண்டும்.

இந்த உத்தரவு பாதுகாப்புத் தரப்புக்கும் செல்லுபடியாகுமா என்ற கேள்வி எழுந்திருகிறது. இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த இரண்டு பிகேடியர் தர அதிகாகளுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த வாரம் பதவி உயர்வுகளை வழங்கியிருந்தார்.

வடமத்திய மாகாண முன்னரங்க கண் காணிப்பு பிரதேசத்தின் தளபதியாக உள்ள பிரிகேடியர் தெமட்டபிட்டியவும், இராணுவத் தலைமையகத்தில் இணைக்கப்பட்டுள்ள பிரிகேடியர் ஜே.சி.டி சில்வாவும் மேஜர் ஜெனரல் தரத்துக்கு பதவி உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பு வெளியானதும், தேர்தல் ஆணையாளரின் சுற்றறிக்கை வெளியானதும் ஒரே தினத்தில் தான்.

ஆனால், கடந்த நவம்பர் 30 ஆம் திகதி நடைறைக்கு வரும் வகையில் இந்தப் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் இந்த இரு பிகேடியர் தர அதிகாகளுக்கான பதவி உயர்வுகள் தேர்தல் முடியும் வரை ஒத்தி வைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

அதேவேளை, ஆணையாளன் உத்தரவின் பின்னரும் இராணுவத்தில் பதவி உயர்வுகள், இடமாற்றங்கள் என்பன வழமை போலவே மேற்கொள்ளப்படுகின்றன.

தேர்தல் ஆணையாளரின் சுற்றறிக்கை வெளியான பின்னர் கிழக்குப் படைத் தலை மையகத்தின் புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் ஜகத் ரம்புக்பொத்த நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் ஒரு வருட கற்கைநெறியை முடித்து திரும்பிய அவர் கடந்த 7 ஆம் திகதி புதிய பதவியை ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

அதேவேளை, முன்னர் கிழக்குப் படைத் தலைமையக தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் சிறிநாத் ராஜபக்ஷ இராணுவத் தலைமையகத்தில் பணிப்பாளர் நிலையில் உள்ள அதிகாகளுக்கான பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டிருக்கிறார். இவரும் கடந்த 8 ஆம் திகதி பதவியேற்றுள்ளார். இராணுவத்தில் இடம்பெறும் மாற்றங்கள் அரசியலில் அது வகிக்கும் பாத்திரத்தின் கனதியை வெளிப்படுத்துகிறது.

ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகா வெற்றி பெற்றால் இந்தப் பங்கு இன்னம் அதிகக்கலாம் என்ற அச்சம் இருக்கவே செய்கிறது.

தற்போது அரசியலுக்குள் இராணுவத்தின் பங்கை அதிகப்படுத்தி அதனைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் அரசாங்கமே மற்றுமொரு அச்சட்டும் கருத்தையும் பரப்பி வருகிறது.

சரத் பொன்சேகா ஜனாதிபதியானால் இரா ணுவ ஆட்சி ஏற்படும் என்பது போன்ற தோற்றப்பாட்டை உருவாக்கும் முயற்சிகள் நடக்கின்றன.

அதேவேளை, பிரதான அரசியல் கட்சிகள் இராணுவத்தின் தயவை நம்பி அரசியல் செய்ய வேண்டிய நிலைக்கு வந்திருக்கின்றன.

அதேபோல அதனை விலக்கி அரசியலில் ஈடுபட முடியாத நிலையும் தோன்றியிருக்கிறது. இந்தநிலை இலங்கையின் ஜனநாயக சூழலுக்கு உகந்ததாக இருக்கப் போவதில்லை.

இது இப்போது பெரிதாகத் தெரியா விட்டாலும் காலப்போக்கில் உணர்ந்து கொள்ளும் நிலை ஏற்படலாம்.

சத்திரியன்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*