TamilSpy

பொழுது போக்கு இணையம்…

விடுதலைப்புலிகளின் தலைமை மறைந்துள்ள நாட்களில் நடக்கும் சோகங்கள் – கே.ராக்கி

annaஉலகத் தமிழரின் வரலாற்றில் தமிழரின் அடையாளம், தனித்துவத்தை தனியான வகையில் உலக சரித்திரத்தில் தடம்பதித்த வரலாறுகள் இன்றைய தமிழரின் வீரத்தின் அடையாளம் எனலாம்.

2009 க்கு பின்னிட்ட இன்று வரையான நாளுக்கும் புலிகளின் தலைமை பிரபாகரனின் வருகையை பார்க்காத மனிதர்களே இல்லை. ஏன் பார்ப்பதற்கு ஆசைப்படுகிறீர்கள் என வினவினால் விடையின்றி அவரைப் பார்த்தால் போதும் எனக் கூறும் பலரின் உள்ளக்குமுறல்கள்.. இப்படியாக தமிழனின் வரலாறு உருண்டு புரண்டு ஓடுகிறது.

தமிழரின் ஒற்றுமையின் அச்சாணியாகத் திகழ்ந்த பிரபாகரன் என்னும் நாமம் மெளனித்ததன் பிற்பாடு தமிழரின் ஒற்றுமையை பார்த்து இன்றைய நாட்களில் சந்தி சிரிக்கிறது.

முன்னைய காலங்களில் பல்வேறு கருத்துக்கள் பல்வேறு கொள்கைகளோடு இருந்தவர்கள் கூட மெளனமாகி பிரபாகரன் ஏதோ செய்து முடித்துவிட்டால் போதும் என்ற மனநிலையில் இருந்த பலரையும் இன்று அவரின் மெளனம் தனித் தனித் தலைவர்களாக தங்களை உருவகித்துக்கொண்டு நான்கு திசையிலும் கயிறிழுத்தலாக தமிழரின் ஒற்றுமை வேதனையான நிலையில் பயணிப்பது தமிழர்களின் தலைமையென தமிழர்கள் நினைக்கும் புலிகளின் தலைமைக்கு தகுமா?

இவ்விடத்தில் தான் புலிகளின் தலைமையின் மீது பல்வேறுபட்ட விமர்சனங்கள் இருந்தாலும் அவர் செய்த நற்காரியங்களை அநேகமானோர் பார்ப்பது என்பதை விட பார்க்கக் கூடாது என்னும் மனநிலையில் இருப்பதுதான் நிஜம்.

விடுதலைப்புலிகளின் இடைக்கால தன்னாட்சி அதிகார சபை ஜெனிவாவில் வரையப்பட்ட போது டக்ளஸ் தேவானந்தாவின் உறவு முறையான ஒருவரைக் கூட விடுதலைப் புலிகளின் தலைமை உள்வாங்கும்படியாக விடுதலைப் புலிகளின் மதியுரை அறிஞர் அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கு ஒரு செய்தி அனுப்பியிருந்ததுடன் அதனை அன்ரன் பாலசிங்கம் அவர்களும் ஏற்றுக்கொண்டு ஈபிடிபி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் உறவுமுறையான ஒருவரை அத்திட்ட வரைபு வரையும் காலங்களில் விடுதலைப் புலிகள் அமைப்பு உள்வாங்கியிருந்தது.

இதற்கு விடுதலைப் புலிகளின் தலைமை கூறிய காரணம் ஒன்றே ஒன்று. கருத்துக்கள் ரீதியில் நாங்கள் வேறுபட்டிருப்பினும் தமிழினத்தின் தொலைதூர பயணத்திற்கு அனைவரது கருத்துக்களும் பலம் சேர்க்கும்.

அந்த வகையிலேயே இவர் உள்வாங்கப்பட்டிருக்கின்றார் என விடுதலைப் புலிகளின் தலைமை குறிப்பிட்டதாக பின்னிட்ட நாட்களில் வெளியான விடுதலைப் புலிகள் எனும் பிரதான ஏட்டில் அதன் ஆசிரியரும் விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினருமான கா.வே.பாலகுமாரன் சுட்டிக்காட்டியிருந்தார்.

இப்படியாக விடுதலைப் புலிகளின் தலைமை ஒரு நன்மையைச் செய்தது எனச் சொன்னாலும் ஒரு தீமையைச் செய்ததென கூறினாலும் அது தமிழரின் நலனுக்காக என்பதனை எந்தவொரு தமிழனும் நினைக்கவேண்டும். மாறாக மறத்தல் கூடாது. இப்படியான தமிழரின் ஒரு கட்டமைப்புக்கு கீழ் வளர்க்கப்பட்ட தமிழர் நிலை இன்று பரிதாபமாக இருக்கின்றது.

போராட்டம் எழுச்சி கொண்டிருந்த காலகட்டத்தில் விடுதலைப் புலிகளின் குடும்பம் எனச் சொல்வதற்கு எத்தனை பேர் ஆசைப்பட்டனர். எத்தனைபேர் பெருமைப்பட்டனர். விடுதலைப் புலிகளின் தலைவரை எத்தனைபேர் மனங்களுக்குள்ளும் தாம் வாழும் மனைக்குள்ளும் வைத்து அலங்கரித்தனர்.

ஆனால் இன்றைய நடப்பு நாட்களின் புலம்பெயர்ந்த தேசங்களில் விடுதலைப் புலிகளின் தலைமையையும் போராளிகளையும் விடுதலைப் போராட்டத்தையும் எத்தனைபேர் உண்மையாய் உயிராய் மதிக்கின்றனர் என்றால் விடைகளுக்கு உங்கள் ஒவ்வொருவரினதும் மனட்சாட்சியே சாட்சியாகும்.

விடுதலைப் புலிகளின் தலைமையை ஒட்டுமொத்த உலகும் இலங்கை அரசும் பயங்கரவாதியென சித்தரித்தது. தாயக நிலம் இக்கட்டான நிலையில் இருந்த சூழ்நிலையிலும் விடுதலைப் புலிகளின் தலைவரின் படங்களை புலம்பெயர்ந்த தேசங்களிலுள்ள பலர் தமிழரின் தானைத் தலைவனென தம் வீட்டுச் சுவர்களில் மாட்டிவிட்டு அழகு பார்க்காத நாட்களே இல்லை.

2009க்குப் பின்னிட்ட காலப்பகுதிகளில் தலைவர், தேசியத் தலைவர் என்னும் சொற்பதங்கள் அனைத்தும் மருகி பிரபாகரனின் படத்தை எதற்காக வீட்டில் மாட்ட வேண்டும், எல்லாம் முடிந்துவிட்டது தானே, எங்கள் வெளிநாட்டு வாழ்க்கையும் வளமாகிவிட்டது,

பிரபாகரன் எதற்காக, போராட்டம் எதற்காக, சும்மா எல்லாமே வீண்சாவு என வீறாப்புக் கதைக்கும் ஒரு சிலரை எண்ணுகையில் சிங்களவர்களைவிட தமிழரின் போராட்டத்தில் யார் கொடியவர்கள் என்பதை நீங்களே உய்த்துணருங்கள்.

இப்படியாக விடுதலைப் புலிகளின் தலைமை விடுதலைப் போரடடம் முள்ளிவாய்க்காலில் மெளனிக்கப்படும்போது இப்படியானதொரு பாரிய சோகம் தமிழரால் தமிழருக்கு வருமா என கனவிலும் நினைத்திருக்க மாட்டார்.

காரணம் அவர் இருந்த நாட்களில் கணிசமான தமிழர்கள் உண்மையாய் நடக்காமல் விடுதலைப் புலிகளின் தலைமைக்கு முன்னாள் நடித்துள்ளனர் என்பது இன்று புலப்படுகிறது. பல விடயங்களைக் குறிப்பிடலாம்.

மாவீரர் தினம் என்பது ஒவ்வொரு தமிழனாலும் புனிதமாக அனுஸ்டிக்கப்படவேண்டிய ஒரு வீர புருஷர்களின் சரித்திரநாள். இதனை எத்தனைபேர் உள்ளத் துடிப்புடனும் உயிர் வலியுடனும் நினைக்கின்றார்கள் என்றால் அதற்குரிய பதில் உங்களிடமே, புலம்பெயர் தேசங்களில் மாவீரர்களை நினையாத நாடுகளே இல்லை.

அதனை ஏற்பாடு செய்யும் அமைப்புக்களும் போற்றுதற்குரியது பெறுமதிக்குரியவை. அதில் பங்குபெறும் எத்தனைபேர் உள்ளத் தூய்மையுடனும் இதயசுத்தியுடனும் எம் வீர புருஷர்களை நினைக்கிறீர்கள்.

நாங்கள் வாழும் நாடு குளிரானது, நாம் போகும் பயணம் சிரமமானது அதனால் மதுவையும் புகையையும் கைவிட முடியாது என்ன செய்வது எனப் புலம்பும் தமிழா உன்னால் ஒரு நாளை மண்ணின் விடுதலைக்காக உயிர்நீத்த அந்த தியாக சீலர்களுக்காக உத்தம புத்திரர்களுக்காக வீர மறவர்களுக்காக செலவிட முடியாதா….?

2009இன் பின் உன் வாழ்விலும் தமிழரின் சோகமெல்லாம் களியாட்டமாக மாறிவிட்டதா. நீவீர் மனதார நினைக்கும் தலைமை இந்தச் சம்பவங்களைக் கண்டிருப்பின் கண்னீர் அல்ல… இரத்தக் கண்ணீரே வடித்திருப்பான்.

காரணம் தமிழினப் போராட்டத்தில் மடிந்த ஒவ்வொரு மாவீரர்களையும் நினைந்து 26ம் திகதி தொடங்கி மாவீரர் நாள் 27ம் திகதி மாவீரர் சுடர் ஏற்றும்வரையில் தண்ணீர் உட்பட எந்தவொரு ஆகாரமும் உட்கொள்ளாது தன்னையே வருத்தி தன் தவப்புதல்வர்கலுக்கு சுடரேற்றும் புலிகளின் தலைமையின் வழித்தோன்றல்கள் என நினைக்கும் சந்ததியினர் எப்படி நடக்கவேண்டும்….?

ஒழுக்கம் , நேர்மை , கண்ணியம், கட்டுப்பாடுகளை மறந்துவிட்டாயா தமிழா…? நவ. 26 என சொன்னால் தமிழர்கள் நினைக்க மறந்தாலும் இலங்கையின் இராணுவச் சிப்பாய்கள் புலிகளின் தலைமையையும் மறுநாள் மாவீரர்களையும் நினைக்காமல் இருக்கமாட்டார்கள். இது அவர்களது பாசமல்ல…. மாறாக பிரபாகரன் என்னும் நாமத்தின் பயமே ஆகும்.

விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகளா… விடுதலைப் போராளிகளா என்னும் ஐயம் தென்னிலங்கை மற்றும் சர்வதேசத்திடம் இருப்பதில் தவறில்லை. ஏனெனச் சொன்னால் எந்தவொரு இனமும் தன் இனத்தின் ஆளுமையுடன் வலிமையாக வளர்வதை உலகம் ஒருபோதும் அங்கீகரிக்காது.

இது அவர்களின் மனநிலை. 2002ம் ஆண்டு 16 பாராளுமன்ற உறுப்பினர்களைத் தன்னகத்தே கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத்திலே விடுதலைப் புலிகளுக்கு அஞ்சலியும் சுடரும் ஏற்றியிருந்தார்கள் சம்பந்தன் தலைமையில்.

இன்று அவற்றைச் செய்யவேண்டுமெனக் கூறுவது, எதிர்பார்ப்பது காலச் சூழலுக்கு தகாதது என இருப்பினும் விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அவர்கள் உருவாக்கவில்லையென ஒரு சாரார் கூற முற்படுவது தமிழ் இனத்துக்கும் பல்லாயிரக்கணக்கான மாவீரர்களுக்கும் அவர்களை வழிநடாத்தும் புலிகளின் தலைமை பிரபாகரனுக்கும் இன்றுவரையான நாட்களில் நடக்கும் நடந்துகொண்டிருக்கும் நடக்கப்போகும் பாரிய சோகமென தமிழா நீ நினைத்ததுண்டா…..! அல்லது நினைத்தும் மறந்ததுண்டா…! அப்படியில்லையாயின் நினைக்க நினைக்கவேயில்லையா…..?

ஒவ்வொரு தமிழரின் வரலாறும் குருதியால் எழுதப்பட்டது. தமிழா நீ ஈழத்தில் இருந்தாலென்ன வெளிநாட்டில் இருந்தாலென்ன போராட்டத்தையும் அதன் தலைமையையும் ஒருபோதும் சோகத்தில் தள்ளிவிடாது. காரணம் பல கனவுகளுடன் காத்துக்கொண்டிருக்கும் விடுதலைப் புலிகளின் தலைமைக்கு அகவை 61 ஆனாலும் அந்த தனவானின் கனவுகள் 16 வயதில் தான் ஆரம்பித்த போராட்டத்தை இன்றும் விறுவிறுப்போடு நடாத்த நினைக்கும் அவனது உள்ளத் துடிப்புக்களுக்கு உன் சொல்லும் செயலும் சோகத்தை ஏற்படுத்தி விடக்கூடாது.

வரலாறுகள் மறைவான மனிதர்கள் மூலமாக சரித்திரங்கள் படைத்ததை யாரும் மறக்கமுடியாது.

கே.ராக்கி
[email protected]

Related Posts Plugin for WordPress, Blogger...

Your email address will not be published. Required fields are marked *

*