TamilSpy

பொழுது போக்கு இணையம்…

கேலிக்கூத்தாகும் மீள்குடியேற்றங்கள்!!!

makkalகடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்னர் யாழ் வலிகாமம் வடக்குப் பகுதிகளில் இருந்து சிறீலங்கா படைகளால் வெளியேற்றப்பட்ட மக்களை மீளக்குடியமர்த்தும் நடவடிக்கைகள் கேலிக்கூத்தாக மாறத்தொடங்கியுள்ளன.

கடந்த 1990ஆம் ஆண்டில் வலிகாமம் வடக்கு வளலாய் தொடக்கம் மாதகல் வரையான பகுதிகளை சிறீலங்கா படைகள் ஆக்கிரமித்ததை தொடர்ந்து அங்கிருந்து வெளியேறிய பல்லாயிரக்கணக்கான மக்கள், கடந்த இருபது ஆண்டுகளாக ஏதிலிகளாக அலைந்து திரியும் அவலம் நிலவுகின்றது.

இவர்களை சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தும் நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சிறீலங்கா அரசாங்கத்திற்கு உச்சநீதிமன்றம் அறிவுரை வழங்கியிருந்த பொழுதும், பாதுகாப்புக் காரணங்களை முன்வைத்து மீள்குடியேற்ற நடவடிக்கைகளை திட்டமிட்ட வகையில் அரசாங்கம் இழுத்தடித்து வருகின்றது.

வலிகாமம் வடக்கு அதியுயர் படை வலயத்தை அண்டியுள்ள அறுநூறு மீற்றர் சூன்யப் பிரதேசத்தில் முதற்கட்டமாக முன்னூறு மீற்றர் பரப்பளவில் மக்களை மீளக்குடியமர்த்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக முன்னர் யாழ் மாவட்ட செயலகம் அறிவித்திருந்த பொழுதும், இதேயிடங்களை தமது அதியுயர் படை வலயத்திற்குள் சிறீலங்கா படைகள் உள்வாங்கியிருப்பதால் மக்களின் மீள்குடியேற்றம் கேள்விக்குறியாகியுள்ளது.

இதேபோன்ற நிலை சங்கானை, சண்டிலிப்பாய், நல்லூர், தீவகம் ஆகிய அதியுயர் படை வலயங்களை சேர்ந்த மக்களுக்கும் ஏற்பட்டுள்ளது.

இதேநேரத்தில் சிறீலங்காவின் அதிபர் தேர்தலுக்கான நாள் நெருங்கி வரும் நிலையில், தமது வாக்கு வங்கிகளை நிரப்பும் நோக்கத்துடன் மீள்குடியேற்றம் தொடர்பாக இடம்பெயர்ந்த மக்களிடையே போலியான நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலான பரப்புரைகளை ஆளும் கட்சியினரும், ஈ.பி.டி.பி ஆயுதக் குழுவினரும் ஆரம்பித்துள்ளனர்.

நன்றி: பதிவு

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*