TamilSpy

பொழுது போக்கு இணையம்…

இன்றைய ராசி பலன் 30-06-2015 | Raasi Palan 30-06-2015

raasipalanமேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் வெளுத்த தெல்லாம் பாலாக நினைத்து சிலரிடம் பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள். கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். உத்யோகத்தில் மறதியால் பிரச்னைகள் வந்து நீங்கும். போராட்டமான நாள்.

ரிஷபம்: தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்குவீர்கள். பிள்ளை களால் மதிப்புக் கூடும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோ கத்தில் அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். நன்மை கிட்டும் நாள்.

மிதுனம்: குடும்பத்தாரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர் கள். அதிகாரப் பதவி யில் இருப்பவர்கள் அறிமுக மாவார்கள். பழைய சிக்கல்கள் தீரும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். திடீர் யோகம் கிட்டும் நாள்.

கடகம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் வருங் காலம் குறித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். பிரார்த் தனைகளை குடும்பத்தினருடன் சென்று நிறைவேற்றுவீர்கள். வியாபாரம் தழைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர் களின் ஒத்துழைப்பால் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதுமை படைக்கும் நாள்.

சிம்மம்: எதிர்பார்த்தவை களில் சில தள்ளிப் போனா லும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். எதிர்பாராத உதவி கிட்டும் நாள்.

கன்னி: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்றுக் கொள்வார்கள். சாதிக்கும் நாள்.

துலாம்: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களை சாதிப்பீர்கள். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புதிய பாதை தெரியும் நாள்.

விருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் பல வேலைகளையும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக் காதீர்கள். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. அலைச்சல் அதிகரிக்கும் நாள்.

தனுசு: மறைமுக விமர்சனங்களும், தாழ்வுமனப் பான்மையும் வந்துச் செல்லும். சகோதர வகை யில் பிணக்குகள் வரும். லேசாக தலை வலிக்கும். அசைவ, கார உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் புது முடிவுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் மறைமுக தொந்தரவுகள் வந்து நீங்கும். போராடி வெல்லும் நாள்.

மகரம்: குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். நம்பிக்கைக்குரியவரை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர் கள். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். சிறப்பான நாள்.

கும்பம்: சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். மதிப்புக் கூடும் நாள்.

மீனம்: உணர்ச்சிப் பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமா கப் பேசுவீர்கள், செயல் படுவீர்கள். பிள்ளைகளின் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் தருவீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சாதிக்கும் நாள்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Raasi Palan

Your email address will not be published. Required fields are marked *

*