TamilSpy

பொழுது போக்கு இணையம்…

பேஸ்புக் மோகத்தால் வெள்ளவத்தை மாணவியின் அவலம்…?

wellaபேஸ்புக் மற்றும் சமூக வலைதளங்கள் ஊடாக மாணவர்கள் எவ்வாறு சீரழிகிறார்கள் என்பதற்கு உதாரணமாகக் கூறக்கூடிய சம்பவமொன்று எமது நாட்டிலேயே இடம்பெற்றுள்ளது.

வெள்ளவத்தை பிரதேசத்தில் சர்வதேச பாடசாலையொன்றில் மாணவியொருவர் 10 கையடக்கத்தொலைபேசிகள் மூலம் பேஸ்புக் ஊடாக நண்பர்களோடு தொடர்புகளை ஏற்படுத்தி வந்துள்ளார்.

அவர் ஆபாசப் படங்களை நண்பர்களிடையே பகிர்ந்து வந்துள்ளார். இவ்விடயம் ஒருவாறு அவரது பெற்றோர்களுக்கு தெரியவந்துள்ளது.

பின்னர் அவர்கள் தமது மகளை அடித்துக் கண்டித்துள்ளனர். இதனையடுத்து அம் மாணவி தனது பெற்றோர் தன்னை தாக்கியதாக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து இப்பிரச்சினைக்கு தீர்வுகாண பெற்றோரை எதிர்வரும் 30 ஆம் திகதி நீதிமன்றத்துக்கு வருமாறு பொலிஸார் அழைப்பு விடுத்துள்ளனர்.

குறித்த சிறுமி பேஸ்புக்கிற்கு நீண்டகாலமாக அடிமையானவர் என தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு முன்னர் ஒரு தடவை இவரது பேஸ்புக் மோகத்தினை இல்லாதொழிக்கும் நோக்கில் அவரை தனது பாட்டனாரின் வீட்டுக்கு பெற்றோர் அனுப்பியுள்ள போதிலும், அங்கும் ஒருவாறு இணையத்தினை பெற்றுக்கொண்டு பேஸ்புக் உபயோகித்து மாட்டிக்கொண்ட தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Ceylon News

Your email address will not be published. Required fields are marked *

*