TamilSpy

பொழுது போக்கு இணையம்…

நான் எப்போதும் விஜய்டிவியின் செல்லம்தான், டிடி அறிவிப்பு

ddவிஜய் டிவியிலிருந்து நிகழ்ச்சி தொகுப்பாளினி டி.டி. வெளியேறிவிட்டதாக பல வதந்திகள் வெளிவந்தன. அவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளிவைத்துள்ளார் டி.டி.

டிடி என்கிற திவ்யதர்ஷினி சின்னத்திரையில் அதிகப்படியான ரசிகர்களைக் கொண்டவர். விஜய் டிவியில் காஃபி வித் டிடி என்ற நிகழ்சிக்கு தொகுப்பாளர். அவரின் நிகழ்ச்சிகளில் கலகல கலாய்ப்பும், டைமிங் காமெடிக்கும் பஞ்சமே இருக்காது. சமீபத்தில் விஜய் டிவியின் விருது வழங்கும் விழாவில் டிடியும், கோபிநாத்தும் இணைந்து நிகழ்சியை தொகுத்து வழங்கினர். அந்த நிகழ்சியில் டிடி சொதப்பியதாக கூறப்படுகிறது.

இதற்காக அவரை விஜய்டிவியிலிருந்து வெளியேற்றிவிட்டதாகவும், இவரே ராஜினாமா செய்துவிட்டதாகவும் வதந்திகள் கிளம்பின. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கடந்த ஞாயிறு அன்று “ எங்கள் வீட்டுச் செல்லம் “ என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்பியது விஜய்டிவி. ‘காபி வித் டிடி நிகழ்ச்சிக்கு ஒரு இடைவெளி தேவைப்படுவதால் சில வாரங்கள் அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகவில்லை. மற்றபடி நான் விஜய் டிவியை விட்டுப் போகவில்லை. இந்த டிவியின் செல்லம் நான்மட்டும் தான்’ என்று அந்த நிகழ்ச்சியில் பேட்டியளித்தார் டிடி. இதன் மூலம் தன்னைப்பற்றிய வதந்திகளுக்கு ஃபுல் ஸ்டாப் வைத்தார் டி.டி.

தொடர்ந்து “ எங்க வீட்டுப் பிள்ளை சிவகார்த்திகேயன் போல எங்க வீட்டுச் செல்லம் டிடி என்று ஒருவர் ட்விட் செய்ததை டிடி ரீட்விட் செய்துள்ளார். மேலும் விஜய் டிவியின் தலைமை நிர்வாகி கே. ஸ்ரீராம் ட்விட்டரில், “ நம்ம வீட்டுச் செல்லம் நிகழ்ச்சி, டிடி பற்றிய வதந்திகளுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்திருக்கும் என்று நம்புகிறேன். டிடி சிறந்த தொகுப்பாளினி” என்று ட்விட் செய்தார். அதற்கு டிடியும் நன்றி தெரிவித்துள்ளார்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Chinnathirai

Your email address will not be published. Required fields are marked *

*