TamilSpy

பொழுது போக்கு இணையம்…

வெற்றி பெற்ற ’புலி’ டீசர்! வருத்தத்தில் ரசிகர்கள்!

puliவிஜய்யின் ’புலி’ பட டீசர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பையும் பெற்றிருக்கிறது. எப்போதும் ஒரே மாதிரி கெட்-அப்பில் நடிக்கிறார் என்ற விமர்சனத்தை போக்கும் விதத்தில் ராஜா காலத்து கதையில் விஜய் நடிக்கிறார் என்ற எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்கள், டீசரில் விஜய்யின் தோற்றத்தைக் கண்டு ஏமாந்து போயிருக்கிறார்கள். அதே குறுந்தாடி, மிலிட்டரி கட்டிங் என துப்பாக்கி, கத்தி கெட்-அப்பில் இருக்கிறார் விஜய்.

மற்றபடி ஆக்‌ஷன், டான்ஸ், ரொமான்ஸ் என வழக்கமான விஜய் படங்களுக்குண்டான அனைத்தும் இருக்கிறதாம் புலி திரைப்படத்தில். மன்னர் காலத்து கதை என்பதால் கத்தி சண்டைகளே அதிகமாம் படத்தில். எனவே சாங்லின் என்ற ஸ்டண்ட் மாஸ்டரிடம் பிரத்யேகமாக கத்தி சண்டையை கற்றுக்கொண்டாராம் விஜய். மேலும் ஸ்ருதி ஹாஸனுக்கும், ஹன்ஸிகாவுக்கும் சரிசமமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கிறார். 28 ஆண்டுகளுக்குப் பிறகு நேரடித் தமிழ்ப் படத்தில் நடிக்கும் ஸ்ரீதேவிக்கு இந்த திரைப்படம் புதிய பரிமாணத்தை அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை. சர்வாதிகார ஆட்சி செய்யும் கொடுங்கோல் ராணியாக நடித்திருக்கிறார் ஸ்ரீதேவி.

புலி டீசர் ரசிகர்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சி கொடுத்தாலும், பிறந்தநாள் அன்று விஜய் எந்தவித கொண்டாட்டத்திலும் ஈடுபடாமல் சுவிட்சர்லாந்து சென்றுவிட்டது வருத்தம் தான்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Cinema, Video

Your email address will not be published. Required fields are marked *

*