TamilSpy

பொழுது போக்கு இணையம்…

இன்றைய ராசி பலன் 31-05-2015

raasipalanமேஷம்: பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வாகனத்தை சரி செய்வீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார்கள். வியாபாரத்தில் சில சூட்சு மங்களை புரிந்துக் கொள்வீர்கள். எதிர் பாராத நன்மை கிட்டும் நாள்.

ரிஷபம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வு களுக்கு மதிப்பளிப்பீர்கள். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வெளிவட்டாரத்தில் புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

மிதுனம்: இன்றையதினம் புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். ஆடம்பர செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்கு கிடைக்கும். புதுமை படைக்கும் நாள்.

கடகம்: பால்ய நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். வெளியூர் பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தி யாகும் நாள்.

சிம்மம்: துணிச்சலாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். பூர்வீக சொத்துப் பிரச்னையில் நல்ல தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.

கன்னி: கணவன்-மனைவிக் குள் நெருக்கம் உண்டாகும். தோற்ற பொலிவுக் கூடும். பாதியில் நின்ற வேலைகள் முடிவடையும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

துலாம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு, தாழ்வு மனப்பான்மை வந்து செல்லும். தோற்றுவிடுவோமோ என்ற ஒரு அவநம்பிக்கையும் வந்து போகும். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். பதறாமல் பக்குவமாக செயல்பட வேண்டிய நாள்.

விருச்சிகம்: குடும்பத்தை பற்றிய கவலைகள் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். சகோதர வகையில் ஆரோக்யமான விவாதங்கள் வரக்கூடும். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். போராடி வெல்லும் நாள்.

தனுசு: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய் வீர்கள். புது வேலைக் கிடைக்கும். திடீரென்று அறிமுகமாகு பவரால் பயனடைவீர்கள். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். வியாபாரத் தில் வாடிக்கையாளர்களின் ரசனையை புரிந்து கொள்வீர்கள். இனிமையான நாள்.

மகரம்: உங்களின் அணுகு முறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றி யமைத்து கொள்வீர்கள். சகோதரங்களால் பயனடை வீர்கள். நம்பிக்கைக்குரியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். புகழ், கௌரவம் உயரும் நாள்.

கும்பம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். உடல் நலம் சீராகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். புதிய அத்தியாயம் தொடங்கும் நாள்.

மீனம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் பழைய பிரச்னை களை நினைத்து பார்த்து கோபப்பட்டு கொண்டிருக்கா தீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களிடம் தொழில் ரகசியங்களை சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Raasi Palan

Your email address will not be published. Required fields are marked *

*