TamilSpy

பொழுது போக்கு இணையம்…

பொப் பாடகி மாயாவின் பேட்டியை தணிக்கை செய்து ஒளிபரப்பிய ‘சி.என்.என்.’

தமிழ்ப் பொப்பாடகி மாயா (M.I.A) அமெரிக்காவின் சி.என்.என்.தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியை அந்தத் தொலைக்காட்சி நிறுவனம் தணிக்கை செய்து ஒளிபரப்பியுள்ளது. ‘இன அழிப்பு (Genocide) என்ற சொல்லைப் பயன்படுத்தியமைக்காக மாயா என அழைக்கப்படும் மாதங்கி அருள்பிரகாசம் (எம்.ஐ.ஏ.) வழங்கிய பேட்டியை சி.என்.என்.தொலைக்காட்சி தணிக்கை செய்து ஒளிபரப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 20ம் திகதி வெளியிடப்பட்ட லொஸ் ஏஞ்சல்ஸ் சஞ்சிகையில் பேட்டி கொடுத்த மாதங்கி அருள்பிரகாசம் சி.என்.என்.இற்காக தான் கொடுத்த பேட்டியானது தணிக்கை செய்யப்பட்டுள்ளதை பகிரங்கமாகக் கூறியுள்ளார்.

மாதங்கி அருள்பிரகாசம் யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். ஆனால், உலகப் பிரசித்திபெற்ற பொப் பாடகி. ஒஸ்கார் விருதுக்காக இவரின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இவர் அண்மையில் சி.என்.என்.தொலைக்காட்சிக்கு ஒரு மணித்தியால நேரம் நீடித்த ஒரு பேட்டியை வழங்கியிருந்தார்.

ஆனால், ஒரு நிமிடப் பேட்டியை மட்டுமே சி.என்.என். தொலைக்காட்சி ஒளிபரப்பியதாக எம்.ஐ.ஏ. கூறியுள்ளார். தணிக்கைக்கான காரணம் அவர் பயன்படுத்திய ‘இன அழிப்பு` என்ற பதம் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்தப் பேட்டியின்போது கிட்டத்தட்ட 20,000 தமிழர்கள் சிறீலங்கா அரச படைகளால் கடைசிக்கட்ட போரின்போது கொல்லப்பட்டதாக இவர் விபரித்திருந்தார். பயங்கரவாதிகள் என்று கூறி தமிழ் மக்களையே அரசு கொல்கிறது என்றும் இறுதியில் புலிகள் எல்லோரையும் அழித்து விட்டோம் என்று ஐக்கிய நாடுகள் மற்றும் பிற மனிதாபிமான அமைப்புகளைச் சேர்ந்த பொய்யர்களை அழைத்துக் காண்பித்தாலும் அவை எல்லாம் அரசாங்கத்தையே ஈடுசெய்யப்போகிறது எங்கள் தமிழ் மக்களை அல்ல என்று அப்பேட்டியில் கூறியிருந்தார்.

அவை எல்லாம் சி.என்.என்.ஆல் தணிக்கை செய்யப்பட்டு விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

Related Posts Plugin for WordPress, Blogger...

Your email address will not be published. Required fields are marked *

*