TamilSpy

பொழுது போக்கு இணையம்…

மேகி நூடுல்ஸ் விவகாரம், அரசுதான் முழு பொறுப்பும் ஏற்க வேண்டும்: ஆர்யா அதிரடி

aryaஇந்தியாவில் மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு டெல்லி, உத்தரகாண்ட், குஜராத், கேரளா ஆகிய மாநிலங்களில் அதிரடி தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் நெஸ்லே நிறுவனம் தயாரித்து விற்பனை செய்யும் மேகி நூடுல்ஸ் துரித உணவுப் பொருளில் ‘மோனோ சோடியம்’ என்ற ரசாயன உப்பு அதிக அளவு சேர்க்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனால் ஒவ்வொரு மாநிலமும் மேகி நூடுல்ஸ் மாதிரியை சோதனைக்கு அனுப்பி வருகிறது.

தமிழ்நாடு, கோவா, ஹரியானா, கர்நாடகா மாநிலங்களிலும் மேகி நூடுல்ஸ் மாதிரியை சோதனைக்கு உட்படுத்த உள்ளனர். தமிழகத்தில் மேகி நூடுல்ஸ் மீது தடை விதிப்பது பற்றி எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

டெல்லியில் மேகி நூடுல்ஸுக்கு 15 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.மேலும், ராணுவத்தினர் யாரும் மேகி நூடுல்ஸ் உண்ணக்கூடாது என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்று இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயம் ஆணையம் அவசரமாக இன்று கூடியது.

இந்த கூட்டம் முடிந்த பின்னர், துரித உணவுகளை பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யும் அனைத்து நிறுவனங்களும் உணவு மாதிரிகளை ஆய்வு கூடங்களில் பரிசோதனை செய்து ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று அதிரடி உத்தரவிட்டுள்ளது.

தற்போது துரித உணவுகளை பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யும் அனைத்து நிறுவனங்களுக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

மேகி நூடுல்ஸ் விளம்பரங்களில் நடித்த அமிதாப்பச்சன், மாதுரி தீட்சித், பிரீத்தி ஜிந்தா ஆகியோர் மீது ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், தேவைப்பட்டால் அமிதாப்பச்சன் உள்ளிட்ட ஐந்து பேரையும், கைது செய்யலாம் என்று முஸாபர்பூர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து நடிகர் ஆர்யா கூறுகையில், இறக்குமதியாகும் உணவு பண்டங்கள் மற்றும் உள்நாட்டு உணவு பொருட்கள் அனைத்தும் இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய அமைப்பின் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.

அந்த அமைப்பு சான்று அளித்த பிறகுதான் பொருட்கள் சந்தைப்படுத்தப்படுகின்றன.

உணவு வகைகள் நுகர்வோர் சாப்பிட உகந்தது என அரசு சான்று அளித்த பிறகே அவற்றில் நாங்கள் நடிக்கிறோம்.

விளம்பரங்களில் நடிப்பதற்காக எங்களுக்கு தரப்படும் சம்பளத்துக்கு வருமான வரியும் கட்டி விடுகிறோம்.

மேலும், உணவு பொருட்களின் தரம் பற்றிய பிரச்சினையில் எங்களுக்கு எந்த சம்பந்தமும் கிடையாது என்றும் தரமான உணவு என சான்று அளித்த அரசுதான் முழு பொறுப்பும் ஏற்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: India News

Your email address will not be published. Required fields are marked *

*