TamilSpy

பொழுது போக்கு இணையம்…

ஊடகங்கள் மீதான தாக்குதல் ரகசியம்; படிப்படியாகக் கதை கட்டவிழ்கின்றது

Mahindaசமீப காலத்தில் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க ஒபாமா நிர்வாகத்தின் உயர் அதிகாரியும் தெற்கு, மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி அமைச்சருமான றொபேர்ட் பிளேக், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கடந்த வாரம் சந்தித்துப் பேசினார். “நீங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறீர்களா” என்று பிளேக் ஜனாதிபதியிடம் கேட்டார். அதற்குப் பதிலளித்த ஜனாதிபதி “நம்பிக்கையுடன் இல்லாதிருந்தால் ஜனாதிபதித் தேர்தல் ஒன்றுக்கு அழைப்பு விடுத்திருக்கமாட்டேன்” என்றார். “மீண்டும் வந்து என்ப் பாருங்கள், தேர்தலில் நான் வெற்றி பெற்றதன் பிறகு” என்று அவர் மேலும் கூறினார்.

கடந்த செவ்வாய்க்கிழமை ஜனாதிபதியைச் சந்தித்துப் பேசிய அமெரிக்க உதவி அமைச்சர் பல விடயங்கள் பற்றியும் விவாதித்தபோது, “தற்போது அமுலில் இருக்கும் அவசரகால சட்டத்தை எப்பொழுது அகற்றப் போகிறீர்கள்” என்றும் கேட்டுவைக்கத் தவறவில்லை. இது சரியான தருணமல்ல. பொருத்தமான தருணம் வரும்போது அது அகற்றப்படும் என்று பதிலளித்தார் மஹிந்த ராஜபக்ஷ.

இலங்கை அரசுடன் ஒரு நேசப்பான்மையான அணுகுமுறையைக் கைக்கொள்ள வேண்டுமென அமெரிக்க செனட் சபையின் வெளியுறவுக் குழுவினர் ஒரு தீர்மானத்தின் மூலம் அறிவுறுத்தியிருந்த போதிலும், பிளேக் தமது வழியிலேயே செயற்பட்டதை அறியமுடிந்தது. ஒபாமா நிர்வாகத்துக் குரிய எல்லாவித அக்கறையான விடயங்கள் பற்றியும் அவர் கேள்விகளை எழுப்பியிருந்தார். பின்னர் ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். கடந்த வியாழனன்று ஊடகவியலாளர்களைச் சந்தித்த பிளேக், ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த அறிக்கை யொன்றை வெளியிட்டார்.

இலங்கை மக்களின் உரிமைகளின் பாதுகாப்பு
“இணக்கப்பாட்டுக்கான மிக முக்கிய அம்சம் என்னவென்றால் சகல இலங்கையரினதும் உரிமைகளைப் பாதுகாப்பதும் காபந்து செய்வதுமாகும். இது நடைமுறையில் செயற்பட வேண்டும். இதன் கருத்து என்னவென்றால் பத்திரிகையாளர்கள் நிகழ்வுகள் பற்றிய தமது கருத்துக்களையும் விவரணங்களையும் சுதந்திரமாக எழுத உரிமை இருக்க வேண்டும். அச்சமோ, திருப்பித் தாக்கப்படுதலோ இல்லாமல் அவர்கள் செயற்பட வேண்டும். நபர்கள் தமது கருத்து வேறுபாடுகளை பகிரங்கமாக வெளியிடக்கூடியதாக இருக்க வேண்டும். ஏனையவர்களின் உரிமைகளை மீறி செயற்பட்டவர்கள் தமது செயற்பாடுகளுக்குப் பொறுப் பேற்கும்படி செய்தாக வேண்டும்.” இவ்வாறு பிளேக் தனது அறிக்கையில் கூறினார். அமெரிக்க அரசின் அதிகாரப் பூர்வமான கருத்தாகும் இது. தற்போது உள்ள நிலையில் இது அதிக முக்கியத்துவம் பெறுகின்றது. அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜெனரல் பொன்சேகா தொடர்ந்தும் கொலைகள்; தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள், இடைஞ்சல்கள் மற்றும் வெள்ளைவான் கடத்தல்கள் எவற்றுக்குமே தமக்கு சம்பந்தம் இல்லை என்று வலியுறுத்தி வருகின்றார். குறிப்பாக கடந்த நவம்பர் 27ஆம் திகதி தேசிய சட்டத்தரணிகள் சங்கத்தில் பேசியபோது சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கி ரமதுங்கவின் கொலைக்கும் தமக்கும் தொடர்பே கிடையாது என்ற கூறினார்.

பொன்சேகா கோத்தபாய கருத்துமோதல்
ஆனால் இப்போது இக்கொலை தொடர்பான புலனாய்வைப் பொறுப் பேற்றுக்கொண்டுள்ள குற்றவியல் புலனாய்வுப் பிரிவினர், ஜெனரல் பொன்சேகாவையும் விசாரணைக்குட்படுத்தவிருக்கிறார்கள் என்று தெரியவந்துள்ளது. பொன்சேகாவின் கருத்துக்களுக்குப் பாதுகாப்புத்துறை செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இப்போது பதில் கருத்து தெரிவித்துள்ளார். சிங்களப் பத்திரிகையொன்றுக்கு அவர் வழங்கியுள்ள நீண்டதோர் நேர்காணலில், அவர் “ஓய்வுபெற்ற ஜெனரல் பொன்சேகா” இப்போது வேறு என்னவோ சொல்கின்றார். அவர் ஊடக சுதந்திரம் பற்றி காலம் கடந்து பேசுகிறார்” என்று கூறியுள்ளார்.

ஊடகங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டபோது ஏன் மௌனமாக இருந்தீர்கள் என்று கேட்டபோது, “அதைத் தெரிந்துகொண்டு நாம் வாளாவிருக்க வில்லை. இப்பொழுதுவரை நாங்கள் அதைக் கூறாமல் இருந்துள்ளோம். இப்போது கூறுகிறோம் என்றால், அவர் (ஜெனரல் பொன்சேகா) ஊடக சுதந்திரம் பற்றிப் பேசுகிறார் என்பதால். இவைகளை எனது இணையத்தளத்தில் நாங்கள் வெளியிடவும் இல்லை” என்றார்.

அவர் மேலும் கூறியிருப்பதாவது: நாம் அதை இப்போது கூறுகிறோம். ஏனென்றால் ஜெனரல் பொன்சேகா இந்தக் காலகட்டத்தில் அதைக் கூறுகிறார். நான் ஊடகங்கள் கூறிய குற்றச் சாட்டை ஏற்றுக்கொண்டேன். நான் தொடர்ந்து மௌனம் சாதித்தேன். ஆயுதப் படைகளின் தலைவர்களைப் பாதுகாக்க நான் விரும்பினேன். எமக்குப் பொதுநோக்கம் இருந்தமையால் தனிப்பட்ட விடயங்கள் பற்றி யோசிக்கவில்லை. லசந்த விக்கிரமதுங்கவின் கொலை மற்றும் பிரச்சினைகள் பற்றி நான் மௌனம் சாதித்தமை குற்றச்சாட்டை என்மீது சுமத்துவதற்கு வாய்ப்பாகிவிட்டது. தமிழீழ விடுதலைப்புலிகளைத் தோற்கடிப்பதுதான் எனது குறிக்கோளாக இருந்தது” என்று.

கோத்தபாயவின் கருத்துக்கள் அவர் வேறு ஊடகங்களுக்கு வழங்கிய நேர்காணல்களிலும் திரும்பக் கூறப்பட்டுள்ளது. இதன் நோக்கம் கொழும்பிலுள்ள ராஜதந்திர சமூகங்களுக்கு இது எட்ட வேண்டும் என்பதற்காகத் தான்; குறிப்பாக மேற்குநாட்டு ராஜதந்திர வட்டாரங்களுக்கு. இங்குள்ள இப்போதைய நிலைமை என்னவென்றால், ஜெனரல் பொன்சேகா கூறுகிறார் தாம் ஊடகங்கள் மீதான வன்செயல்கள் எதிலும் ஈடுபடவில்லை என்பதாக. இன்னொருபக்கம், பாதுகாப்பு செயலாளர் தாம் எந்த வன்செயலிலும் இறங்கவில்லை என்று மறுக்கும் அதே வேளை அப்படியான சம்பவங்கள் நடந்தமையை அறிந்திருந்தார். இருந்தாலும் மௌனமாக இருக்க முடிவு செய்திருந்தார். எதற்காகவென்றால் ஆயுதப்படை களின் தலைவர்களைக் காப்பாற்றுவதற் காக, புலிகளைத் தோற்கடிக்க வேண் டும் என்ற பொதுநோக்கத்தைச் சாதிப்பதற்காக. இது பாதுகாப்பு அமைச்சின் அதிகாரபூர்வ இணையத்தளம் பல பத்திரிகையாளர்களை வெளிப்படையாகப் பெயர் குறிப்பிட்டதுடன் அவர்களைத் “துரோகிகள்” என்றும் குற்றஞ்சாட்டிய அதே வேளையில்தான் இந்தவிதமாக மௌனம் காத்தமை இடம்பெற்றதாகக் கூறப்படுகின்றது.

அவரை ஏன் விசாரிக்கவில்லை
ஜெனரல் பொன்சேகாவின் பேச்சாளர்களில் ஒருவரான மங்கள சமரவீர (எம்.பி) பாதுகாப்பு செயலாளர் தகவல்களை வெளியிடாமல் இருந்துள்ளார் என்று குற்றஞ்சாட்டியிருப்பதுடன் இரகசியப் பொலிஸார் ஏன் வாக்குமூலம் ஒன்றை அவரிடமிருந்து பதியவில்லையென்று கேள்வியும் எழுப்பியுள்ளார்.
பத்திரிகையாளர்மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை அறிந்திருந்தார் என் பதை நேர்காணல்களில் தெரிவித்துள்ளார். ஆனால் மௌனமாகவும் இருந்துள்ளார் என்பதிலிருந்து குற்றவியல் சட்டத்தை அவர் மீறியிருக்கிறார் என்று சமரவீர தெரிவித்துள்ளார். யு.என்.எவ். செய்தி சேவைக்கு அளித்த பேட்டியில் மங்கள சமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்புச் செயலாளர் ஒரு சிரேஷ்ட அரசாங்க சேவையாளர். அதனால் அவர் அரசியலில் ஈடுபடவும் முடியாது. நீண்ட நேர்காணல்களை அவருடைய சகோதரரின் சார்பில் ஊடகங்களுக்கு வழங்கவும் முடியாது. அரச ஊழியர்கள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது என்ற தேர்தல் ஆணையாள ரின் தீர்ப்புக்கும் மாறாக இது இருக்கின்றது என்றார் மங்கள சமரவீர. இதுபற்றி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பிரமுகர் ஒருவர் கருத்து வெளியிடுகையில்; இந்தக் கேள்விகளுக்கெல்லாம் நாம் சரியான பதில்களை வழங்குவோம். டிசெம்பர் 18ஆம் திகதி எமது பிரசார வேலைகள் அநுராதபுரத்தில் ஆரம்பமானதன் பின்னர் இவை துண்டுப் பிரசுரங்களாகவும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளாகவும் வெளியிடப்படும். கோத்தபாயவின் மீது குற்றங்களை சுமத்திவிட்டு அவர்களால் தப்பிவிட முடியாது என்று கூறினார்.

வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட பின்னரே அதிகாரபூர்வமாக பிரசார வேலைகள் என்ற நிலைமை இருந்தபோதிலும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புத் தலைவர் களும் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களும் ஊடகங்களைக் கவர்வதற்கு ஏற்கனவே முயற்சிகளை மேற்கொள்ளத் தொடங்கிவிட்டனர். கடந்த செவ்வாய்க்கிழமை ஆயிரம் ஊடகப் பணியாளர்கள், பத்திரிகையாளர்கள், நூலகப் பணியாளர்கள், அச்சக அலுவலர்கள் போன்றோருக்கு அலரிமாளிகையில் இரவு உணவுக்கு அழைப்பு விடுத்திருந்தார் ஜனாதிபதி ராஜபக்ஷ. விருந்தின்போது ஒருசில மேசைகளுக்கு மட்டுமே ஜனாதிபதியால் போய் ஊடக வியலாளர்களுடன் உரையாட முடிந்தது. அதற்குள் ஏதோ சிக்கல் ஏற்பட்டு விட்டதாகத் தெரிந்தது. பியர் வழங்கப்பட்டது. சில பத்திரிகையாளர்கள் தாமே எழுந்து சென்று அருந்தத் தொடங்கியதால் ஜனாதிபதி வழமை போல் ஊடகவியலாளர்களுடன் அளவளாவ முடியவில்லை.

மதுபானம் பற்றிய ஜெனரலின் கொள்கை
ஊடக நிகழ்வுகளும் அரசியல் விவாதங்களாக மாறத் தொடங்கியுள்ளன. பொன்சேகா தாம் போட்டியிடுவது தொடர்பான அறிவித்தலை செய்வதற்கு நடத்திய முதலாவது பத்திரிகையாளர் மாநாட்டின்போது நவம்பர் 15ஆம் திகதி மது அருந்துவது பற்றிய அவரது கொள்கை என்னவென்று கேட்கப்பட்டது.

மது அருந்துவதைத் தாம் எதிர்க்கவில்லை என்றார். ஆனால் மது துஷ்பிர யோகத்தைத் தாம் அனுமதிக்கமாட்டார் என்றும் அப்படியானவர்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கத் தயங்க மாட்டார் என்று தெரிவித்திருந்தார். இந்தக் கருத்தை ஒரு பிரசார ஆயுதமாகப் பாவிக்க ராஜபக்ஷவின் ஆதரவாளர்களான பௌத்த துறவிகள் சிலர் முயற்சி எடுத்தார்கள். மதுபானத்துக்கும் போதைவஸ்துக்களுக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்கப் போவதாக அர சாங்க தரப்பில் கூறப்பட்டிருக்கையில், மது அருந்துவது தொடர்பாக பொன் சேகா பேசி வருகிறார் என்று அவர்கள் விவாதம் கிளப்பினார்கள். ஆனால் பொதுவேட்பாளரின் பிரசாரகர்கள், ஜனாதிபதி ராஜபக்ஷவின் ஊடக விருந்துகளில் மது தாராளமாகப் பரிமாறப்படுவதைச் சுட்டிக்காட்ட லானார்கள். கடந்த செவ்வாயன்று ஜனாதிபதியின் ஊடகவியலாளர்களுக் கான விருந்தின்போது பியர்தான் வழங்கப்பட்டது என்றாலும் முன்னர் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற விருந்தின்போது விஸ்கி, பிரண்டி மற்றும் மதுபானங்கள் பரிமாறப்பட்டதாக அவர்கள் சுட்டிக் காட்டலானார்கள்.

பொன்சேகாவின் ஊடகக்கொள்கை
இனி ஊடகவியலாளர்களுக்கு மதுவும் உணவும் வழங்கி உறவாடும் சந்தர்ப்பம் ஒன்று ஜெனரல் பொன் சேகாவுக்கு ஏற்படப்போகின்றது. பெரும் எடுப்பில் ஒரு விருந்து வைபவத்தை பொன்சேகாவின் பிரசார அலுவலர்கள் ஏற்பாடு செய்துகொண்டிருக்கிறார்கள். இன்று தாஜ் சமுத்ராவில் நடைபெறவிருக்கும் நிகழ்வு மிக முக் கியமானதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. விருந்துபசாரம் ஒருபுறமிருக்க பொது வேட்பாளரான பொன்சேகா தமது ஊடகக் கொள் கையையும் அங்கு அறிவிப்பார் என்று தெரிகின்றது. மேலும் பதவிக்குத் தெரிவு செய்யப்பட்டால் அவர் மேற்கொள்ளவிருக்கும் பணிகள் பற்றியும் அறிவிக்கவிருக்கிறார்.

சிறப்பான எதிர்காலத்துக்காகத் தம்மைத் தெரிவுசெய்யும்படி ராஜபக்ஷ தெரிவிக்கவிருக்கும் அதே வேளை பொன்சேகா என்னைவிட நாடு முக்கியம் என்ற கொள்கையைப் பிரகடனப்படுத்தி பிரசாரத்தில் ஈடுபடுவார் என்று தெரிகின்றது.

“சண்டே ரைம்ஸ்” பத்திரிகையில் 13.12.2009 அன்று வெளியான அரசியல்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*