TamilSpy

பொழுது போக்கு இணையம்…

உண்மைக் காதலை கண்டுபிடிக்க உதவும் செல்ல நாய்கள்

loveநீங்கள் காதலி, காதலனை தேடிக்கொண்டிருந்தாலோ அல்லது புதிய நண்பர்களை பெற வேண்டும் என்றாலோ முதலில் நாய் ஒன்றை வளர்க்கத் தொடங்குகள் என்று சொல்கிறது இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று.

இங்கிலாந்தை சேர்ந்த 2 ஆயிரம் பேரிடம் நடத்திய ஆய்வில் விலங்கு மீது அன்பு செலுத்துபவர்கள் மற்றவர்களைவிட கவர்ச்சியாக தோன்றுவதாக 46 சதவீதம் பேர் தெரிவித்துள்ளார்கள். 49 பெண்கள் தங்களுக்கு செல்ல விலங்குகள் வைத்திருக்கும் ஆண்களிடம் அதிக ஈர்ப்பு ஏற்படுவதாக கூறியுள்ளனர். இது ஆண்களுக்கு 40 சதவீதமாக உள்ளது.

சுமார் 32 சதவீத பேர் செல்ல நாய் வைத்திருப்பவர்கள் விசுவாசம் கருணை மற்றும் கனிவுடன் இருப்பார்கள் என நம்புவதாக தெரிவித்துள்ளார்கள். 46 சதவீதம் பேர் நாயுடன் நடை பயிற்சி செய்யும்போது தான் புதிய நண்பர்களை சந்திக்க முடியும் என தெரிவித்துள்ளார்கள்.

இந்த சர்வே சொல்ல வரும் நீதி என்னவென்றால் முதலில் அழகான நாயை வாங்கி அதை வாக்கிங் கூட்டி செல்லுங்கள் என்பது தான்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: World News

Your email address will not be published. Required fields are marked *

*