TamilSpy

பொழுது போக்கு இணையம்…

அதிகார ஆசையின் வெளிப்பாடே ஜனாதிபதி தேர்தல் களம்

sarath_mahindaவிடுதலைப் புலிகளுக்கெதிரான யுத்தத்தில் ஈடுபட்ட இரண்டு பிரதான வீரர்கள் தற்போது ஒருவருக்கொருவர் போட்டியாக ஜனாதிபதித் தேர்தல் என்ற அரசியல் களத்தில் போட்டிக்குத் தயாராகியுள்ளனர். யுத்தத்திற்கான அரசியல் தலைமைத்துவத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழங்கியிருந்தார். யுத்தத்திற்கான தலைமைத்துவத்தை ஜெனரல் சரத் பொன்சேகா வழங்கியிருந்தார். கோத்தபாயவின் பாத்திரத்தை வகிக்க எத்தனையோ பேரைத் தேடிக்கொள்ள முடிந்திருக்கும். எனினும், யுத்தத்தைக் கொடூரமான இறுதிவரைக் கொண்டு செல்வதில் மஹிந்த ராஜபக்ஷவும் சரத் பொன்சேகாவும் வகித்த பாத்திரங்களானது தற்போது இலங்கை அரசியலில் யுத்த காட்சிகளைத் தேடிக்கொள்ள முடியாதளவிற்கு பொறுப்புமிக்கனவாக இருந்தன.

உண்மையில் அவர்கள் இருவரும் வரலாற்றில் இடம்பெறக் கூடியவர்கள். யுத்தத்தில் எதிர்பார்க்கப்பட்ட பிரதிபலன்கள் கிடைத்தனவா என நான் எண்ணவில்லை. ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது மக்களின் விருப்பத்தின் பேரிலேயே ஏற்படும் என்ற போதிலும் மக்களின் விருப்பத்தை உருவாக்குவது குறித்த நபரின் வெளிப்பாடான பல விடயங்களின் ஊடானது என நாம் காண்கின்றோம். வேட்பாளரின் அரசியல் நடவடிக்கைகள், வேட்பாளர் குறித்து மக்களிடையே காணப்படும் நம்பிக்கை அவரைச் சூழ்ந்த சக்திகளுடன் தலைமைத்துவ ஆளுமை என்பன அதனைத் தீர்மானிக்கின்றன.

இதனைத்தவிர கூட்டணி வலையமைப்பு, பிரசார வலையமைப்பு போன்றவையும் இவற்றைத் தீர்மானிக்கின்றன. அத்துடன் செலவிடப்படும் வளங்கள் உள்ளிட்ட பல்வேறு சக்திகளும் இதில் அடிப்படையானவை. தமது விருப்பத்திற்கேற்ப வாக்களிக்க மக்களுக்கு உரிமை இருக்கின்றது. எனினும், விருப்பத்தை உருவாக்கும் சாதகம் புரட்சிகர சந்தர்ப்பங்களைத் தவிர்த்து பெரும்பாலும் மக்களிடமே உள்ளது. ராஜபக்ஷ நிர்வாகத்திற்கு எதிராக சரத் பொன்சேகா பொது வேட்பாளராக அரசியலுக்கு வருவார் என மூன்று மாதங்களுக்கு முன்னரே எண்ணக்கூடிய நிலைமை காணப்படவில்லை. சரத் பொன்சேகாவை அரசியல் மேடைக்குக் கொண்டுவந்தது ஊழல் மோசடிகளை அடிப்படையாகக் கொண்ட ராஜபக்ஷ குடும்ப அரசியலாகும்.

கடந்த “ராவய” ஆசிரியர் தலையங்கத்தில் விக்டர் ஐவன் இந்த இரண்டு விடயங்கள் ராஜபக்ஷ நிர்வாகத்திற்கு எதிரான விடயங்களாக அடையாளப்படுத்தியிருந்தார். சரத் பொன்சேகாவிற்குள் அரசியல் அதிகார ஆசை இருப்பது தெளிவாகியிருக்கிறது. எனினும், இராணுவத் தளபதியாக அவர் அந்த ஆசையை செயற்படுத்தவில்லை. அதற்கான சந்தர்ப்பமும் இருந்திருக்காது. மஹிந்த ராஜபக்ஷ சூட்சுமமான திறமையான அரசியல்வாதியாக இருந்திருந்தால் அவர் பிரிந்து செல்வதைத் தடுப்பதற்காக தனது படைத்தளபதியை அரசியலுக்குக் கொண்டுவந்து பிரதமராகவேனும் நியமித்திருக்கலாம். எவ்வாறாயினும் ராஜபக்ஷ நிர்வாகத்தில் குடும்ப நிர்வாகத்தைத் தவிர அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ள இடமளிக்கப்படவில்லை. அதற்கு இடமளிக்கப்படவும் மாட்டாது.

அதற்கு அதுமாத்திரமல்லாது சரத் பொன்சேகாவை எதிர்க்கட்சிகள் பொது வேட்பாளராக நிறுத்துவது குறித்து எதிர்க்கட்சிகளுடன் அரசியல் விவாதங்களை நடத்துவதற்குப் பதிலாக கட்சிகளைப் பிளவுபடுத்தும் நடவடிக்கைகளை ராஜபக்ஷ சகோதரர்கள் மேற்கொண்டமையானது செயற்பாட்டு ரீதியான அரசியலுக்கு உதவியாக அமைந்தது. ஜே.வி.பி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ரி.என்.ஏ, ஐக்கிய தேசியக் கட்சி, ரி.எம்.வி.பி., ஹெல உறுமய போன்ற சகல அரசியல் கட்சிகளையும் ராஜபக்ஷ சகோதரர்கள் பிளவுபடுத்தும் திட்டத்திற்கு உட்படுத்தினர். எதிர்க்கட்சிகளை மாத்திரமல்லாது தமது கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள்ளும் பல பிளவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் ராஜபக்ஷாக்களைத் தவிர தற்போது பிரபல தலைவர்கள் எவரும் இல்லை. அதில் உருவாகிவரும் நட்சத்திரம் நாமல் ராஜபக்ஷவாகும். இந்த உறவினர்களைத் தவிர்த்து, ராஜபக்ஷ நிர்வாகத்திற்கு ஆதரவு வழங்குபவர்களில் கருணா, விமல் வீரவன்ஸ, சம்பிக்க ரணவக்க, பேரியல் அஷ்ரப் போன்றவர்கள் அரசுடன் கூட்டணி வைத்துக் கொண்டனர். இவ்வாறான நபர்களின் குறுகிய கால தேவைகளுக்காக கட்சியின் நீண்டகாலத் தேவைகள் கவனத்தில் கொள்ளப்படவில்லை. இந்தக் குறுகிய நோக்கப் பாதிப்புக்களையே ராஜபக்ஷாக்கள் எதிர்நோக்கி வருகின்றனர். இதன் காரணமாகவே ஜனாதிபதித் தேர்தலில் தனிக்குதிரையாக ஓடுவதற்குப் பதிலாக நெருங்கிய குதிரையொன்றுடன் வேகத்தை உரசிப் பார்க்க நேர்ந்துள்ளது.

எவ்வாறாயினும்,அரசியல் அனுபவத்திலும் மக்களை அரவணைப்பதிலும் பொன்சேகாவைவிட ராஜபக்ஷவே முன்னிலையில் இருக்கிறார். அத்துடன் பொன்சேகாவிற்கு இருக்கும் சாதகமான விடயம் என்னவெனில், அவருக்கு அரசியல் வரலாறு இல்லை என்பதாகும். பெரும்பாலானவர்களுக்கு அவர் ஒரு புதிய அரசியல் பாத்திரம் ராஜபக்ஷவிடம் அரசியல் ரீதியான செயற்பாடுகள் இருக்கின்றன. பொன்சேகா அதனைக் கட்டியெழுப்பிக்கொள்ள வேண்டும். அவர் தற்காலிகமான பாத்திரத்தை விட்டுச் செல்லக்கூடிய வாய்ப்புக்கள் அதிகமாகும். ராஜபக்ஷவிடம் பெரும் அரச பிரசாரக் கட்டமைப்பும், குறிப்பிடத்தக்களவு ஊடக நிறுவனங்களும் இருக்கின்றன. மதிப்பிட முடியாத அரச வளங்கள் ராஜபக்ஷவிடமே இருக்கிறது. சகல மாகாணங்களும் பெரும்பாலான உள்ளூராட்சி அமைப்புக்களின் வளங்களும், அதிகாரங்களும் ராஜபக்ஷவிடமே இருக்கிறது.

இவற்றை இலங்கையிலுள்ள அனைத்துக் கட்சிகளும் முறைகேடாக பயன்படுத்தும் எனக் கூறமுடியாதளவிற்கு ஆட்பலமும், பணபலமும் காணப்படுகின்றன. இந்த அதிகாரங்களுக்கு மத்தியில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையைத் தோற்கடித்து 1994ஆம் ஆண்டு சந்திரிகா குமாரதுங்க மாத்திரமே அதிகாரத்தைக் கைப்பற்றியிருந்தார். 2005ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகள் தமிழ் மக்கள் வாக்களிப்பதைத் தடுக்காது இருந்திருந்தால் ரணில் விக்கிரமசிங்க அந்த அதிகாரத்தைத் தோற்கடித்து ஜனாதிபதி பதவியைக் கைப்பற்றியிருப்பார். இதனூடாக தெரிவது என்னவெனில் அரச அதிகாரத்தினால் வழங்கப்படும் சாதகமான விடயங்கள் நிர்வாக ரீதியான வெற்றியின் நிபந்தனை அல்ல என்பதாகும். எனினும், அதனைத் தோற்கடிப்பது இலகுவானதல்ல. இதற்காக பொன்சேகாவிடம் இருப்பது ஜே.வி.பி.,யும் மங்கள சமரவீரவின் கட்சியுமே ஆகும்.

அரசியல் ராஜதந்திர ரீதியாக திறமையானவர். அரசியல் ரீதியான பிரசாரத்தில் ஜே.வி.பி. முதலிடத்தில் உள்ளது. மத்திய மாகாண சபைத் தேர்தலில் அரசியல் ஏற்பாட்டு ரீதியாக எஸ்.பி. என்ற சாதகமான விடயத்தை இணைத்துக் கொள்ள சரத் பொன்சேகாவால் முடியுமா?. சரத் பொன்சேகா குறைந்த புள்ளிகளைப் பெறகூடிய ஒரேவிடயம் அரசியலாகும்.

வார்த்தைகளைப் பயன்படுத்தவதிலும் மக்கள் முன் நடிப்பதிலும் ராஜபக்ஷ முன்னிலையில் இருக்கிறார். தாம் சிங்கள பௌத்த மக்களுக்காக செயற்படுவதாக சரத் பொன்சேகா குறிப்பிடும் போது ராஜபக்ஷ தமிழ் மக்களிடம் உரையாற்றுவார். எனினும், இவருக்கும் இருப்பது ஒரே கொள்கைகளாகும். அது சிங்கள பௌத்த அடிப்படை வாதமாகும்.

விடுதலைப் புலிகள் சந்தேக நபர்களை அழிக்க வேண்டும் என பொன்சேகா கூறும் போது அவர்களைப் புனர்வாழ்விற்கு உட்படுத்த வேண்டும் என ராஜபக்ஷ கூறுவார். இராணுவத்தில் கடும்போக்குக் கொண்ட இராணுவத் தளபதியாக தண்டனை வழங்கும் பண்பாட்டை கடைப்பிடித்து வந்ததன் மூலம் பொன்சேகா இராணுவ அதிகாரிகள் மத்தியில் நற்பெயரை சம்பாதிக்கவில்லை. இது அரசியலுக்கு ஒவ்வாது என்ற போதிலும் நாம் இன்னும் அரசியல்வாதி என்ற வகையில் பொன்சேகாவைக் காணவில்லை.
அதேபோல் அவரது பகிரங்கமான உரைகளைப் பெற்றதில்லை. யுத்தத்திற்குப் பின்னரான இலங்கையில் சமாதானம், ஜனநாயகம் மற்றும் அபிவிருத்தி நோக்கி இட்டுச் செல்வதில் ராஜபக்ஷவாகட்டும், பொன்சேகாவாகட்டும் அரசியல் ரீதியான வேலைத் திட்டத்தை முன்வைக்க வேண்டும். இந்த இருவர்களுக்கும் யுத்தத்தின் வீரர்கள் என்ற பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்தப் பதக்கங்களின் பின்னணியில் யுத்தத்தில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பாகவும் இருவரும் பதில் கூறவேண்டும் என்ற ஆவணங்களும் இருக்கின்றன என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

விக்டர் ஐவன் எழுதியதுபோல் யுத்தத்திற்குப் பின்னரான காலத்திற்குத் தேவையான மாற்றங்களை ஏற்படுத்துவதில் ராஜபக்ஷ தவறியுள்ளார். பொன்சேகாவிற்கு இந்த மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய வல்லமை இருக்கின்றதா? அல்லது ராஜபக்ஷ குடும்பம் கீழ் இறங்கி மக்கள் சேவகர்களாகத் தயாரா? அல்லது இந்த அரசியல் போராட்டம் என்பது இரண்டு பேருக்கு இடையிலான அதிகார ஆசையினால் மேற்கொள்ளப்படும் ஒன்று மாத்திரமா?

சுனந்த தேசப்பிரிய

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*