TamilSpy

பொழுது போக்கு இணையம்…

பெற்றோரிற்கு தெரியாமல் காதல், கள்ளஉறவு: கர்ப்பிணியான 17 வயது யுவதி!

sex17 வயதான யுவதியொருவரை அச்சுறுத்தி முச்சக்கரவண்டியில் ஏற்றிச் சென்று வல்லுறவிற்குள்ளாக்கி கர்ப்பமடைய செய்த 38 வயது காமுகனை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மூன்று பிள்ளைகளின் தந்தையே இந்த பாதகத்தை புரிந்துள்ளான். இந்த சம்பவம் ஏறாவூரில் நடந்துள்ளது.

மட்டக்களப்பு உறுகாமம் கிராமத்தை பூர்வீகமாகவும், எறாவூர் முஹாஜிரின் கிராமத்தை வசிப்பிடமாகவும் கொண்ட பேக்கரி உணவுப்பண்ட விற்பனையாளனான காமுகனும், அவனிற்கு உதவிய முச்சக்கரவண்டி சாரதியும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி இவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

இந்த யுவதி கடந்த ஏப்ரல் மாதம் கடத்தப்பட்டார். தற்பொழுது ஏழு மாத கர்ப்பிணியாக உள்ளார் என வைத்தியப்பரிசோதனை அறிக்கைகள் கூறுகின்றன.

இந்த யுவதியின் தந்தைக்கு சொந்தமான ஹோட்டலில் காமுகனின் மூத்தசகோதரனின் மகன் கூலித்தொழிலாளியாக பணியாற்றியுள்ளார். பின்னர் விலகிச் சென்றுவிட்டார். மீண்டும் பணிக்கமர்த்துவதற்காக கைதான சித்தப்பாவுடன் சில தடவைகள் முதலாளியின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்படி வந்த சமயத்தில் முதலாளியின் மகளுடன் பழக்கம் ஆரம்பித்துள்ளது. பின்னர், யுவதியின் பெற்றோர் இருவரும் ஹோட்டலுக்கு சென்ற சமயங்களில் வீட்டுக்கு வந்து யுவதியுடன் நெருங்கிப்பழகி, இருவரும் கைத்தொலைபேசி இலக்கங்களை பரிமாறியுள்ளனர். அந்த சமயங்களில் கைத்தொலைபேசியில் யுவதிக்கு நீலப்படங்களையும் காண்பித்துள்ளார்.

சில நாட்களின் பின்னர் யுவதியுடன் உடலுறவு கொண்டு அதனை வீடியோவாக படம்பிடித்துள்ளார். அதன் பின் வந்தநாட்களில், யுவதி அவனின் நடவடிக்கைகளிற்கு இடம்கொடுக்கவில்லை. எனினும், கைததொலைபேசியில் உள்ள வீடியோவை காட்டி யுவதியை அச்சுறுத்தி தொடர்ந்து உடலுறவு கொண்டுள்ளான். இதனால் யுவதி கர்ப்பமானார்.

கர்ப்பந்தரித்து ஐந்து மாதங்கள் கடந்த பின்னர், கர்ப்பத்தை கலைக்க தன்னுடன் வருமாறு முச்சக்கரவண்டியில் அழைத்து சென்று கண்டியின் இரண்டு இடங்களில் இருவரும் தங்கியுள்ளனர். வீட்டிலிருந்து வரும்போது ஐம்பதாயிரம் பணம் மற்றும் 15 பவுண் நகைகளை கொண்டுவருமாறு காமுகன் கூறியதற்கிணங்க, யுவதியும் வீட்டிலிருந்து அவற்றை எடுத்து சென்றார். கண்டியில் தங்கியிருந்த சமயத்தில் நகைகளை விற்று பணத்தை பெற்றுள்ளார்.

கண்டியில் தங்கியிருந்த சமயத்தில் யுவதியை அறையொன்றிற்குள் அடைத்து வைத்து துன்புறுத்தப்பட்டுள்ளார்.

இந்த கடத்தல் சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிசாரிடம் யுவதியின் தந்தை முறைப்பாடு பதிவு செய்திருந்தார். இதனை அறிந்த காமுகன் பல்வேறு தொலைபேசி இலக்கங்களிலிருந்து யுவதியின் தந்தையை தொடர்பு கொண்டு, முறைப்பாட்டை வாபஸ் பெற்றால் மாத்திரமே யுவதியை ஒப்படைக்க முடியும் என அச்சுறுத்தியுள்ளான்.

எனினும் யுவதியின் தந்தை தந்திரமாக பேசி இருவரையும் வரவழைத்துள்ளார். பஸ்ஸில் யுவதியுடன் வந்த காமுகன், திடீரென இடைநடுவில் இறங்கி தலைமறைவாகிவிட்டான்.

இதனையடுத்து அவனது மனைவியின் வீட்டிற்கு சென்ற பொலிசார், அங்கு வைத்து அவனை மடக்கிப்பிடித்தனர்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Ceylon News

Your email address will not be published. Required fields are marked *

*