TamilSpy

பொழுது போக்கு இணையம்…

இடம் பெயர்ந்த அரசாங்கங்களும், நாடுகடந்த அரசும்; பாகம் 5

eelamஉலகத் தமிழர்களுடைய வரலாற்;றில் இரண்டு காலகட்டங்களை தமிழினத்தின் பொற்காலம் என குறிப்பிட முடியும் இந்தியத் தமிழர்களுடைய பொற்காலம் என்றால் அது கி.பி. 9 – கி.பி. 12 ஆம் நூற்றாண்டை உள்ளடக்கிய காலமாகும். ஆனால் ஈழத்தமிழர்களுடைய பொற்காலம் என்றால் அது 1990 தொடக்கம் 2008 வரையான 18 ஆண்டு காலமே. இவ் ஈழத்தமிழர்களுடைய பொற்காலத்தின் ஆரம்ப வாசல் 24.02.1990 இல் ஆரம்பமான வாகரை மாநாட்டுடன் ஆரம்பமாகின்றது என்றே சொல்லலாம்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கும், தன்னை அரசியல் மயப்படுத்தும் நடவடிக்கையாக மக்கள் முன்னணியை ஆரம்பித்து அதன் அங்குரார்ப்பண நிகழ்வாகவே இவ் மாநாடு கூட்டப்பட்டு மூத்த போராளிகளும், தமிழறிஞர்களும் கலந்து கொண்டு அடிமட்ட கிராம ரீதியான அரசியல்க் கட்சியை விரிவு படுத்தும் செயற்திட்டங்களை ஆய்வு செய்யும் நோக்கமாகவே இம்மாநாடு கூட்டப்பட்;டது. இம் மாநாட்டின் எதிர்மறை விளைவுதான் வரதராஜப் பொருமாள் அவசரப்பட்டு “ஈழமக்காட்சிக் குடியரசு” என்ற தன்னிச்கையான சுதந்திரப் பிரகடணத்தை வெளியிடவும் வழிவகுத்தது.

வாகரை மாநாட்டுடன் தமிழீழ விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணியின் செயற்திட்டங்கள் அடிமக்கள் மட்டத்தில் முழுவீச்சுடன் ஆரம்பமாகி வடக்கு – கிழக்கு எங்கும் அது மிகப்பலம் பொருந்திய ஒரு கட்சியாக மிகக் குறுகிய நாட்களுக்குள் தன்னை நிலை நிறுத்திக் கொண்டது. ஆனால் பிரேமதாசா அரசுடன் ஏற்படுத்திக் கொண்ட சமாதான உடன்படிக்கையின் ஆயுள் மிக அற்பமாகவே இருந்ததனால் 19990 ஆம் ஆண்டின் இறுதியில் யுத்தம் கிழக்கிலேயே உதித்தது.

கிழக்கிலே யுத்தம் ஆரம்பமாகி வட – கிழக்கு எங்கும் பரவினாலும் கூட கிழக்கின் கட்டுப்பாட்டின் பெரும் பகுதியை புலிகள் இயக்கம் இழந்தாலும் வடக்கின் பெரும் பகுதி முழுவதும் விடுதலைப் புலிகளின் இறுக்கமான கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. வடக்கின் பெரும்பகுதியை நிர்வகிக்கின்ற பொறுப்பு புலிகளின் கையில் வந்ததனால் சமூகவழயல்ப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு போராளிகளுக்கு ஏற்பட்ட சிரமங்களை நீங்க மக்கள் முன்னணியின் அடிமட்ட கிராமியக் குழுக்கள் இணக்க மன்றங்களாக வடிவம் பெற்று சமூகவியல்ப் பிரச்சனைகளின் நீதி நிர்வாகத்தை பரிவாலிக்கத் தொடங்கிற்று. இதுதான் புதிய அரசொன்றின் அறிமுகமென்றே சொல்லாம்.

நடைமுறையில் சமூகவியல்ப் பிரச்சனைகளை தீர்ப்பது இலகுவானதொன்றல்ல. நீதிபரிபாலணம் அடிமட்ட மக்களி மத்தியிலிருந்து எடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டு நடைமுறைப்படுத்துவது எவ்வளவு சிரமமானது என்பதைகிராம மட்டத்தில் உருவாக்கப்பட்ட இணக்க மன்றங்களின் செயற்பாடுகளும், அவற்றின் விளைவுகளிலுமிருந்து கற்றுக் கொண்ட பாடங்களை கருத்திற் கொண்டு நீதி நிர்வாகத்தை நடைமுறைப்படுத்த நிறுவன மயப்படுத்தப்பட்ட கட்டமைப்புக்கள் மிக அத்தியாவசியம். என்பதனை உணர்ந்து தமிழீழக் காவல்த்துறையும், தமிழீழ நீதிமன்றங்களும் நிறுவப்பட்டு நீதிபரிபாலணம் மிகச்சிற்ப்பாக பரிபாலிக்கப்பட்டது.

சுதந்திரத்திற்காகப் போராடுகின்ற ஓர் இனம். தான் சுதந்திரம் அடைய முன்னரே சுதந்திர நாட்டுக்குரிய நடைமுறை நீதி நிர்வாகம், திறைசேரி, சுங்கத்தீர்வை, வங்கி, பொது நிர்வாகம், என பல்துறை நிறுவன் அமைப்புக்களுடாக ஒரு அரசுக்குரிய சட்டம், நீதி, நிர்வாகம் ஆகிய மூன்று துறைகளும் ஆற்றுகின்ற அரசுப் பணிகளை பல்துறை நிறுவனங்கள் ஊடாக ஒன்றை ஒன்று கட்டுப்படுத்தாமலும் அதே நேரம் ஒன்றில் ஒன்று தங்கியிருக்காமலும், ஒன்றிலிருந்து ஒன்று பிரியாமலும் தமிழ்த் தேசியம் என்ற அடித்தளத்திலிருந்து கட்டி எழுப்பப்பட்ட தமிழீழ நடைமுறை அரசின் கட்டுமானங்களாக வளர்த்தெடுக்கப்பட்டது

போரினால் சிதைந்துகிடந்த தாயகத்தின் பொருளாதாரத்தை வளப்படுத்த, அதன் உற்பத்தித் திறனை அதிகரிக்க. போரினால் நலிந்து போன விவசாயத்தை ஊக்குவிக்க உருவாக்கப்பட்ட பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம் புதிய தொழில்த் துறைகளை ஊக்குவித்து வேலையற்றோரின் பிரச்சனைகளுக்கு தீர்வுகண்டு தமிழ்ச்சமூகம் எதிர் நோக்கிய பிரச்சனைகள் யாவற்றையும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் எந்த ஒரு நாட்டினுடைய உதவியுமின்றி தனித்து நின்று தனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள தாயகப்பரப்பில் வாழ்ந்த மக்கள் யாவருக்கும் உலகெங்கிலும் காணமுடியாத மிகச்சிறப்பான ஆட்சியொன்றை பரிபாலித்ததென்றால் மிகையில்லை.

ஏனெனில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசத்தில் பிச்சைக்காரர்களை காணவே முடியாது. அவ்வாறே லஞ்சம், ஊழல், களவு, கொலை, கற்பழிப்பு போன்ற குற்றச் செயல்கள் எதுவுமே இடம்பெற முடியாத அளவிற்கு மிகச்சிறப்பான அதே நேரம் மிகக்கடுமையான சட்டதிட்டங்களை உருவாக்கி ஒரு நேர்த்தியான உலக மானிட நேயத்தவர் விரும்பும் ஓர் ஆட்சியொழுங்கினை வடக்கில் நிறுவி. நிர்வகித்தனர்.

கொழும்பிலிருந்து ஏ9 வீதிவழியே யாழ் செல்லும் ஒருவர் வவுனியாவைக் கடந்தால் வன்னிநிலம் அவர்களை வரவேற்கும். வன்னியுள் நுழைந்தால் ஓர் புது உலகத்தை காணமுடியும். அதுதான் என்னவோ 2001 சமாதான உடன்படிக்கையின் பின்னர். வன்னிக்குச் சென்ற நோர்வேயின் சமாதானத் தூதுவர் எரிக் சொல்கைம் “இரண்டாம் உலகப் போரின் பின்னர் ஐரோப்பா மீண்டெழ நீண்ட காலம் எடுத்தது. ஆனால் வன்னியோ மிகக் குறுகிய காலத்தில் இவ்வளவு தூரம் வளர்ச்சியுற்றிருக்கிறது. தமிழ்மக்களின் கடின உழைப்பும், விடா முயற்சியையும், ஒழுக்கமும் என்னைப் பெருமிதம் கொள்ளச் செய்கிறது” எனக் குறிப்பிட்டதிலிருந்து உலகம் வன்னியை எவ்வாறு கணித்து வைத்திருந்தது என்பதை உணர முடியும்.

கடந்த 18 வருடங்களுக்குள் வன்னியை மிகச்சிறப்பான ஆட்சியொழுங்குக்குள் கொண்டு வந்து அங்கீகரிக்கப்படாத ஆனால் நடைமுறையரசொன்றை நிறுவி தரை, கடல், வான் படைகளையும் உருவாக்கி சட்டம் நீதி, நிர்வாகத் துறைகளை தன்னகத்தே கொண்டு ஒரு தனி நாட்டுக்குரிய அத்தனை தகுதிகளையும் தன்னக்தே கொண்டிருந்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் விரும்பியிருந்தால் சமாதான உடன்படிக்கை முறிவடைந்த தருணம் ஒரு தன்னிச்சையான தமிழீழ சுதந்திர பிரகடணத்தை செய்து உலகத் தமிழர்களின் ஆதரவோடு சர்வதேச அங்கீகாரத்தை வேண்டி ஒரு ராஜரீக நகர்வுகளைச் செய்திருக்க முடியும். இவ்வாறுதான் ஒரு சுதந்திரப் பிரகடணத்தை புலிகள் இயக்கம் வெளியிடுவார்கள் என சிங்கள பேரினவாதிகளும், ஏன் உலகமுமே எதிர்பார்த்தது.

ஆனால் வரதராஜப் பெருமாள் போன்று ஒரு பிரகடணத்தைச் செய்ய விடுதலைப் புலிகள் விரும்பவில்லை. மாறிவரும் சர்வதேச அரசியல் அரங்;கில் நிகழ்ந்துவரும் அரசியல் ஓட்டத்திற்கு ஏற்றவகையில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை நகர்த்திச் சென்று சர்வதேச மயப்படுத்தி உலகெங்கும் பரந்து வாழும் ஈழத்தமிழர்களின் வெகுஜன எழுச்சியின் ஊடாக சர்வதேசப் பரிமானத்தைத் தொட்டு அதே வேளை களத்திலும் கணிசமான தாயகத்தை மீட்டு சம நேரத்தில் சில நாடுகளின் அங்கீகாரத்துடன் சுதந்திரப் பிரகடணத்தை செய்வதுதான் தமிழர் இறைமையை மீட்பதற்கான சந்தர்ப்பம் என புலிகள் இயக்கம் வரித்துக் கொண்ட கொள்கைதான் தமிழீழப் பிரகடணத்தை மேற்கொள்ளாமல் தவிர்த்ததற்கான காரணம் எனக் கொள்ளலாம்.

ஈழத் தமிழர்களின் வரலாற்றிலும் சரி தமிழீழ விடுதலைப் போராட்ட நீண்ட வரலாற்றுப் பயணத்தில் ஒரு பொற்காலமாக வரலாற்றுப் பதிவாகிவிட்ட கடந்த 18 ஆண்டுகால வரலாற்று நிகழ்வுகளை சுமந்துகொண்டு பயணிக்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் கதாநாயகர்களான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம். தமிழீழம் தானே மலர வேண்டும். அதற்கான காலம் கனிய வேண்டும். எனக் காத்திருந்த காலங்கள் மனதைக் கனக்க கடந்த மே மாதம் 18 ஆம் திகதியுடன் வன்னியில் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஏற்பட்ட மிகப்பெரிய இராணுவப் பின்னடைவு தமிழீழ நடைமுறை அரசை வீழ்ச்சியுறச் செய்துவிட்டது.

இவ்வாறு தாயகத்தில் நிறுவப்பட்டிருந்த நடைமுறை அரசு வீழ்ச்சியுற்றதும் தாயகப் பரப்பு முழுவதும் சிங்கள இறையான்மைக்கு உட்பட்ட கையோடு வன்னியிலிருந்து வெளியேறிய விடுதலைப் புலிகளின் சிரேஸ்ர உறுப்பினர்கள் சிலரை உள்ளடக்கிய ஒரு இடம்பெயர்ந்த அரசு ஒன்றை வெளிநாடுகளில் உருவாக்கியிருக்க முடியும். அல்லது அவ்வாறான அரசை உருவாக்குவதற்கான முயற்சிளில் ஈடுபட்டிருக்கலாம் ஆனால் நடைமுறை உலகில் இடம்பெயர்ந்த அரசுகளின் செயற்பாடு , அவற்றின் விளைவுகளைக் கருத்தில் கொண்டு தமிழர் சுய நிர்ணயத்திற்கான போராட்டத்தில் இடம்பெயர்ந்த அரசியல் தத்துவத்திற்கு மாற்றீடாக. அதே நேரம் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கக் கூடியதான ஒரு புதிய அரசியல்த் தத்துவத்தை புலம்பெயர்ந்து வாழும் தமிழ் அரசியலாளர்கள் ஏன் அறிமுகப்படுத்துகிறார்கள் அதன் நடைமுறைச் சாதகத் தன்மை எவ்வகைப்பட்டது என்பது பற்றித் தொடர்ந்து வரும்.
இடம்பெயர்ந்த அரசாங்கங்களும், நாடுகடந்த தமிழீழ அரசும்,

வன்னியன்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*